மகேந்திர சிங் தோனி இந்தியாவில் பெரும்பாலானவர்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர். கேப்டன் கூல் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படுபவர் . தோனி திறமையான விளையாட்டு வீரர் மட்டுமல்ல தன்னுடைய பணத்தை திறமையாக முதலீடு செய்து பெரிய செல்வத்தை உருவாக்குவதிலும் வல்லவராக மாறியிருக்கிறார்.
சத்தமே இல்லாமல் ஆயிரம் கோடி சாம்ராஜ்யத்தை அவர் உருவாக்கியது அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது. இதற்காக அவர் எந்த ஒரு ஷார்ட்கட்டையும் பயன்படுத்தவில்லை நேர்மையான முறையில் சரியான முதலீடுகளை தேர்ந்தெடுத்து இந்த இடத்தை அவர் அடைந்திருக்கிறார். தோனி சென்னை ஐபிஎல் அணியில் தொடர்ந்து இடம்பெற்று இருக்கிறார், அதில் கிடைக்கும் சம்பளம் போக விளம்பரங்களில் நடிப்பதற்கும் சம்பளம் கிடைக்கிறது. இதனை தாண்டி பல வழிகளில் வருமானத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.

இந்தியர்களுக்கு பிரியாணி என்றால் கொள்ளை பிரியம் என்பது மகேந்திர சிங் தோனி முன்கூட்டியே அறிந்து வைத்திருந்தார். இதனால் ஹவுஸ் ஆஃப் பிரியாணி என்ற நிறுவனத்தில் முதலில் இவர் 32 கோடி ரூபாயை முதலீடு செய்தார். அந்த முதலீடு அவருக்கு பெரிய லாபத்தை பெற்று தந்தது. தற்போது மகேந்திர சிங் தோனி முதலீடு செய்திருக்கும் ஹவுஸ் ஆப் பிரியாணி நிறுவனம் இந்தியா மட்டும் இல்லாமல் துபாய், ஜப்பான் , பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிலும் தன்னுடைய கடையை விரிவாக்கம் செய்திருக்கிறது.

அடுத்ததாக Garuda Aerospace என்ற சென்னையை சேர்ந்த ட்ரோன் உள்ளிட்ட தொழில்நுட்பங்களில் சிறந்து விளங்கும் ஒரு ஸ்டார்ட் அப்பில் முதலீடு செய்திருக்கிறார். முதலில் இந்த நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக தோன்றியவர் ,ஐந்து கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார். தோனி முதலீட்டுக்கு பின்னர் ஏராளமானவர்கள் இந்த நிறுவனத்தில் ஆர்வமுடன் முதலீடு செய்கிறார்கள். அண்மையில் கூட இந்த நிறுவனம் 100 கோடி ரூபாய் முதலீடு ஈர்த்து இருக்கிறது.
அடுத்ததாக பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கி விற்பனை செய்ய கூடிய CARS24 நிறுவனத்தில் தோனி முதலீடு செய்துள்ளார். கதாபுக் (Khatabook), எலக்ட்ரிக் சைக்கிள் தயாரிக்கும் EMotorad நிறுவனம், ஃபிட்னஸை அடிப்படையாக கொண்ட Tagda Raho நிறுவனம், உணவு மற்றும் பானங்களை விற்பனை செய்யும் 7InkBrews பிராண்டிலும் முதலீடு செய்துள்ளார்.
இது மட்டுமில்லாமல் தோனியே சொந்தமாக Seven என்ற லைஃப் ஸ்டைல் பிராண்டை நடத்தி வருகிறார். சென்னையின் எஃப்சி என்ற கால்பந்து அணியின் இணை உரிமையாளராகவும் மஹி ரேசிங் டீம் இந்தியா என்ற மோட்டார் சைக்கிள் பந்தய அணியின் உரிமையாளராகவும் இருக்கிறார்.
தோனி செய்த அனைத்து முதலீடுகளும் அவருக்கு பெரிய லாபம் தந்துவிடவில்லை. ப்ளூஸ்டார்ட் நிறுவனத்தில் செய்த முதலீடு அவருக்கு நஷ்டத்தை தான் ஏற்படுத்தி தந்தது. இருந்தாலும் தோல்விகளை அவர் பாடங்களாக எடுத்துக் கொண்டார். தனக்கு எது சரி எந்த துறை வளரப்போகிறது என்பதை உணர்ந்து அதில் முதலீடு செய்தார். இவற்றின் மூலம் அவரது சொத்து மதிப்பு 1000 ரூபாயை கடந்துள்ளது.


Click it and Unblock the Notifications