சென்னை: உலகம் முழுவதும் பல்வேறு செல்வந்தர்களும் தங்களுக்கு என சொந்தமான தனி விமானங்களை வைத்திருக்கின்றனர். இந்தியாவில் முகேஷ் அம்பானி உள்ளிட்ட பெரும் பணக்காரர்களும், சில திரை பிரபலங்களும், அரசியல் கட்சி தலைவர்களும் சொந்தமாக பிரைவேட் ஜெட் வைத்து கொண்டு தான் பல இடங்களுக்கும் பயணம் செய்கின்றனர்.
இவ்வாறு பிரைவேட் ஜெட் என வரும் போது அதனை பராமரிக்கும் செலவு தான் அதிகமாக இருக்குமாம். பொதுவாக குறைந்த பட்ஜெட் விலையில் பார்த்தால் கூட பிரைவேட் ஜெட் வாங்க 30 கோடி ரூபாய் வரை தேவைப்படுகிறது. பிரைவேட் ஜெட் வாங்கிய பிறகு அதனை விமான நிலையங்களில் தான் நிறுத்தி வைக்க முடியும். இதற்கு பார்க்கிங் கட்டணம் செலுத்த வேண்டும்.

இது போல பிரைவேட் ஜெட்களுக்கு பார்க்கிங் வசதிகள் கிடைக்கின்றன. அதற்காக மாதத்திற்கு 2 முதல் 3 லட்சம் ரூபாய் வரை செலுத்த வேண்டும். அடுத்ததாக Hangar கட்டணம் வசூல் செய்யப்படும். இது விமானத்தின் எடை மற்றும் அது நிறுத்தி வைக்கப்படும் காலத்தை பொறுத்து மாறும். இதற்கு ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். எனவே பார்க்கிங் மற்றும் ஹாங்கர் கட்டணமாக மட்டுமே ஒரு ஆண்டுக்கு 1.4 கோடி ரூபாய் வரை செலவிட வேண்டும்.
விமானத்தை இயக்குவதற்கு விமானிக்கு சம்பளம் தர வேண்டும். ஒரு மாதத்திற்கு விமானிக்கு சராசரியாக 4 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். அதே போல விமான எரிபொருளுக்கு தான் அதிக செலவு செய்ய வேண்டி இருக்குமாம். ஒரு மணி நேரம் விமானம் பறப்பதற்கு 1 லட்சம் ரூபாய்க்கு எரிபொருள் போட வேண்டும். ஆண்டுக்கு 100 மணி நேரம் பறந்தால் 1 கோடி ரூபாயை எரிபொருளாக பயன்படுத்த வேண்டும்.
அடுத்ததாக விமான நிலையங்களில் தரையிறக்குவது மற்றும் டேக் ஆஃப் செய்வது போன்ற பணிகளுக்கு கட்டுப்பாட்டு அறையில் இருப்பவர்களுடன் தகவல் தொடர்பு கொள்ள வேண்டும். இதற்காக ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் செலுத்த வேண்டி இருக்கும். அதே போல விமான பராமரிப்பு பணிகள் மற்றும் காப்பீடு ஆகியவற்றுக்காக ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டும்.
இது தவிர மற்ற பணிகளுக்கு ஆண்டுக்கு 30 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டி இருக்கும். எனவே சொந்தமாக ஜெட் வாங்குபவர்கள் அது வாங்கியதுடன் சேர்த்து ஓர் ஆண்டுக்கு என மொத்தமாக 33 கோடி ரூபாயை சராசரியாக செலவிட வேண்டி இருக்கும். இதுவே அதிக தொழில்நுட்பம் கொண்ட நவீன ஜெட்கள் என்றால் அதன் விலையும் அதிகமாக இருக்கும் பராமரிக்கும் செலவும் அதிகமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications