திருவனந்தபுரம், கேரளா: கடந்த ஜூன் 14ஆம் தேதி பிரிட்டன் கடற்படைக்கு சொந்தமான F-35B போர் விமானம் திடீரென கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஐந்து வாரங்களுக்கும் மேலாக இந்த விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
110 மில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட அதிநவீன திறன்களைக் கொண்ட போர் விமானமான F-35B ஐ கொண்டு கேரள சுற்றுலா துறை ஒரு முறை இங்கே வந்துவிட்டாலும் இங்கிருந்து செல்லவே மனசு வராது என கூறி இந்த விமான புகைப்படத்தை பயன்படுத்து விளம்பரம் செய்தது. இந்த விளம்பரம் பெரிய அளவில் கவனம் பெற்றது. குறைந்த எரிபொருள் மற்றும் மோசமான வானிலை காரணமாக தான் ஜூன் 14ஆம் தேதி அன்று அவசரமாக தரையிறக்கப்பட்டது.

கேரளா கடற்கரையிலிருந்து 100 நாடிக்கல் மைல் தொலைவில் இந்த விமானம் பறந்து கொண்டிருந்த போதுதான் எரிபொருள் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது உடனடியாக திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு இந்திய விமானப்படை உதவி மூலம் இந்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இந்த விமானத்திற்கு எரிபொருள் நிரப்பப்பட்டது ஆனால் மீண்டும் விமானத்தை இயக்கம் முற்பட்ட போது தான் அதில் ஹைட்ராலிக் பழுது ஏற்பட்டது தெரிந்தது.
இதன் காரணமாக விமான நிலையத்திலேயே இந்த விமானம் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. டொமெஸ்டிக் டெர்மினல் பகுதியில் பகுதியில் நிறுத்தப்பட்டது இந்த விமானத்திற்கு 24 மணி நேரமும் இந்திய மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் கழித்து பிரிட்டன் விமானப்படையை சேர்ந்த நிபுணர்கள் குழு திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வருகை தந்தது. அதில் இந்த போர் விமானத்தை பழுது பார்ப்பதற்கான சிறப்பு இயந்திரங்கள் அனைத்தும் கொண்டுவரப்பட்டன. 14 தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் 10 உதவியாளர்கள் என மொத்தம் 24 பேர் கொண்ட குழு இந்த விமானத்தை பழுது பார்ப்பதற்காகவே பிரிட்டனிலிருந்து இந்தியாவிற்கு வருகை சிறப்பு விமான மூலம் வந்தது.
விமானத்தை தனித்தனி பாகங்களாக பிரித்து அதன் பின்னர் ராணுவ சரக்கு விமான மூலமாக இங்கிலாந்துக்கு கொண்டு சென்று பழுது பார்க்கலாம் என திட்டமிடப்பட்டது ஆனால் அது சாதியமல்ல என நிபுணர்கள் குழு தெரிவித்ததால் இங்கேயே அதனை பழுது பார்க்கும் பணி நடத்தப்பட்டது. இந்த நிலையில் தான் ஐந்து வாரங்களுக்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்த இந்த விமானம் பழுது நீக்கப்பட்டு இன்று புறப்பட்டு சென்றது.
இந்த நிலையில் 5 வார காலமாக நிறுத்தப்பட்டு போர் விமானத்துக்கு பார்க்கிங் கட்டணமாக ஒரு நாளைக்கு 26 ,261 ரூபாயை திருவனந்தபுரம் விமான நிலையம் வசூல் செய்திருக்கிறது என IDRW தகவல் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 35 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 9. 19 லட்சம் ரூபாயை பார்க்கிங் கட்டணமாக மட்டுமே வசூல் செய்திருக்கின்றனர். இது தவிர பராமரிப்பு பகுதியிலும் சில நாட்கள் நிறுத்தி வைத்திருந்தனர் அதற்கான பார்க்கிங் கட்டணமும் தனியாக வசூல் செய்யப்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications