பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு சில மாதங்கள் கழித்து தமிழ்நாட்டில் தொழிலதிபர் சேகர் ரெட்டி என்பவரின் வீட்டில் இருந்து கோடிக்கணக்கான மதிப்புள்ள கட்டுக்கட்டாக புதிய 2000 ரூபாய் நோட்டுகளும், கிலோக் கணக்கில் தங்க நகைகளையும் வருமானவரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி அள்ளிச் சென்றனர்.
அதேபோல் நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், நிதி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள், கல்லூரி உரிமையாளர்கள் உள்ளிட்டவர்களுக்குச் சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் ஒரேசமயத்தில் அதிரடியாக வருமான வரித்துறை அதிகாரிகள் புகுந்து கணக்கில் வராத ரொக்கப்பணத்தை கோடிக்கணக்கில் பறிமுதல் செய்தனர்.

அதுபற்றிய வழக்கு விவரங்கள் பெரிதாக வெளியாகவில்லை என்பதால் பணம் பறிமுதல் செய்யப்பட்டவர்கள் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற விவரங்கள் கிடைக்கவில்லை. லேட்டஸ்ட்டாக இப்போது காங்கிரஸ் கட்சி எம்பி தீரஜ் பிரசாத் சாஹூவுக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.351 கோடி ரொக்கப்பணத்தை வருமான வரி அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இதுபற்றி எம்பி சாஹூ கூறுகையில், இந்தப் பணம் அனைத்தும் தங்களது குடும்பத்தாரின் மதுபான வியாபாரத்தில் வந்ததாகவும் இதற்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று விளக்கமளித்துள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், எனது 30-35 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் முதன்முறையாக இப்போதுதான் இந்த மாதிரியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது எனக்கு மிகவும் வேதனையைத் தருகிறது.
இப்போது நடக்கும் சம்பவங்கள் என்னை மிகவும் துக்கத்தில் ஆழ்த்துகின்றன.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் முழுவதும் எனது நிறுவனத்துக்குச் சொந்தமானது என்பதை ஒப்புக் கொள்கிறேன். கைப்பற்றப்பட்ட பணம் முழுவதும் எனது மதுபான நிறுவனங்களில் இருந்து வந்ததாகும். அனைத்தும் மது விற்பனை மூலம் கிடைத்ததாகும்.
இதனிடையே இந்த அதிரடி ரெய்டு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. லேட்டஸ்ட் இன்கம்டாக் விதிகளின்படி ஒருவரது வீட்டில் எவ்வளவு ரொக்கப் பணம் வைத்திருக்கலாம். அதற்கான வரம்பு என்ன..? அப்படி வைத்திருந்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று கேட்கப்படுகிறது.
வருமான வரிச் சட்டத்தின்படி வீட்டில் எவ்வளவு பணத்தை வைத்திருக்கலாம் என்பதற்கு எந்தவிதமான குறிப்பிட்ட வரம்புகளும் இல்லை. அதேசமயத்தில் வருமான வரி சோதனையின் போது சிக்கும் பணத்துக்கு அதன் உரிமையாளர் தகுந்த ஆதாரத்தையும் விளக்கத்தையும் தர வேண்டும்.
கணக்கில் வராத பணமாக இருந்தால் அபராதமும் கட்ட நேரிடும். அந்தப் பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அதற்கு 137 சதவீத அபராதமும் விதிக்க முடியும். எனவே வீட்டில் அதிகளவு ரொக்கமாகப் பணம் வைத்திருப்பவர்கள் அதற்கான வரவு ஆதாரங்கள், கணக்குகளை சரியாக வைத்திருந்தால் எந்தவிதமான பிரச்னையும் இல்லை.
சிலர் வீடு கட்டுவதற்கு, மருத்துவச் செலவுகளுக்கு, சுப காரியங்களுக்கு என்று பணத்தைத் திரட்டி வைத்திருக்கலாம். அதற்கான அத்தாட்சியை வைத்துக் கொண்டால் வருமான வரித்துறையால் எந்தத் தொந்தரவும் இருக்காது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!



Click it and Unblock the Notifications