வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் நீங்கள் வருமான வரி ஒழுங்குமுறைகள் படி எவ்வளவு பணம் டெபாசிட் அளவுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். மற்ற கணக்குகளைப் போலவே சேமிப்புக் கணக்கிலும் பணமாக டெபாசிட் கட்டுவதற்கு வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதிகாப்பூர்வ வழிகாட்டுதல்களின் படி உங்களது சேமிப்பு கணக்கில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் செலுத்த நேரிட்டால் அது வருமான வரி பிடித்தத்துக்கு உள்ளாகும். ஒரு குறிப்பிட்ட காலத்துக்கள் வரி விதிப்புக்கு ஆளாகாமல் அதிகபட்சமாக பணத்தை டெபாசிட் செய்வதற்கு வரம்பு உள்ளதாக வரித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப்பரிவர்த்தனையை தடுப்பதற்காகவும் பணப்புழக்கத்தை முறைப்படுத்தவும் இதுபோன்ற வரம்புகள் நிர்ணயிக்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சத்தை உங்களது சேமிப்பு கணக்கில் ரொக்கமாக செலுத்தலாம். எப்போதாவது ஒரு முறை என்றால் இந்த வரம்பு ரூ.2.5 லட்சம் வரை அதிகரிக்கும்.
வருடாந்திர வரம்பின்படி ஒரு சேமிப்புக் கணக்கில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இதற்கு வருமான வரித்துறைக்கு எந்த வரியையும் செலுத்த வேண்டியதில்லை.
மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் வழிகாட்டுதல்களின் படி ஒரு நிதியாண்டில் ரூ.10 லட்சத்துக்கும் மேல் பணமாக டெபாசிட் செய்திருந்தால் அதுபற்றி வங்கிகள் தகவல் தரவேண்டும். வரிவிதிப்பானது உங்கள் சேமிப்புக் கணக்கில் உள்ள தொகை மீது வராது ஆனால் வங்கியிலிருந்து நீங்கள் பெறும் வட்டியின் மீது வரி விதிப்பு இருக்கும்.
வங்கியில் வாடிக்கையாளர்கள் பணத்தை வைத்திருப்பதற்காக வங்கிகள் குறிப்பிட்ட வட்டியை அளிக்கின்றன. இவ்வாறு வங்கியில் கிடைக்கும் வட்டியானது உங்களது வருமானவரி ரிட்டர்னில் லாபமாகக் குறிப்பிடப் படும்.
இருப்பினும் அதற்கு ஒரு அளவு உள்ளது. வங்கி டெபாசிட்கள் மூலம் ரூ.10,000க்கு மேல் வட்டி வந்தால் அது வரிவிதிப்புக்கு ஆளாகும். பொதுவாக ரூ.49999 வரை பணமாக சேமிப்புக் கணக்கில் டெபாசிட் செய்யும்போது உங்களது பான் எண் தேவையிருக்காது.
ஆனால் 50000 அல்லது அதற்குமேல் டெபாசிட் செய்யும்போது உங்களது பான் கார்டு எண்ணை வங்கிக்குத் தெரிவிக்க வேண்டும். அதைவைத்து வருடாந்திர டெபாசிட் கண்காணிக்கப்பட்டு அது ரூ.10 லட்சத்தைத் தாண்டினால் வரிவிதிப்புக்காக வருமானவரி துறைக்கு வங்கிகள் தெரியப்படுத்தும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications