டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள கமிஷன் பரிந்துரைகள் அடிப்படையில் தான் ஊதியம் வழங்கப்படுகிறது . அதேபோல ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய தொகையையும் இந்த ஊதிய குழுவின் பரிந்துரை அடிப்படையில் தான் நிர்ணயம் செய்யப்படுகிறது.
2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 8ஆவது சம்பள கமிஷன் நடைமுறைக்கு வர இருப்பதால் மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். தற்போது 7ஆவது சம்பள கமிஷன் அடிப்படையில் தான் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளமும் ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

8ஆவது சம்பள கமிஷன் பரிந்துரைகள் நடைமுறைக்கு வரும்போது அதன் அடிப்படையில் சம்பளமும் ஓய்வூதிய தொகையும் மாற்றமடையும் .
பொதுவாக ஊதிய குழுக்கள் ஃபிட்மன்ட் ஃபேக்டர் (fitment factor) எனப்படும் ஒரு காரணியை அடிப்படையாகக் கொண்டுதான் மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதிய தொகையை கணக்கீடு செய்கிறது. அந்த வகையில் பணவீக்கம், வாழ்க்கை செலவினங்கள், அரசின் நிதித்திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் ஊதிய குழு இந்த ஃபிட்மன்ட் ஃபேக்டரை முடிவு செய்யும்.
அந்த வகையில் 8ஆவது சம்பள கமிஷன்வில் 2.86 ஃபிட்மன்ட் ஃபேக்டர் கொண்டு ஊதியம் மற்றும் ஓய்வூதியம் கணக்கிடப்படுவதாக சொல்லப்படுகிறது. இவ்வாறு இந்த ஃபிட்மன்ட் ஃபேக்டரை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது மத்திய அரசு ஊழியர்களில் லெவல் 1 நிலை ஊழியர்களின் அடிப்படை ஊதியம் என்பது 18,000 ரூபாயில் இருந்து 51,480 ரூபாயாக உயரும் என சொல்லப்படுகிறது.
அதே போல ஸ்டெனோகிராபர் மற்றும் ஜூனியர் கிளர்க் உள்ளிட்ட பணிகளுக்கான கிரேடு டி பிரிவில் பணியாற்றும் ஊழியர்களின் அடிப்படை சம்பளம் மாதத்திற்கு 25,500 ரூபாயிலிருந்து 72 ,930 ரூபாய் என அதிகரிக்கும். சீனியர் கிளார்க் பிரிவில் இருக்கக்கூடிய லெவல் 5 ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியம் 29,200 இல் இருந்து 83, 512 ரூபாய் என உயரும்.
இன்ஸ்பெக்டர் நிலையில் இருக்கக்கூடிய லெவல் 6 பணியாளர்களுக்கான மாத ஊதியம் ஒரு லட்சம் ரூபாயை கடக்கும் என சொல்லப்படுகிறது. அதேபோல செக்ஷன் ஆபீஸர்களாக இருக்கும் லெவல் 8 ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் 47,000இல் இருந்து 1, 36,000 ரூபாயாக அதிகரிக்கும் . லெவல் 9 நிலையில் இருக்கும் ஊழியர்களுக்கு மாத சம்பளம் 53 ஆயிரத்திலிருந்து 1,51,000 ரூபாயாக உயரும்.
குரூப் ஏ நிலையில் இருக்கக்கூடிய லெவல் 10 பிரிவு அதிகாரிகளுக்கு மாத சம்பளம் 1,60,000 ரூபாயாக உயரும் என சொல்லப்படுகிறது. அதைப்போல ஓய்வூதிய தொகையும் ஃபிட்மன் ஃபேக்டர் அடிப்படையில் உயரும் என அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே 8ஆவது ஊதிய குழு நடைமுறைக்கு வந்தால் 1 கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் பலனடைவார்கள்.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications