இந்திய ரயில்வே மில்லியன் கணக்கான பயணிகளின் போக்குவரத்துச் செலவை கணிசமாகக் குறைப்பதுடன், பயணிகள் வசதியாக பயணம் செய்யவும் உதவுகிறது. இருப்பினும், ரயில் பயணத்தின் போது திருட்டு சம்பவங்கள் ஏற்படுவதால், பயணிகளுக்கு கணிசமான இழப்பு ஏற்படுகிறது. சமீபத்தில், தேசிய நுகர்வோர் தகராறு நிவர்த்தி ஆணையம் (NCDRC) ஒரு பயணியின் பை திருடப்பட்டதால், 4.7 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு இந்திய ரயில்வேக்கு உத்தரவிட்டது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் இழப்பீடு எப்போது, எப்படி வழங்கப்படுகிறது என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
பயணிகளின் பை திருடப்பட்டால் இந்திய ரயில்வே முழு பொறுப்பேற்க வேண்டும் என்று NCDRC கூறியுள்ளது. மேலே கூறப்பட்டுள்ள இழப்பீடு 2007-ஆம் ஆண்டில் நடந்த திருட்டு சம்பவத்திற்காக வழங்கப்பட்டுள்ளது. கட்னியிலிருந்து துர்க் நோக்கி பயணித்த திலீப் குமார் சதுர்வேதி என்ற பயணி நள்ளிரவில் ரூ.9.3 லட்சம் ரொக்கத்துடன் பயணம் செய்துள்ளார்.

அவரது சாமான்களை அவர் பாதுகாத்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், ரயில் டிக்கெட் பரிசோதகரின் (TTE) அலட்சியத்தால், அங்கீகரிக்கப்படாத நபர்களை பெட்டிக்குள் அனுமதித்ததால் திருட்டு நிகழ்ந்தது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சதுர்வேதி துர்க் மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் புகார் அளித்தார், முதலில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. ஆனாலும் மத்திய ரயில்வே இந்த முடிவை ஏற்கவில்லை. பின்னர் சதுர்வேதி என்சிடிஆர்சியை அணுகினார், ரயில்வே ஊழியர்களின் அலட்சியத்தால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்ய அவருக்கு ரூ.4.7 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
இழப்பீடு எப்போது வழங்கப்படும்?: திருடப்பட்ட லக்கேஜ்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக ரயில்வே சட்டத்தின் 100-வது பிரிவின் கீழ் இந்திய ரயில்வே கடுமையான விதிகளைக் கொண்டுள்ளது. இந்தப் பிரிவின்படி, அதிகாரப்பூர்வமாக முன்பதிவு செய்யப்பட்டு ரசீது வழங்கப்படாவிட்டால், பயணிகளின் சாமான்களுக்கு ரயில்வே பொறுப்பாகாது. அதே சமயம் ரயில்வே ஊழியர்களின் அலட்சியத்தால் திருட்டு நடந்துள்ளது என நிரூபிக்கப்பட்டால், ரயில்வே நிர்வாகம் பொறுப்பேற்கும்.
TTE-கள் போன்ற ரயில்வே ஊழியர்களின் அலட்சியத்தால், அங்கீகரிக்கப்படாத நபர்கள் ரயில் பெட்டிக்குள் நுழைந்து இந்த திருட்டு சம்பவம் நிகழ்ந்தால் மேலே கூறப்பட்டுள்ளது போல் இழப்பீடு வழங்கப்படும்.
திருடப்பட்ட சாமான்களுக்கு இழப்பீடு கோருவது எப்படி?:
திருட்டைப் புகாரளிக்கவும்: ரயில்வே ஊழியர், கோச் உதவியாளர், காவலர் அல்லது ரயில்வே போலீஸ்-க்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கவும்.
புகாரை பதிவு செய்யுங்கள்: ஒரு புகார் படிவம் வழங்கப்படும், அதை பூர்த்தி செய்து காவல் நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
மீட்புப் பணிக்காக காத்திருங்கள்: 6 மாதங்களுக்குள் சாமான்கள் மீட்கப்படாவிட்டால், பயணிகள் நுகர்வோர் ஆணையத்தில் புகார் அளிக்கலாம்.
ரயில்வே ஊழியர்களின் அலட்சியம் காரணமாக திருட்டு சம்பவம் நடந்தது நிரூபிக்கப்பட்டால், இழந்த பொருட்களின் மதிப்பின் அடிப்படையில், மதிப்பாய்வுக்குப் பின், பயணிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும்.
இந்த செயல்முறைக்கு முன்பே பயணிகள் சற்று ஜாக்கிரதையாக இருந்தால் எந்தவித பிரச்சனையும் இன்றி பயணிக்கலாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications