பிரபல அமேசான் நிறுவனம், செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் தன்னுடைய திட்டங்களை வேகமாக முன்னெடுத்து வருகிறது. 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அமேசான் நிறுவனம் 11,300 வெளிநாட்டு பணியாளர்களை ஏஐ தொடர்பான வேலைகளுக்கு பணியமர்த்தியுள்ளது. இந்த ஏஐ துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.1.59 கோடி முதல் ரூ.2.27 கோடி வரை சம்பளம் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அவர்களுக்கு கூடுதலாக சலுகைகள் மற்றும் பங்குத்தொகைகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, கடந்த ஜூன் மாதம் அமேசான் CEO ஆண்டி ஜாஸி கூறுகையில், "சில துணை நிறுவனங்களின் ஊழியர்கள், பதவி உயர்வுக்காக விண்ணப்பிக்கும்போது, தாங்கள் ஏஐ-யை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கட்டாயம் விளக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். ஏஐ துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்புகளின் எண்ணிக்கையில், அமேசான் தற்போது மெட்டா, கூகுள் மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களை விட மூன்று மடங்கு முன்னிலையில் உள்ளது. இது, அமேசானின் ஏஐ-க்கு திறமையான தொழில்நுட்ப நிபுணர்களை உலகம் முழுவதும் தேடும் முயற்சிக்கும் ஒரு முக்கிய எடுத்துக்காட்டாக உள்ளது.

அமேசான் நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு, மென்பொருள் மேம்பாடு மற்றும் தகவல் விஞ்ஞானம் போன்ற துறைகளில் பணிபுரியும் தொழில்நுட்ப நிபுணர்களுக்கு மிகவும் உயர்ந்த சம்பளங்கள் வழங்கப்படுவதாக Business Insider வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அமேசான் வெப் சர்வீஸ் (AWS)-ல் பணிபுரியும் மென்பொருள் பொறியாளர்களுக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.59 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது.
Amazon.com-இல் மென்பொருள் மேம்பாட்டு பொறியாளர்களுக்கு சுமார் ரூ.2.27 கோடியும், Data Scientists மற்றும் நிதி ஆய்வாளர்களுக்கு ரூ.1.76 கோடி முதல் ரூ.1.99 கோடி வரையும் சம்பளம் வழங்கப்படுகிறது. அதேபோல், தொழில்நுட்ப தயாரிப்பு மேலாளர்களுக்கு சுமார் ரூ.2.02 கோடி ஆண்டு சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. சம்பளம் மட்டுமின்றி அவர்களுக்கு அலவன்ஸ்கள், பங்கு விருப்பங்கள் (stock options), இன்சூரன்ஸ் போன்ற கூடுதல் சலுகைகளும் உண்டு.
அமேசான் நிறுவனம், தனது தொழில்நுட்ப வளர்ச்சியை வலுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் சிறந்த நிபுணர்களை, குறிப்பாக செயற்கை நுண்ணறிவு துறையில், உயர்ந்த சம்பளத்தில் நியமிக்கிறது. இது போன்ற வேலைவாய்ப்புகள், குறிப்பாக H-1B விசா மூலம் அமெரிக்காவில் வேலை தேடுபவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக உள்ளது.
இதுதொடர்பாக அமேசான் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பேச்சாளர் கூறுகையில், "பணியாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் பணியின் வகை, பதவி நிலை, பணியாளர் இருப்பிடம், அவர்களின் வேலை திறன் மற்றும் பல்வேறு காரணிகள் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த சம்பளம் பணியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக உள்ளது. இதனால், நிறுவனத்திற்கு திறமையான ஆட்கள் சேர முடிகிறது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications