இளம் தலைமுறையினரை பயமுறுத்தும் இதய பாதிப்புகள்! இதய அறுவை சிகிச்சைக்கு எவ்வளவு செலவாகும்? -மருத்துவர் விளக்கம்

இந்தியாவில் ஐடி மற்றும் தொழில்நுட்ப துறைகளில் பணிபுரியும் 20 முதல் 40 வயதுடைய இளம் தொழில்முறை வல்லுநர்களிடையே இதய பாதிப்பு பெரிய அளவில் அதிகரித்து வருகின்றன. பணி சுமையால் ஏற்படும் மன அழுத்தம், உடல் உழைப்பின்மை, ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள், தூக்கமின்மை, மற்றும் புகைப்பழக்கம் ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

2023 முதல், 25-44 வயதுடையவர்களிடையே Heart Attack மூலம் ஏற்படும் இறப்புகள் 30% உயர்ந்துள்ளன, இது இளம் வயதினருக்கு இதய ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வின் அவசியத்தை வலியுறுத்துகிறது. இதேபோல் பல இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இந்த பிரச்சனைகளை உணர்ந்து இதய அறுவை சிகிச்சைக்காகவும் தனிப்பட்ட திட்டங்களையும் உருவாக்கி வருகிறது.

இளம் தலைமுறையினரை பயமுறுத்தும் இதய பாதிப்புகள் - கோவை மருத்துவர் திருவேங்கடம் விளக்கம்

இத்தகைய நிலையில் உடலில் என்னென்ன பிரச்சனைகள் இருந்தால் இதய பாதிப்பு வரும்..? இளைய தலைமுறையினர் இதயநோயால் அதிகம் பாதிக்கப்படுவது ஏன்..? இதயநோய் சிகிச்சைக்கு எவ்வளவு செலவு ஆகும்..? என்பது குறித்து கோவை கற்பகம் மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சை துறை மருத்துவர் திருவேங்கடம் (MD,DNB,DM) குட்ரிட்டர்ன்ஸ்-க்கு பிரத்யேகமாக அளித்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், தற்போதைய இளைய தலைமுறையினர் மத்தியில் புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இது அவர்களின் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும் நிலைக்குத் தள்ளுகிறது. குறிப்பாக, புகைப்பிடிப்பு காரணமாக இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. இதன் விளைவாக, 25 முதல் 30 வயது பருவத்திலேயே சிலர் ஸ்டண்ட் (Stent) பொருத்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இது கடந்த காலத்தைவிட மிகக் குறைந்த வயதிலேயே இதய நோய் பாதிப்புகள் ஏற்படுவதை உணர்த்துகிறது.

இளம் தலைமுறையினரை பயமுறுத்தும் இதய பாதிப்புகள் - கோவை மருத்துவர் திருவேங்கடம் விளக்கம்

நீரிழிவு நோய் : மேலும், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. சர்க்கரைநோய் உள்ளவர்கள் இதய நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

உயர் இரத்த அழுத்தம் : உயர் இரத்த அழுத்தம் (Hypertension) இருப்பவர்கள் தொடர்ந்து மாத்திரைகள் எடுத்து கட்டுக்குள் வைத்துக் கொண்டால், இதய பாதிப்பை முன்கூட்டியே தடுக்க வாய்ப்புள்ளது.

கெட்ட கொலஸ்ட்ரால் : LDL கொழுப்பு அதிகமாகி, HDL கொழுப்பு குறைவாக இருந்தால், இதய பாதிப்பு வரும். எனவே, 3 அல்லது 6 மாதங்களுக்கு ஒருமுறை ரத்த பரிசோதனை மூலம் கொலஸ்ட்ராலின் அளவை தெரிந்து கொள்ளலாம். பின்னர், கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் அதை மாத்திரைகள் மூலமே சரிசெய்யலாம்.

பரம்பரை நோய் : உங்கள் குடும்பத்தில் தாய் - தந்தைக்கு இதய பாதிப்புகள் இருந்தால், அது அடுத்த தலைமுறையினருக்கும் வர வாய்ப்புகள் அதிகம். பெற்றோர்களுக்கு ஏற்கனவே ஹார்ட் அட்டாக் வந்திருந்தால், அவர்களது குழந்தைகளும் முன்கூட்டியே பரிசோதனை செய்து கொள்வது நல்லது. அதேபோல், டைப் ஏ பர்சனலிட்டி எனப்படும் எதற்கு எடுத்தாலும் Tension ஆகும் நபர்களுக்கும் இதய பாதிப்பு வர வாய்ப்புள்ளது. இந்த குறிப்பிட்ட 6 காரணங்கள்தான் இருதய நோய்க்கான வருவதற்கான முக்கிய காரணங்களாக உள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைகளுக்கும் இதய பாதிப்பு : குழந்தைகளுக்கும் இதயநோய் வர வாய்ப்புள்ளது. பிறக்கும் குழந்தைக்கு இதயத்தில் ஓட்டை, இதய வால்வுகளில் பிரச்சனை இருந்தால், அதை முன்கூட்டிய அந்த குழந்தையின் தாய் வயிற்றில் இருக்கும்போதே ECHO பரிசோதனை மூலம் முன்கூட்டியே கண்டறிந்து உரிய சிகிச்சை தர முடிவதாக கூறுகிறார்.

இளம் தலைமுறையினரை பயமுறுத்தும் இதய பாதிப்புகள் - கோவை மருத்துவர் திருவேங்கடம் விளக்கம்

மேலே குறிப்பிட்ட 6 முக்கிய காரணங்கள் Coronary Artery Disease எனப்படும் இருதயத்திலிருந்து ரத்தம் கொடுப்பதற்கான அடைப்பு ரத்த குழாய்களில் அடைப்பு இருப்பது முக்கிய காரணமாகவும், அடுத்ததாக குழந்தைகளுக்கு ஏற்படும் இருதய பிரச்சனைகள் மற்றும் இளம் வயதினருக்கு வால்வு பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் இதனை Rheumatic Heart Disease என குறிப்பிட்டுள்ளார். உடலில் உள்ள பாக்டிரீயா தாக்குதலால் இருதயத்தில் உள்ள வால்வுகளில் வீக்கம், சுருக்கம் ஏற்படுவதாக கூறியுள்ளார். இதற்கு வால்வு மாற்று அறுவை சிகிச்சை, பலூன் வைத்து அந்த அடைப்பை விரித்து விடுதல், அண்டிபயாடிக் கொடுப்பது, மாத்திரைகள் கொடுப்பது உள்ளிட்ட காரணங்களால் நோயின் தீவிரத்தை குறைக்கலாம் என்று கூறியுள்ளார்.குணமாகவும் வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.

உடல் பருமன் : உடல் பருமன் பிரச்சனை இருப்பவர்களுக்கு இதயநோய் பாதிப்பு வர வாய்ப்புகள் மிக மிக அதிகம் என்று மருத்துவர் திருவேங்கடம் எச்சரித்துள்ளார். இதயநோய் பாதிப்பு வர ஜங்க் ஃபுட்டும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ஸ்டண்ட் எதற்காக வைக்கப்படுகிறது..?: 2 ரத்தக்குழாய்களில் அடைப்பு இருந்தாலோ, சர்க்கரை வியாதிகள் இல்லாமல் இருந்தாலோ, இதயத்தின் பம்பிங் நன்றாக இருந்தாலோ, அடைப்பின் தன்மை சிறியதாக இருந்தாலோ ஸ்டன்ட் வைப்பது சுலபம். இவர்களுக்கு எதிர்காலத்தில் பிரச்சனைகள் வருவதும் குறைவு.

அதேபோல், 3 ரத்தக்குழாய்களில் அடைப்பு, சர்க்கரை வியாதிகள் இருந்தாலோ, இதயம் பலவீனமாக இருந்தாலோ, மாரடைப்பு வந்திருந்தாலோ பைபாஸ் சர்ஜரி செய்து நல்லது.

இளம் தலைமுறையினரை பயமுறுத்தும் இதய பாதிப்புகள் - கோவை மருத்துவர் திருவேங்கடம் விளக்கம்

அதேபோல், இதயம் மிகவும் பலவீனமாக இருந்தாலோ, பெரியவிலான மாரடைப்பு அல்லது மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ளாமல் இதயம் பலவீனம் அடைந்துவிட்டாலோ அவர்களுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். மூளைச்சாவு, இறந்தவர்கள் இருதய தானம் கொடுத்திருந்தால், அவர்களின் இதயத்தை எடுத்து பொருத்த முடியும்.

ஸ்டன்ட் வைக்க எவ்வளவு செலவாகும்..?: ஹார்ட் ஸ்டென்ட் என்பது உங்கள் இதயத்தின் அடைப்புப் பாதையில் வைக்கப்படும் ஒரு குழாய் ஆகும். இது சாதாரண இரத்த ஓட்டத்தை மீண்டும் தொடங்க உதவுகிறது. இந்த ஸ்டன்ட் வைப்பதால், மீண்டும் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் குறைவாக இருக்கும். இந்த ஸ்டன்ட் வைக்க ரூ.75,000 முதல் ரூ.3,00,000 லட்சம் வரை கூட செலவாகும். இது இரண்டு வகைகளும் உள்ளன. குறைந்த செலவில் வைக்கலாம். அ தேபோல், இதற்கு அரசாங்கத்தில் காப்பீட்டு திட்டமும் உள்ளது என்று மருத்துவர் திருவேங்கடம் தெரிவித்துள்ளார்.

மொத்தம் 3 வகையான ஸ்டென்ட் உள்ளன. அதில், ஒரு ஸ்டென்ட்டுக்கு அரசாங்கம் விலை நிர்ணயித்துள்ளது. ஸ்டென்ட்டுக்கான கட்டணம் குறைவாக இருந்தாலும், மருத்துவ இதர செலவுகளும் இருக்கின்றன. (உதாரணத்திற்கு மருத்துவர் கட்டணம், செவிலியர் கட்டணம், உணவு போன்ற விஷயங்கள் அடங்கும்). பெரும்பாலும் அதிக விலையில் ஸ்டென்ட் வைப்பதை விட, நோயாளிக்கு தகுந்த மற்றும் ஏற்ற ஸ்டென்ட் வைப்பது தான் நல்லது. இதனால், கட்டணமும் மாறுபடும்.

இளம் தலைமுறையினரை பயமுறுத்தும் இதய பாதிப்புகள் - கோவை மருத்துவர் திருவேங்கடம் விளக்கம்

ஸ்டன்ட் வைத்த பிறகு என்ன பிரச்சனைகள் வரும்..?: ஸ்டன்ட் வைத்த பிறகு அது பிளாக் ஆகவும் வாய்ப்புள்ளது. எனவே, 6 அல்லது ஒரு வருடங்களுக்கு தொடர்ந்து மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ரத்த பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை, கொலஸ்ட்ரால், சர்க்கரை அளவுகளை அவ்வப்போது சரிபார்த்துக் கொள்வது நல்லது. இதை தவிர்ப்பதால் தான், ஸ்டன்ட் அடைப்பு வர காரணமாகிறது.

எந்தெந்த சிகிச்சைக்கு எவ்வளவு செலவாகும்..?: ரோபோட்டிக் அறுவை சிகிச்சை செய்ய ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை கூட செலவாகும். (மருத்துவமனை, அறைகள், மருத்துவ செலவு ஆகியவற்றை பொருத்து மாறுபடலாம்). மினி ஸ்டெர்னோட்டமி என்கின்ற சிறு துழை இருதய அறுவை சிகிச்சைக்கு (Mini Sternotomy Heart) ரூ.6 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை செலவாகலாம். Beating heart surgery-க்கும், ஆன் பம்ப் பைபாஸ் சர்ஜரிக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை செலவாகலாம். அதேபோல், இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு (heart transplant surgery) ரூ.20 லட்சம் வரை செலவாகலாம்.

காப்பீட்டுத் திட்டம் : தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசின் காப்பீட்டு திட்டங்கள் (அயுஷ்மான் பாரத், கலைஞர் காப்பீட்டுத் திட்டம் போன்றவை) மூலம், இந்த அறுவை சிகிச்சைகள் பலவற்றையும் இலவசமாக அல்லது குறைந்த செலவில் மேற்கொள்ள முடியும்.

இளம் தலைமுறையினரை பயமுறுத்தும் இதய பாதிப்புகள் - கோவை மருத்துவர் திருவேங்கடம் விளக்கம்

இதயத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது எப்படி..?: உடல்நலத்தை காப்பாற்றும் சிறந்த வழி, அதை இளமையிலேயே தொடங்குவதுதான். 18 முதல் 20 வயதுக்குள் உடற்பயிற்சியைத் தொடங்குவது, எதிர்காலத்தில் பல உடல்நல சிக்கல்களில் இருந்து விடுபட உதவுகிறது. புகை மற்றும் மது அருந்தும் பழக்கம், இளைய தலைமுறையிடையே "வழக்கமானது" எனக் கருதப்படுவது, மிகப்பெரிய தவறாகும். குறிப்பாக, "வாரத்திற்கு ஒருமுறை மது அருந்துவது பிரச்சனையல்ல" என பலர் நம்புகின்றனர். ஆனால் இது தவறான எண்ணம்.

உலக சுகாதார நிறுவனமே (WHO) "ஆல்கஹால் என்பது உடலுக்கு எந்த அளவிலும் நன்மை இல்லாதது, அது முற்றிலும் தீங்கானது" என்று தெளிவாக கூறியுள்ளது. எனவே, மதுவை முற்றிலும் தவிர்ப்பது தான் நமது உடல்நலத்திற்கு உகந்தது. அதேபோல், கொலஸ்ட்ரால், சர்க்கரை (நீரிழிவு), உயர் ரத்த அழுத்தம் போன்ற நிலைகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இவை அனைத்தும் நேரடியாக இதயநோய் அபாயத்தைக் அதிகரிக்கக்கூடியவை.

மேலும், 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள், ஆண்டுக்கு ஒரு முறை முழுமையான உடல்நலப் பரிசோதனையை மேற்கொள்வது, ஆபத்துக்களை முன்னோக்கி கண்டறிந்து தடுக்கும் வழியாக அமையும்" என்று கோவை கற்பகம் மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சை மருத்துவர் திருவேங்கடம் விளக்கம் அளித்துள்ளார். மேலும், வருமுன் காப்போம் என்பதை அனைவரும் மனதில் வைத்திருக்க அவர் அறிவுறுத்தியுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+