ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் என்றாலே உலக சந்தையில் தனிமவுசு தான். ஐபோன் பயன்படுத்துவதே தனி கெத்து தான் என இளசுகள் தொடங்கி பெரிசுகள் வரை ஆர்வத்துடன் இதனை வாங்கி பயன்படுத்துகின்றனர்.
ஆப்பிள் நிறுவனமும் ஒவ்வொரு ஆண்டும் புது அப்டேட்டுகளுக்கு ஏற்ப ஐபோன் சீரிஸ்களை வெளியிடுகிறது. அண்மையில் கூட ஐபோன் 17 சீரிஸ் போன்கள் இந்தியாவில் விற்பனைக்கு வந்தன. தற்போது ஐபோன் 17 சீரிஸ் போன்களை வாங்குபவர்கள் அதன் சிறப்பம்சங்களை ரீல்ஸ்களாக போட்டு தள்ளுகின்றனர்.

இந்த சூழலில் தான் ஐபோன் 17 மாடல் போன்களை தயாரிக்க மொத்தமே 36000 ரூபாய் தான் செலவாகிறது, ஆனால் ஆப்பிள் நிறுவனம் 1.5 லட்சத்திற்கு நமக்கு விற்பனை செய்து லாபம் பார்க்கிறது என சமூகவலைதளங்களில் ரீல்ஸ் மற்றும் ஷார்ட்ஸ்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அதாவது ஐபோன் 17 உற்பத்தியில் முக்கியமான enclosure தயாரிக்க 1843 ரூபாய் செலவாகிறது, பேட்டரி தயாரிக்க 363 ரூபாய், 256 ஜிபி ஸ்டோரேஜ் 1800 ரூபாய்க்கும், மெமரி 1900 ரூபாய், கேமராவுக்கு 7000 ரூபாய், சிப் 8000 ரூபாய், 5ஜி மோடம் 8000 ரூபாய், டிஸ்பிளே 7000 ரூபாய் செலவாகிறதாம். அப்படி கணக்கீடு செய்தால் ஒரு ஐபோன் தயாரிக்க ஆகும் செலவு 36000 ரூபாய் தான் வருகிறது.

அப்படி என்றால் நமக்கு 1.5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்து அதிக லாபம் காண்கிறதா என்ற கேள்வி எழலாம். ஆனால் இதில் முக்கியமான விஷயத்தை நாம் மறந்துவிடுகிறோம். இவை அனைத்தும் தனிதனியாக உற்பத்தி செய்யப்படுவதற்கான கட்டணங்களே.
ஐபோன் வடிவத்தில் இதனை ஒருங்கிணைப்பது தான் இதில் முக்கியமான வேலையே. இந்த பாகங்கள் தனித்தனியே பல இடங்களில் உற்பத்தி செய்யப்படும். இவற்றை கொள்முதல் செய்து ஓரிடத்தில் கொண்டு வந்து அசெம்பிள் செய்வது தான் முக்கியமான வேலை. இதில் பொருட்களை இறக்குமதி செய்வது டிரான்ஸ்போர்ட் மற்றும் அசெம்பிள் செய்வது தொழிலாளர் ஊதியம் தொழில்நுட்பம் ஆகியவை உள்ளன.
இந்தியாவில் ஃபாக்ஸ்கான் , டாடா ஆகிய நிறுவனங்கள் தங்கள் ஆலையில் ஐபோன் அசெம்பிள் பணிகளை தான் செய்கின்றன. அந்த வகையில் தனி தனி பாகங்கள் உற்பத்தி மட்டுமில்லாமல் அவற்றை அசெம்பிள் செய்வதற்கு என தனி கட்டணம் செலுத்த வேண்டும்.
அடுத்ததாக அசெம்பிள் செய்த போன்களை பரிசோதனை செய்வது மீண்டும் ஏற்றுமதி செய்வது போக்குவரத்து செலவுகள் தனி. இதனை தாண்டி தொழில் ரீதியாக மார்க்கெட்டிங், விளம்பரம் என தனி தனி செலவுகள் உள்ளன. ஐபோனில் நாம் பயன்படுத்தும் சாப்ட்வேர்களுக்கு தனி கட்டணம் செலுத்தி ஆப்பிள் சந்தா எடுக்க வேண்டும். கூகுள், ஏஐ தொழில்நுட்பங்கள் ஒருங்கிணைப்பு என தனி கட்டணம் உண்டு. இது மட்டுமில்லாமல் ஆய்வு மற்றும் மேம்பாட்டு பணிகள், ஊழியர்களுக்கு சம்பளம் என பணம் செல்லும்.
அந்த வகையில் பார்த்தால் 1.5 லட்சம் ரூபாயில் 36,000 ரூபாய் உற்பத்திக்கும் மீதமுள்ள பணம் மற்றவற்றுக்கு என சென்றால் ஆப்பிள் நிறுவனத்திற்கு ஒவ்வொரு ஐபோன் மூலமாகவும் 25% மார்ஜின் கிடைக்கும். சுமார் 37000 ரூபாய் கிடைக்கும் என வைத்து கொள்ளலாம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications