இந்தியாவில் தங்கத்தின் விலை சமீப காலமாக ஏறிக்கொண்டே வருகிறது. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. 2020-ஆம் ஆண்டு 412 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் தங்கம், இன்றைய நிலவரப்படி 7,000 ரூபாயை தாண்டி உள்ளது. இந்த மிகப்பெரிய மாற்றத்தினால் பலரும் தங்கத்தில் முதலீடு செய்வதை பாதுகாப்பானதாக கருதுகின்றனர். ஆனால் இந்தியாவில் தங்கத்தின் விலை ஏற்றத்துடன் இருப்பதால் தங்கம் விலை குறைவாக இருக்கும் மற்ற நாடுகளில் குறிப்பாக துபாய் போன்ற இடங்களில் தங்கத்தின் விலையை பலர் கண்காணித்து வருகின்றனர்.
இதுபோன்ற நபர்களுக்கு வெளிநாட்டிலிருந்து எவ்வளவு தங்கத்தை இந்தியாவிற்கு கொண்டு வர முடியும்? என்ற கேள்வி எழலாம். தங்கத்தை வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரும்போது சில விதிகள் மற்றும் விதிமுறைகளைப் பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து ஒருவர் எவ்வளவு தங்கத்தை கொண்டு வரலாம்?: ஒரு தனி நபர் இந்தியாவிற்கு எவ்வளவு தங்கத்தை கொண்டு வரலாம் என்பதற்கு வரம்புகள் உள்ளது. இந்த வரம்புகளை நீங்கள் மீறும் பட்சத்தில் சுங்கவரி செலுத்த வேண்டும். தற்போதைய விதிமுறைகளின்படி ஆணாக இருந்தால் 20 கிராம் வரையிலான தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டுவர முடியும்.
அதுவே பெண்ணாக இருந்தால் 40 கிராம் வரையிலான தங்கத்தை கொண்டு வரலாம். ஆனால் தங்கத்தை கொண்டு வருவதற்கு குறைந்தது 1 வருடம் வெளிநாட்டில் தங்கி இருக்க வேண்டும்.
தங்க இறக்குமதிக்கு மட்டுமே வரி கிடையாது. இந்தியப் பயணி ஒருவர் கோல்ட் பார், கோல்ட் காயின்ஸ் போன்றவற்றை கொண்டு வந்தால் கண்டிப்பாக சுங்கவரி விதிக்கப்படும். இது தங்கத்தின் வகை மற்றும் எடையின் அடிப்படையில் மாறுபடும்.
1 கிலோவிற்கு குறைவான கோல்ட் பார்கள்: 10% சுங்க வரி
20-100 கிராம் எடையுள்ள கோல்ட் பார்கள்: 3% சுங்க வரி
20 கிராமுக்கு குறைவான கோல்ட் பார்கள்: 10% சுங்க வரி
20-100 கிராம் எடையுள்ள கோல்ட் காயின்கள்: 10% சுங்க வரி
20 கிராமுக்கு குறைவான கோல்ட் காயின்கள்: 10% சுங்க வரி
இருப்பினும், 20 கிராம் அல்லது அதற்கும் குறைவான எடையுள்ள மற்றும் ரூ.50,000 அல்லது அதற்கும் குறைவான தங்க நகைகளை கொண்டு வந்தால், சுங்க வரி வசூலிக்கப்படாது. நீங்கள் இந்தியாவிற்கு தங்கத்தை கொண்டு வர திட்டமிட்டால், தங்கம் வாங்கிய ரசீது போன்ற தேவையான அனைத்து ஆவணங்களும் உங்களிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கூடுதலாக, நீங்கள் எடை வரம்புகளுக்கு இணங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், ஏனெனில் இவற்றை மீறுவது கூடுதல் கட்டணங்களுக்கு வழிவகுக்கும்.


Click it and Unblock the Notifications