கிராஜுவிட்டி என்பது ஒரு பணியாளரின் நீண்ட கால அர்ப்பணிப்பு மற்றும் சேவையைப் பாராட்டி நிறுவனத்தால் வழங்கப்படும் தொகையாகும். கிராஜுவிட்டி சட்டம் 1972-இன் கீழ் குறிப்பிட்ட பணிக் காலத்தை முடித்த ஊழியர்களுக்கு.. அதாவது சுமார் 5 ஆண்டுகள் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்தப் பலன் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஊழியர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் ஒரு நிறுவனத்தை விட்டு வெளியேறும் போது நிதி பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கிராஜுவிட்டி வழங்கப்படுகிறது. இந்தப் பதிவில் ஒருவர் ரூ.45,000 ஆயிரம் சம்பளத்துடன் 6 ஆண்டுகள் பணிபுரிந்தால் எவ்வளவு கிராஜுவிட்டி கிடைக்கும்? என்பதைப் பார்ப்போம்.
எந்தெந்த நிறுவனங்கள் கிராஜுவிட்டி வழங்குகின்றன?: கடந்த ஆண்டில் 10-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட நிறுவனங்கள், சுரங்கங்கள், ரயில்வே, எண்ணெய் வயல்கள், தொழிற்சாலைகள் கிராஜுவிட்டி வழங்க வேண்டும்.

கிராஜுவிட்டி பெறுவதற்கான தகுதி?: பொதுவாக 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக பணியாற்றினாலே கிராஜுவிட்டி பெற அந்த ஊழியர் தகுதியுடையவர். இதற்கு சில விதிவிலக்குகள் உள்ளன. சில பணியாளர்கள் 5 ஆண்டு பதவிக்காலத்தை பூர்த்தி செய்யாமலும் கிராஜுவிட்டி தொகையைப் பெறலாம். பணியாளருக்கு மரணம் ஏற்பட்டால் அவர்களின் குடும்பத்திற்கு கிராஜுவிட்டி தொகை வழங்கப்படும்.
அதேபோல ஒரு ஊழியர் விபத்து காரணமாக நிரந்தர ஊனமுற்றால் தொடர்ந்து வேலை செய்ய முடியாது. இது போன்ற காரணங்கள் இருந்தாலும் அவர்களுக்கும் கிராஜுவிட்டி வழங்கப்படுகிறது.
எப்போது கிராஜுவிட்டி வழங்கப்படுகிறது?: விருப்ப ஓய்வு பெறுதல், நிறுவனத்தில் இருந்து ரிசைன் செய்தல், நிரந்தர ஊனம் அல்லது இறப்பு ஆகிய காரணங்களின்போது கிராஜுவிட்டி வழங்கப்படும். ஒரு ஊழியர் இறந்து விட்டால் அவர் சார்பில் அவர் குடும்பத்திற்கு அல்லது சட்டபூர்வ வாரிசுக்கு இந்த நிதி வழங்கப்படும்.
கிராஜுவிட்டி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?: கிராஜுவிட்டி கணக்கீடுகள் 2 முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டவை
கடைசியாக பெறப்பட்ட அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி (DA): இவை கிராஜுவிட்டி தொகையைத் தீர்மானிக்கின்றன.
சேவை ஆண்டுகள்: இதில் முழு ஆண்டு சேவையும் அடங்கும். மீதமுள்ள மாதங்கள் ஆறு மாதங்களுக்கு மேல் இருந்தால் அவை பொதுவாக 1 வருடமாக மாற்றிக்கொள்ளப்படும்.
கிராஜுவிட்டி = அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி x (15/26) x (நீங்கள் நிறுவனத்தில் வேலை பார்த்த ஆண்டுகளின் எண்ணிக்கை).
இந்த பார்முலாவில் இருக்கும் 15 என்பது 1 வருடத்திற்கு வழங்கப்படும் 15 நாட்களுக்கான ஊதியத்தை குறிக்கிறது. அதே நேரம் 26 என்பது ஒரு மாதத்தில் இருக்கும் தோராயமான வேலை நாட்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது.
ரூ.45,000 சம்பளம் பெறும் ஒருவருக்கு எவ்வளவு கிராஜுவிட்டி கிடைக்கும்?: 6 வருடம் ஒரு நிறுவனத்தில் இருந்து ரூ.45,000 சம்பளம் பெறும் ஒருவருக்கு கிராஜுவிட்டியாக 1,55,769 ரூபாய் கிடைக்கும்.
கிராஜுவிட்டி தொகை = 45,000 x (15/26) x 6 = ரூ. 1,55,769 -ஆக இருக்கும்.
ஒரு ஊழியரின் விசுவாசத்தை அங்கீகரித்து நிறுவனத்தால் கிராஜுவிட்டி தொகை வழங்கப்படுகிறது. ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் ஓய்வு பெறும்போது அல்லது நிறுவனத்தில் இருந்து ரிசைன் செய்யும்போது நிதி பாதுகாப்பாக இந்த தொகை விளங்குகிறது.


Click it and Unblock the Notifications