ஹோம் லோன் ஒரு நீண்ட கால கடன் என்பது அனைவரும் அறிந்ததே. பெரும்பாலான மக்கள் தங்களுடைய கனவு வீட்டை சொந்தமாக்கிக் கொள்ள ஹோம் லோன் பெறுகின்றனர். ஆனால் அதை வழங்குவதற்கு முன்பு வங்கிகள் பல்வேறு விஷயங்களை கருத்தில் கொள்ளும்.. அதன் பிறகு தான் எவ்வளவு தொகையை கடனாக வழங்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும். இதற்கு உங்களுடைய சிபில் ஸ்கோர் முக்கியம். இதைத் தவிர உங்கள் சம்பளத்தின் அடிப்படையிலும் கடன் தொகை தீர்மானிக்கப்படும்.
எவ்வளவு கடன் பெற முடியும்?: கடன் பெற முக்கியமாக தேவைப்படுவது சிபில் ஸ்கோர் மற்றும் வருமானம். இந்த ஒரு ஸ்கோரை வைத்தே வங்கிகள் உங்களுடைய கடன் திருப்பிச் செலுத்தும் திறன், ஏற்கனவே நீங்கள் வாங்கிய கடனை சரிவர திருப்பி செலுத்தி இருக்கிறீர்களா? தவணையை தவறவிட்டீர்களா? கடைசியாக நீங்கள் வாங்கிய கடன் எப்போது அடைக்கப்பட்டது? என்ற அனைத்து விவரங்களையும் தெரிந்து கொண்டு விடும். இதை வைத்தே நீங்கள் கடனை சரியாக திருப்பிச் செலுத்துவீர்களா என்று மதிப்பீடு செய்துவிடும்.

வருமானத்தை பொறுத்தவரையில் வங்கிகள் இரண்டு விஷயங்களை கவனிக்கும். முதலாவதாக உங்களுடைய நிகர வருமானம் எவ்வளவு? இரண்டாவதாக உங்கள் வருமானத்தின் நிலை தன்மை. நிகர வருமானம் என்பது நீங்கள் ஒரு நிறுவனத்தில் சேரும்போது வழங்கப்படும் அப்பாயின்மென்ட் லெட்டர் அல்லது பே ஸ்லிப் போன்றவற்றில் கொடுக்கப்பட்டிருக்கும். இது உங்கள் மொத்த சம்பளத்தை குறிக்கிறது. ஆனால் உங்கள் வங்கி கணக்குக்கு வரும் மொத்தத் தொகையையும் வங்கிகள் கருத்தில் கொள்ளாது. இதில் நீங்கள் செய்யும் முதலீடுகள், சுகாதார காப்பீட்டு திட்டங்கள், வருமான வரி போன்ற அனைத்து விஷயங்களையும் கழித்துவிட்டு அதன் பிறகு உங்கள் கணக்கில் இருக்கும் சம்பளம் தான் நிகர வருமானம்.
வீட்டுக் கடன் தகுதி: உங்கள் நிகர வருமானத்தின் அடிப்படையில் தான் வீட்டுக் கடன் தீர்மானிக்கப்படும். இது தவிர நீங்கள் ஏற்கனவே ஈஎம்ஐ செலுத்துகிறீர்களா? என்பதையும் வங்கிகள் கருத்தில் கொள்ளும்.
அடுத்ததாக வங்கிகள் கருத்தில் கொள்வது உங்கள் வருமானத்தின் நிலைத்தன்மை. நீங்கள் எவ்வளவு நம்பகமான பணியில் இருக்கிறீர்கள் என்பதை இது குறிக்கிறது. பெரு நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவருக்கு வங்கி அதிகம் முன்னுரிமை அளிக்கும். முழு நேர ஊழியர்கள், ஆலோசகர்கள் போன்றவர்களுக்கு கடன் பெறுவதற்கான வாய்ப்புகள் சற்று அதிகமாக இருக்கும். ஏனெனில் அவர்களின் வருமானம் நிலையாக இருக்கும் என்று கருதப்படும். உங்கள் வருமானம் நிலையானதாக இருந்தால் பிற காரணிகள் பலவீனமாக இருந்தாலும் வங்கிகள் உங்களுக்கு கடன் வழங்க முன்வரும்.
மல்டிபிளேயர் ரூல்: வங்கிகள் மல்டிபிளேயர் என்ற விதியை பயன்படுத்தி தான் உங்களுடைய லோன் தொகையை தீர்மானிக்கும் .மேலே கூறப்பட்டுள்ள காரணங்களுக்கு கூடுதலாக இந்த விதியை கொண்டு ஒருவரின் லோன் தகுதி என்ன என்பதை வீட்டில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். இதை ஒரு உதாரணத்தோடு பார்ப்போம். ஒருவரின் வருமானத்தை விட நான்கு மடங்கு வரை கடன் வழங்க வங்கிகள் முன் வரும். உதாரணமாக உங்கள் மாத சம்பளம் ரூ.1 லட்சம் என்றால் ஆண்டு சம்பளம் ரூ.12 லட்சம். இத்தகைய சூழ்நிலையில் வங்கிகள் உங்களுக்கு அதிகபட்சமாக ரூ. 50 லட்சம் வரையில் கடன் வழங்கும்.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications