இந்தியாவில் மத்திய அரசு பணிகளில் குறிப்பாக ஐஏஎஸ், ஐபிஎஸ் ஐஎஃப்எஸ் போன்ற உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கான சம்பளமும் சம்பள கமிஷனின் பரிந்துரையின் அடிப்படையில் தான் நிர்ணயம் செய்யப்படுகிறது.
ஐஏஎஸ் அதிகாரிகள்: சிவில் சர்வீசஸ் தேர்வுகளை எழுதி அதன் பிறகு முறையாக பயிற்சி பெற்றவர்களே ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் போன்ற பதவிகளில் அதிகாரிகளாக நியமனம் செய்யப்படுகின்றனர். நாட்டின் அரசு மேலாண்மையில் மிக முக்கியமான பணிகளில் இவர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். சட்டம் ஒழுங்கு ,வெளிநாட்டு கொள்கை முடிவு என முக்கியமான முடிவுகளை எடுக்கக்கூடிய பொறுப்புகளில் இத்தகைய ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ், ஐஎஃப் எஸ் அதிகாரிகள் இருக்கின்றனர்.

லெவல் 10 முதல் லெவல் 18 வரை : ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்புகளை முடித்தவர்களை பொறுத்தவரை அவர்களுக்கு இந்தியாவில் அவர்களின் பணி அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் கிடைக்கிறது. லெவல் 10 முதல் லெவல் 18 வரை இவர்களுக்கான சம்பளம் வழங்கப்படுகிறது. நுழைவுநிலை ஐஏஎஸ் அதிகாரிகள் தொடங்கி, அமைச்சரவை செயலாளர் வரை இவர்கள் பதவி உயர்வு இருக்கிறது. இப்படி உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு 8ஆவது சம்பள கமிஷன் 2, 2.25, 2.50 ஆகிய மூன்றில் ஏதேனும் ஒரு ஃபிட்மெண்ட் ஃபேக்டரை கொண்டு சம்பள உயர்வு வழங்கலாம் என சொல்லப்படுகிறது.
சம்பளம் எவ்வளவு உயரும்?: இதன் படி பார்த்தால் நுழைவுநிலையில் பணியில் இருக்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கு லெவல் 10இன் படி சம்பளம் வழங்கப்படுகிறது. தற்போது இவர்களின் அடிப்படை ஊதியம் 56,000 ரூபாய் முதல் 1,77,000 ரூபாய் வரை இருக்கிறது. தொடக்கநிலையில் 56,000 ரூபாய் அடிப்படை ஊதியம் வாங்கும் நபர்களுக்கு ஃபிட்மெண்ட் ஃபேக்டர் 2 என கொண்டால் அடிப்படை சம்பளம் 1,12,200 ரூபாய் என உயரும், இதுவே 2.25 என வைத்து கொண்டால் 1,26,225 ரூபாய் என்றும் , 2.50 என கொண்டால் 1,40,250 ரூபாய் என்றும் உயர்வு காணும்.

செயலாளர் சம்பளம் எவ்வளவு உயரும்?: அமைச்சரவை செயலாளர் அளவில் லெவல் 18 பிரிவில் இருக்கக்கூடிய ஐஏஎஸ் அதிகாரிகளின் அடிப்படை சம்பளம் 2,50,000 ரூபாயாக இருக்கிறது . ஃபிட்மெண்ட் ஃபேக்டர் 2 என கொண்டால் அடிப்படை சம்பளம் 5,00,000 ரூபாய் என உயரும், இதுவே 2.25 என வைத்து கொண்டால் 5,62,500 ரூபாய் என்றும் , 2.50 என கொண்டால் 6,25,000 ரூபாய் என்றும் உயர்வு காணும்.
8ஆவது சம்பள கமிஷன் பற்றிய அறிவிப்பு மட்டும் வெளியாகி இருக்கிறதே தவிர அதன் உறுப்பினர்கள், வரையறைகள் குறித்த அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை. உறுப்பினர்களை நியமனம் செய்த பின்னர் அவர்கள் தற்போதைய சம்பளம், விலைவாசி உயர்வு ஆகியவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு ஃபிட்மண்ட் ஃபேக்டரை நியமனம் செய்து அதன் அடிப்படையில் சம்பள உயர்வுக்கான பரிந்துரையை வழங்குவார்கள்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications