ரஷ்யாவின் எண்ணெய் வர்த்தகத்தில் மேற்கத்திய நாடுகளின் உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்திற்காக பொருளாதாரத் தடைகள் விதித்தது. இதன் மூலம் இந்தியாவுக்குப் பெரிய அளவிலான லாபம் கிடைத்துள்ளது என்றால் மிகையில்லை.
ரஷ்யா - உக்ரைன் போர் துவங்கி முழுமையாக ஒரு ஆண்டு முடிந்த நிலையில் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய் மூலம் கடந்த ஒரு வருடத்தில் இந்திய அரசு சுமார் 3.6 பில்லியன் டாலர் அளவிலான தொகையை மிச்சப்படுத்தியுள்ளது என கணிக்கப்பட்டு உள்ளது, சொல்லப்போனால் இந்த தொகை அதிகமாக கூட இருக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
காரணம் கடந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதத்தில் இருந்து இந்திய அரசு ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. பல மாதங்களில் இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் சப்ளையர் நாடான ஈரான்-ஐ முந்தியுள்ளது. இதேவேளையில் இந்தியா ரஷ்யாவிடம் இருந்த அதிகப்படியான கச்சா எண்ணெய் வாங்க முக்கியமான காரணம் ரஷ்ய அரசு இந்தியாவுக்கு 35-40 சதவீத தள்ளுபடியில் கச்சா எண்ணெய் அளித்து வருகிறது.
ரஷ்யா
மே 2022ல் ரஷ்யாவிலிருந்து வரும் கச்சா எண்ணெய் விலை சராசரியாக இந்திய இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 110 டாலராக இருந்த நிலையில் 16 டாலர் குறைவான விலைக்கு விற்கப்பட்டன. இதை தொடர்ந்து ரஷ்யா இந்தியாவிற்கு விற்கப்படும் ஒவ்வொரு பேரலுக்கும் 30 டாலர்கள் வரையில் தள்ளுபடி கொடுத்தது.
மேற்கத்திய நாடுகள்
இந்த நிலையில் மேற்கத்திய நாடுகள் ரஷ்ய கச்சா எண்ணெய் மீது 60 டாலர் என்ற விலை நிர்ணயத்தை கொண்டு வந்தனர். இதனால் ரஷ்யா இந்த 60 டாலர் விலை திட்டத்தை ஏற்கும் எந்தொரு நாட்டிற்கும் கச்சா எண்ணெய் சப்ளை செய்ய முடியாது என அறிவித்தது. இதனால் உபரி கச்சா எண்ணெய் மொத்தத்தையும் இந்தியா, சீனா பக்கம் திருப்ப முடிவு செய்துள்ளது ரஷ்யா.
இந்தியா - ரஷ்யா
இதேவேளையில் இந்தியா - ரஷ்யா மத்தியில் நாணய பரிமாற்றத்தை உள்நாட்டு நாணயங்கள் வாயிலாக செய்ய திட்டமிட்டு இதற்கான பணிகள் வேக வேகமாக நடந்து வரும் காரணத்தால் இனி வரும் காலத்தில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்க டாலர் தேவைப்படாது, இந்திய ரூபாய் வாயிலாகவே வாங்க முடியும்.
ரஷ்ய கச்சா எண்ணெய்
பிப்ரவரி மாதம் இந்தியா இறக்குமதி செய்யும் ரஷ்ய கச்சா எண்ணெய்-க்கு பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒப்பிடும் போது 12-15 டாலர் அளவிலான தள்ளுபடி அளிக்கப்பட்டு உள்ளது. இது அக்டோபர் மாதத்தில் 5-8 டாலராக இருந்தது, நவம்பரில் 10-11 டாலராக இருந்தது.
விலை குறைப்பு
இதேபோல் ரஷ்யா கச்சா எண்ணெய் மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தடை விதித்த நிலையில் ஆசியாவுக்காக கச்சா எண்ணெய் விலையை பெரிய அளவில் குறைத்துள்ளது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்தை வெளிநாட்டு இறக்குமதி வாயிலாக ஈடு செய்கிறது.
தனியார் நிறுவனங்கள்
ரஷ்யாவின் தள்ளுபடி கச்சா எண்ணெய் இந்திய அரசு மட்டும் அல்லாமல் இந்தியாவில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் போன்றவை வாங்கி பிரிட்டன், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து பெரும் லாபத்தை பெற்று வருகிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications