சென்னை: இந்தியாவில் ஐடி துறை சார்ந்த வேலைகள் என்றாலே அதிக சம்பளம் கொடுக்கக் கூடிய ஒரு வேலை என்ற மனநிலை தான் அனைவரிடமும் இருக்கிறது. பல்வேறு பெற்றோரும் கூட தங்களுடைய பிள்ளைகள் 12 ஆம் வகுப்பு முடித்தவுடன் ஐடி துறை சார்ந்த படிப்புகளை படிக்கும்படி ஊக்குவிப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.
ஐடி வேலை: ஐடி நிறுவனங்களில் வேலை கிடைத்துவிட்டால் நல்ல சம்பளம் கிடைக்கும் வெளிநாட்டில் சென்று வேலை செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் . ஆனால் அண்மைக்காலமாக இந்த நிலவரம் படிப்படியாக மாறி வருகிறது. இந்தியாவில் தற்போது ஐடி துறை மந்த நிலையில் இருக்கிறது. டிசிஎஸ் உள்ளிட்ட பல்வேறு ஐடி நிறுவனங்களும் ஊழியர்கள் பணி நீக்கம், புதிதாக ஆட்களை வேலைக்கு தேர்வு செய்யாமல் இருப்பது என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றன.

எவ்வளவு சம்பளம்: இந்த சூழலில் ஐடி துறையில் வேலை பார்க்கக் கூடிய ஒரு நபர் கடந்த நான்கு ஆண்டுகளில் தங்களுக்கு எவ்வளவு சம்பளம் உயர்ந்து இருக்கிறது என்ற உண்மையை போட்டு உடைத்து உள்ளார். ஒரு பன்னாட்டு ஐடி நிறுவனத்தில் வேலை செய்யக்கூடிய ஒரு நபர் ரெடிட் தளத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில் ஆண்டுக்கு 4 லட்சம் ரூபாய் சம்பளத்தில் முதலில் எனக்கு வேலை கிடைத்தது. அதன் பிறகு பதவி உயர்வுகள் கிடைத்தன. ப்ராஜெக்ட் மேனேஜ்மென்ட் பிரிவில் நல்ல பதவியில் வேலை பார்க்கிறேன்.தற்போது நான்கு ஆண்டுகள் ஆகின்றன இப்பொழுது என்னுடைய சம்பளம் எவ்வளவு தெரியுமா ஓராண்டுக்கு 6.5 லட்சம் தான் என கூறியுள்ளார்.
4 ஆண்டுகளில் எவ்வளவு உயர்வு: 4 லட்சம் ரூபாய் ஆண்டு சம்பளத்தில் நான் வேலையை தொடங்கினேன் நான்காண்டுகளில் என்னுடைய சம்பளம் 6.5 லட்சம் ரூபாயாக தான் வளர்ந்து இருக்கிறது என கூறி இருக்கிறார். ப்ராஜெக்ட் மேனேஜ்மெண்ட் பிரிவில் பெரிய அளவு சம்பள உயர்வு கிடைக்காததால் சைபர் செக்யூரிட்டி உள்ளிட்ட பிரிவுகளுக்கு மாறிவிடலாமா என யோசிப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். ஐடி துறையில் நல்ல சம்பள உயர்வு கிடைக்கும் என நான் எதிர்பார்த்தேன் ஆனால் நான் எதிர்பார்த்த சம்பள உயர்வு கிடைக்கவில்லை எனக்கு அறிவுரை கூறுங்கள் என ரெடிட் தளத்தில் அவர் அறிவுரை கேட்டுள்ளார்.
ஃபிரஷருக்கு எவ்வளவு சம்பளம்: அவருடைய இந்த பதிவு ஐடி துறையில் வழங்கப்படும் சம்பள உயர்வு குறித்த உண்மையை போட்டு உடைக்கும் வகையில் அமைந்திருக்கிறது. முன்னதாக இண்டீட் நிறுவனம் பே மேப் என்ற பெயரில் ஒரு சர்வே நடத்தியது. அதன்படி இந்தியாவில் ஐடி துறையில் ஃபிரஷர் நிலையில் பணியாற்றக்கூடிய ஊழியர்களுக்கு மாதத்திற்கு சராசரியாக 28,600 ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது.
பணி அனுபவம் இருந்தால்: இதுவே 5 முதல் 7 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்ட ஊழியர்களுக்கு 68,000 ரூபாய் மாதாந்திர சராசரி சம்பளமாக வழங்கப்படுகிறது. பிராடெக்ட் மற்றும் ப்ராஜெக்ட் மேனேஜ் மெண்ட் பிரிவில் பணி அனுபவம் கொண்டவர்கள் மாதம் 85,000 ரூபாயும், யுஎஸ் டிசைனர்களாக வேலை செய்பவர்களுக்கு மூத்த வடிவமைப்பாளர்களுக்கு 65 ,000 வரை சம்பளம் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications