சர்வதேச பொருளாதாரம் ஒரு மெல்லிய நூலில் தொங்கி கொண்டிருக்கிறது. ஒருபுறம் டொனால்ட் ட்ரம்ப் - ஈரான் இடையிலான போர் முழக்கம், மறுபுறம் நிலைகுலைந்து வரும் உலகளாவிய எரிசக்தி சங்கிலி. இந்த மோதலால் சர்வதேச சந்தையில் சுமார் 2.5 டிரில்லியன் டாலர் மதிப்பிலான கடன் பத்திரங்கள் ஏற்கனவே ஆட்டம் காணத் தொடங்கி விட்டன.
இந்த அதிர்வலைகள் இந்திய வங்கிகளையும் தாக்குமா? என்ற அச்சத்தில், இந்திய ரிசர்வ் வங்கி இப்போது ஒரு அதிரடியான செக்-லிஸ்ட் உடன் களமிறங்கியுள்ளது. மேற்கு ஆசிய நாடுகளில் இந்திய வங்கிகள் வைத்துள்ள நேரடி மற்றும் மறைமுக முதலீடுகள் எவ்வளவு? போர் தீவிரமானால் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு பண வரத்து என்ன ஆகும் என ஒவ்வொரு வங்கிக் கிளையிடமிருந்தும் கணக்குகளை கேட்டுள்ளது.

வளைகுடா நாடுகளில் சிக்கியிருக்கும் இந்திய வங்கிகளின் பணம் பாதுகாப்பானதா? சாதாரண சேமிப்பு தாரர்களுக்கு இதனால் பாதிப்பு வருமா? இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பை பாதுகாக்க ரிசர்வ் வங்கி வகுத்துள்ள அந்த வியூகம் என்ன என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
மேற்கு ஆசிய நாடுகளில் இந்திய வங்கிகள் கொண்டுள்ள நேரடி மற்றும் மறைமுக முதலீடுகள் குறித்த முழு விவரங்களையும் சமர்ப்பிக்குமாறு வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அதிரடியான ஒரு உத்தரவை விடுத்துள்ளது.
மேற்கு ஆசிய பிராந்தியமானது, இந்தியாவிற்கு வெளிநாட்டு பணத்தை அனுப்பி வைப்பதில் முதலிடத்தில் உள்ளது. போர் நீடித்தால், அங்கிருந்து வரும் பணவரத்து மற்றும் அங்குள்ள இந்திய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் பாதிக்கப்படக்கூடும் என்பதால், ஆர்பிஐ இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
எந்தெந்த விவரங்களை ஆர்பிஐ கேட்டுள்ளது?
வங்கிகளிடம் இருந்து பின்வரும் முக்கிய தரவுகளை மத்திய வங்கி கோரியுள்ளது:
இந்திய நிறுவனங்களின் கிளைகள்: மேற்கு ஆசிய பகுதியில் துணை நிறுவனங்களை (Subsidiaries) கொண்டுள்ள இந்திய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள்.
ஏற்றுமதி - இறக்குமதி: அந்த பிராந்தியத்துடன் மிகப்பெரிய அளவில் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களின் நிலை.
சில்லறை வங்கிச் சேவை: வளைகுடா நாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள், இந்தியாவில் வாங்கியுள்ள வீட்டுக் கடன்கள் மற்றும் இதர கடன்கள். போர் சூழலால் அவர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டால், அந்த கடன்கள் நிலை பற்றி தெரிந்து கொள்ளவும் கேட்க்ப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
வங்கிகள் நேரடியாக அந்த பிராந்தியத்தில் உள்ள நிறுவனங்களுக்கு கொடுத்த கடன் குறைவாக இருக்கலாம். ஆனால் மேற்கு ஆசிய நிறுவனங்களோடு நெருங்கிய வணிக தொடர்பு வைத்துள்ள இந்திய நிறுவனங்கள் அதிகம் இருக்கலாம். அத்தகைய நுணுக்கமான தரவுகள் ரிசர்வ் வங்கியின் வழக்கமான அறிக்கைகளில் இடம் பெறுவதில்லை. ஆனால், தற்போதைய நிச்சயமற்ற சூழலில் இத்தரவுகள் மிகவும் அவசியம் என கூறப்படுவதாகவும், இதனால் ரிசர்வ் வங்கி இது குறித்த தரவுகளையும் கேட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போதைக்கு ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியை தடுத்து, சந்தையில் பணப்புழக்கத்தை ஆர்பிஐ உறுதி செய்து வருகிறது. இருப்பினும் போர் நீடித்தால் அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில் (Q1 FY27) வங்கிகளின் நிதிநிலை அறிக்கையில் இதன் தாக்கம் பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் தான் ஆர்பிஐ அதில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications