இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடிக்க வேகமாக வளர்ந்து வரும் கௌதம் அதானிக்கு NSDL அமைப்பு 3 FPI கணக்குகள் மீது எடுத்த நடவடிக்கை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை.
அதானி குழுமத்தின் மிக முக்கிய நிறுவனங்களாகக் கருதப்படும் அதானி எண்டர்பிரைசர்ஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி டிரான்ஸ்மிஷன், அதானி டோட்டல் கேஸ் ஆகிய நிறுவனங்களின் 43500 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை முதலீடு செய்து கைப்பற்றியுள்ள அல்புலா இன்வெஸ்ட்மென்ட் பண்ட், கிரெஸ்டா பண்ட் மற்றும் ஏபிஎம்எஸ் இன்வெஸ்ட்மென்ட் பண்ட் ஆகிய 3 வெளிநாட்டு முதலீட்டு நிறுவன கணக்குகளை NSDL அமைப்பு ஹோல்டு செய்து வைத்துள்ளது.

இந்த நடவடிக்கைக்குப் பின் பல காரணங்கள் இருப்பதாகக் கூறப்பட்டாலும் உண்மையான விளக்கத்தையும், காரணத்தையும் NSDL அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
அல்புலா இன்வெஸ்ட்மென்ட் பண்ட், கிரெஸ்டா பண்ட் மற்றும் ஏபிஎம்எஸ் இன்வெஸ்ட்மென்ட் பண்ட் நிறுவன கணக்குகள் மீது NSDL நடவடிக்கை எடுத்த பின்பு அதானி குழும பங்குகளின் மதிப்பு பெரிய அளவில் சரிந்துள்ளது.
இந்தச் சரிவின் மூலம் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு கடந்த 4 நாட்களில் மட்டும் சுமார் 14 பில்லியன் டாலர் இழந்துள்ளார். இதுமட்டும் அல்லாமல் உலகப் பணக்காரர்கள் மத்தியில் 4 நாட்களில் 14 பில்லியன் டாலர் அளவிலான சந்தித்தது கௌதம் அதானி தான் என்றும் கூறப்படுகிறது.
இந்தச் சரிவு மூலம் இந்தியா மற்றும் ஆசிய பணக்காரர் பட்டியலில் முகேஷ் அம்பானியை முந்தி முதல் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற மிகப்பெரிய கனவு தற்போது தகர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications