இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கும் முகேஷ் அம்பானிக்கு இன்று பிறந்த நாள்.
இன்று 66வது பிறந்த நாள்-ஐ கொண்டாடும் முகேஷ் அம்பானி 2002 ஆம் ஆண்டு முதல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் நிர்வாக குழுவில் இருக்கிறார். இவருடைய நிர்வாகத்தின் கீழ் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பல மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது மட்டும் அல்லாமல் டெலிகாம், ரீடைல், நியூ எனர்ஜி, டெக், மீடியா, டிஜிட்டல் சேவை என பல துறையில் புதிதாக இறங்கியுள்ளார்.

திருபாய் அம்பானி தனது வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறையில் துவங்கிய காரணத்தால் முகேஷ் அம்பானி இன்ஸ்டியூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி கல்லூரியில் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார். வர்த்தகத்திஸ் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக அமெரிக்காவில் ஸ்டான்போர்டு கல்லூரியில் MBA பிடிக்க சேர்ந்தார். ஆனால் Dropout ஆகிவிட்டு நிறுவனத்தில் சேர்ந்தார்.
ஆசியாவின் பெரும் பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி சுமாப் 84.1 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் 13வது இடத்தில் உள்ளார். கடந்த வருடம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முகேஷ் அம்பானி நிர்வாகத்தின் கீழ் 100 பில்லியன் டாலர் வருவாய் அளவீட்டை தாண்டிய முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை பெற்றது. இந்த நிலையில் கடந்த 10 வருடத்தில் ரிலையன்ஸ் எப்படியெல்லாம் வளர்ச்சி அடைந்துள்ளது என
2014 - போர்ப்ஸ் தரவுகளின்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி 2014ல் 18.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்பைக் கொண்டிருந்தார். உலகின் பணக்காரர் பட்டியலில் 40 வது இடத்தில் இருந்தார்.
2015 - ஒரு வருடம் கழித்து 2015 இல், அம்பானியின் சொத்து $21 பில்லியனாக அதிகரித்தது. அதே ஆண்டு மும்பையில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜியால் அவருக்கு கவுரவ டாக்டர் ஆப் சயின்ஸ் வழங்கப்பட்டது. ஜியோவின் 4G சேவைகளை 27 டிசம்பர் 2015 அன்று இந்தியாவி அறிமுகம் செய்தது.
2016 - ஜியோவின் 4ஜி சேவைகளை வணிக ரீதியாக 5 செப்டம்பர் 2016 அன்று அறிமுகப்படுத்தியது. இதோடு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் AJIO அறிமுகப்படுத்திய ஆண்டு இது. அம்பானியின் சொத்து மதிப்பு 19.3 பில்லியன் டாலராக இருந்தது.
2017 - இந்த ஆண்டு முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு ரூ.23.2 பில்லியனாக உயர்ந்தது. போர்ப்ஸ் குளோபல் கேம் சேஞ்சர்ஸ் பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்தியர் என்ற பெருமையை முகேஷ் அம்பானி பெற்றார்.
2018 - ஒரு வருடத்தில், முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு கிட்டத்தட்ட இரண்டு மடங்கு உயர்ந்து 40.1 பில்லியன் டாலராக உயர்ந்தது உலகின் 50 சிறந்த தலைவர்களில் பட்டியலில் இடம்பெற்றார்.
2019 - அவரது சொத்து $50 பில்லியனைத் தொட்டது. இதன் மூலம் TIME 100 மிகவும் செல்வாக்கு மிக்க நபர்கள் 2019 பட்டியலில் இடம்பெற்றார். 10 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை கடந்த முதல் இந்திய நிறுவனமாக ரிலையன்ஸ் ஆனதும் இந்த ஆண்டு தான்.
2020 - கோவிட்-19 தொற்றுநோய் உலகைத் தாக்கிய ஆண்டு, முகேஷ் அம்பானியின் நிகர மதிப்பு சிறிய அளவில் பாதிக்கப்பட்டு 36.8 பில்லியன் டாலராகக் குறைந்தது.
2021 - 2020ல் முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு 40 பில்லியன் டாலருக்கும் கீழே சரிந்த பிறகு, ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 80 பில்லியன் டாலர்களை தாண்டி 84.5 பில்லியன் டாலராக உயர்ந்தது. இக்காலக்கட்டத்தில் தான் பல லட்சம் கோடி ரூபாயை டெலிகாம் மற்றும் ரீடைல் பிரிவில் முதலீட்டாக பெற்றது ரிலையன்ஸ்
2022 - 2022 ஆம் ஆண்டில் அவரது சொத்து இந்த ஆண்டு 90.7 பில்லியன் டாலராக உயர்ந்தது. இதன் மூலம் போர்ப்ஸின் உலகின் பில்லியனர்கள் 2022 பட்டியலில் 10 வது இடத்தைப் பிடித்தார்.
2023 - போர்ப்ஸ் பில்லியனர் 2023 பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையாளர், ஐபிஎஸ் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை பெற்று மைக்ரோசாப்ட் ஸ்டீவ் பால்மரை பின்னுக்கு தள்ளி உலகின் பணக்கார விளையாட்டு உரிமையாளராக ஆனார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications