இந்திய பங்குச்சந்தைகள் ஐடி சேவைக்காக எவ்வளவு செலவிடுகின்றன?

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளம் கடந்த வாரம் முடங்கி உலகளவில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. CrowdStrike சாப்ட்வேரின் அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதலால் தான் இந்த கோளாறு ஏற்பட்டது. விண்டோஸ் செயலிழப்பால் உலகம் முழுவதும் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கான பயணிகள் அவதி அடைந்தனர்.

மைக்ரோசாப்ட் முடக்கம் பங்குச்சந்தைகளையும் விட்டு வைக்கவில்லை. இதனால் உலகளவில் வர்த்தகமும் பாதித்தது. லண்டன் பங்குச்சந்தை உட்பட பெரும்பாலான பங்குச்சந்தைகளில் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் உலகளவில் ஒப்பிடுகையில் இந்தியாவில் பெரும்பான்மையான வங்கி, பங்குச்சந்தையில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. நாட்டில் உள்ள 10 வங்கிகளில் இடையூறுகள் ஏற்பட்டன. அவையும் தீர்க்கப்பட்டன என ரிசர்வ் வங்கி தெரிவித்தது.

இந்திய பங்குச்சந்தைகள் ஐடி சேவைக்காக எவ்வளவு செலவிடுகின்றன?

இந்தியா உட்பட அனைத்து பங்குச்சந்தைகளும் தங்கள் செயல்பாடுகளுக்கு ஐடி நிறுவனங்களிடம் கோடி கோடியாக வழங்குகின்றன. மைக்ரோசாப்ட் முடக்கத்தால் பாதிக்கப்பட்ட லண்டன் பங்குச் சந்தை ஐடி நிறுவனங்களுக்கு ரூ. 6,556 கோடி செலவிடுகிறது. அமெரிக்காவின் நாஸ்டாக் ரூ.1,949 கோடியை செலவிடுகிறது.

ஆனால் இந்தியாவின் தேசிய பங்குச் சந்தை ரூ.570 கோடியை IT செலவினங்களுக்காகச் செலவிடுகிறது. இவ்வளவு செலவு செய்து வருவாய் எவ்வளவு ஈட்டப்படுகிறது என பார்த்தால் நாஸ்டாக் 32,574 கோடி ரூபாயும், இந்திய பங்குச்சந்தை 12,692 கோடி ரூபாயும் வருமானமாக ஈட்டுகிறது.

இந்தியாவில் பங்குச் சந்தைகள், நிதிச் சந்தைகள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் அமைப்பு செபி ஆகும். இது ஆண்டுக்கு தகவல் தொழில்நுட்ப சேவைகளுக்கு 93 கோடி ரூபாய் செலவிடுகிறது. இதுவும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவாகும். குறைந்த செலவில் சிறந்த வருமானம் ஈட்டும் அமைப்பாக இந்திய பங்குச்சந்தை செயல்படுகிறது என்பதற்கு இது உதாரணம்.

இதனிடையே மைக்ரோசாப்ட் முடக்கத்தால் இந்திய பங்குச் சந்தைகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் என்ன என்பதை குறித்து பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சிலை சேர்ந்த சஞ்சீவ் சன்யால் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் பன்முகத்தன்மை ஏன் முக்கியமானது என்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது எனக் கூறியுள்ளார். ஒருங்கிணைந்த ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட உலகளாவிய அமைப்பு என்பது ஒரு மோசமான யோசனையாகும் எனக் கூறியுள்ளார். குறைவான அளவில் ஒருங்கிணைந்த அமைப்பு திறனற்றதாக தோன்றலாம், ஆனால் அதுதான் அனைவரும் பயன்படுத்தக்கூடிய வகையில் நெகிழ்வுத் தன்மை கொண்டதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் செயற்கை நுண்ணறிவு ஒழுங்கு முறைக்கான ஒரு கட்டமைப்பை பரிந்துரைத்துள்ளார். ஒரு புதிய சிறப்பு செயற்கை நுண்ணறிவு ஒழுங்குமுறைக்கு ஒரு பரந்த நோக்கம் மற்றும் அல்காரிதங்களின் தேசிய பதிவேடு ஆகியவற்றை அறிமுகப்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார். செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் சிஏஎஸ் போலவே செயல்படுகின்றன. எனவே எதிர்பாராத விதமாக இதில் சிறிய மாற்றங்கள் ஏற்பட்டால் கூட அது பெரிய அளவிலான எதிர்பாராத விளைவுகளுக்கு வழிவகுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+