பிரயாக்ராஜ், உத்தரபிரதேசம்: உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் உத்தர பிரதேச மாநிலத்திற்கு பயணம் செய்து திரிவேணி சங்கத்தில் புனித நீராடி வருகின்றனர். ஜனவரி 13ஆம் தேதி துவங்கிய மகா கும்பமேளா 45 நாட்களுக்கு நடக்கும்.
ஏழை, பணக்காரன் என எந்த ஒரு வித்தியாசமும் இல்லாமல் அனைவருமே இந்த மகா கும்பமேளாவில் சென்று புனித நீராடி வருகின்றனர். அந்த வகையில் மகா கும்பமேளாவிற்கு சென்று வருவதற்கு எவ்வளவு செலவாகும் என்பது குறித்த விரிவான பதிவை நாம் தற்போது தெரிந்து கொள்ள போகிறோம்.

மகா கும்பமேளா நிகழ்ச்சியை பொறுத்தவரை நமக்கு இலவசமாக உணவு வழங்கக்கூடிய கம்யூனிட்டி கிச்சன்களும் இருக்கின்றன இலவச டென்டுகளும் இருக்கின்றன . நாம் சொகுசாக தங்க வேண்டும் என நினைத்தால் அதற்கேற்றபடி தங்குமிடங்களும் இருக்கின்றன . ஒருவருடைய பட்ஜெட்டை அடிப்படையாகக் கொண்டு அவர் தன்னுடைய பயணத்திட்டத்தை மேற்கொள்ளலாம்.
உதாரணமாக உத்தரபிரதேச மாநிலம் அசாம்காரை சேர்ந்த ஒரு விவசாயி ராமச்சந்திரன். இவர் ரயில் மூலம் பிரயாக்ராஜுக்கு வருகை தந்துள்ளார். அங்கிருந்து கும்பமேளா நடைபெறும் இடத்திற்கு 18 கிலோமீட்டர் நடந்தே சென்று பணத்தை மிச்சப்படுத்தியதாக கூறியிருக்கிறார். இலவச கம்யூனிட்டி கிச்சன்களில் உணவு பெற்றுக் கொண்டதாக அவர் கூறுகிறார். மொத்தமாகவே தான் 200 ரூபாய் வரை தான் செலவு செய்திருப்பேன் எனக் கூறியிருக்கிறார்.
மிடில் இன்கம் பிரிவை சேர்ந்தவர்கள் சென்று வர வேண்டும் என்றால் இரண்டு பேருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
உதாரணமாக ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த சுதர்ஷர்மா என்பவர் தன்னுடைய மனைவியுடன் மகா கும்பமேளா நிகழ்ச்சிக்காக சென்றிருக்கிறார். ரயிலில் அங்கு சென்று அவர் ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கி உள்ளூரில் இருக்கும் உணவகங்களில் உணவு உண்டிருக்கிறார். இருவருக்கும் சேர்த்து அவர் 25 ஆயிரம் ரூபாயை செலவு செய்ததாக கூறுகிறார்.
கும்பமேளா நடைபெறும் இடத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்ததாகவும் அதற்கு ஒரு நாளைக்கு 7500 வாடகை செலுத்தியதாகவும் கூறுகிறார். அதே போல உள்ளூர் உணவகங்களில் ஒரு வேளைக்கு 350 என்ற அளவில் தாங்கள் உணவு உட்கொண்டதாகவும் அவர் கூறுகிறார்.
மகா கும்பமேளா பயணம் சொகுசு பயணமாக அமைய வேண்டும் என எண்ணுபவர்கள் இரண்டு லட்சம் ரூபாய் வரை செலவிட முடியுமாம். குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த ஹேமத் சபாரியா என்ற தொழிலதிபர் மகா கும்பமேளா நிகழ்வுக்கு சென்று வந்ததற்கு தான் இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்வதாக கூறியிருக்கிறார்.
ஆடம்பரமான ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து தான் தங்கியதாகவும், ஒரு நாளைக்கு அதற்கு ஒரு லட்சம் ரூபாய் வாடகை செலுத்தியதாகவும் கூறுகிறார். அது தவிர பல்வேறு இடங்களில் உணவு உண்டது, வாகனங்களை பயன்படுத்தி சென்று வந்தது என மொத்தம் தனக்கு இரண்டு லட்சம் ரூபாய் செலவானதாக அவர் கூறியிருக்கிறார் .
மகா கும்பமேளா நிகழ்ச்சிக்கு சென்று வருவதற்காகவே ஒவ்வொருவரின் பட்ஜெட் ஏற்ற வகையில் பல்வேறு நிறுவனங்கள் டூர் பேக்கேஜ்களை வழங்குகின்றன. பிரீமியம் பேக்கேஜுகள் ஒரு நாளைக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கிறதாம். இதில் தங்குமிடம் உணவு ஆகியவை அடங்கும் என சொல்லப்படுகிறது.
தமிழ்நாட்டில் இருந்து செல்ல விரும்புபவர்கள் பட்ஜெட்டிற்குள் சென்று வர விரும்பினால் ரயில் மூலம் பிரயாக் ராஜ் சென்று இலவச கிச்சன்களில் உணவு, இலவச டெண்டுகளில் தங்குவது என இருந்தால் குறைந்த தொகையை செலவிட்டாலே போதும். இல்லையெனில் முன்கூட்டியே செயலிகள் வாயிலாக ஹோட்டல் அறைகளை புக் செய்தும் டூர் பேக்கேஜுகளை பயன்படுத்தியும் சென்று வரலாம்.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications