இன்றெல்லாம் விலைவாசி உயர்வு விண்ணை எட்டத் தொடங்கியுள்ளது. கைக்கு வரும் சம்பளம் குடும்பச் செலவுக்கே போதாமல் இருக்கும் சூழல் தான் நிலவி வருகிறது. அப்படி இருக்கையில் தங்களுடைய சிறு சிறு தேவைகளை நிறைவேற்ற பலர் தனிநபர் கடன்களைப் பெறுகின்றனர். எந்த கடன் வாங்கினாலும் சரி, அதை அசல் மற்றும் வட்டி ஆகிய இரண்டையும் சேர்த்து தான் செலுத்த வேண்டும். எனவே ஒருவர் கடன் பெறுவதற்கு முன்பு தங்களுடைய நிதிநிலை குறித்து தெரிந்து கொண்ட பின் கடன் பெற வேண்டும்.
இல்லை என்றால் தேவையில்லாமல் ஈஎம்ஐ சிக்கலில் சிக்க வேண்டிய நிலை ஏற்படலாம். தற்போது பெரும்பாலான வங்கிகள் தனிநபர் கடன்களுக்கு 10 முதல் 12 சதவீதம் வரையில் வட்டி வசூலிக்கின்றன. இந்த வட்டி விகிதம் வங்கிகளைப் பொறுத்து மாறுபடலாம்.

தனிநபர் கடன் வழங்கும்போது வங்கிகள் கிரெடிட் ஸ்கோர், வருமானம் ஆகியவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு தான் கடன் வழங்கும். அதிலும் குறிப்பாக உங்களுடைய சம்பளத்தின் அடிப்படையில் மட்டுமே கடன் தொகை நிர்ணயிக்கப்படுகிறது.கடன் தொகையை நிர்ணயிக்க வங்கிகள் மல்டிபிளையர் விதியை பயன்படுத்துகின்றன.
மல்டிபிளையர் விதி என்றால் என்ன? பெயரிலேயே குறிப்பிட்டிருப்பது போல ஒவ்வொரு வங்கியும் நீங்கள் பெரும் மாத சம்பளத்தை 10 முதல் 24 மடங்கு வரையில் கடனாக வழங்கும்.
மாத சம்பளம் x 24 = கடன் தொகை
இதை ஒரு உதாரணத்துடன் பார்ப்போம். ஒரு நபர் மாத சம்பளமாக ரூ. 40,000 பெறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் அவர் வங்கியில் இருந்து அதிகபட்சம் ரூ.9,60,000 வரையில் தனி நபர் கடன் பெற முடியும்.
அதேபோல ஒருவர் மாத சம்பளமாக 30,000 ரூபாய் பெறுகிறார் என்றால், கடன் தொகை ரூ.7,20,000- ஆக இருக்கும். ஒருவர் 20,000 ரூபாய் மாத சம்பளம் பெற்றால் கடன் தொகை ரூ.4,80,000 வரை இருக்கும். இந்த விதி ஒரு புறம் இருந்தாலும் கடன் தொகை உங்கள் கடன் வரலாறு, சிபில் ஸ்கோர், நிதிநிலை போன்ற பல விஷயங்களைக் கருத்தில் கொண்டும் தீர்மானிக்கப்படும். ஒரு நபரின் கடன் வரலாறு மற்றும் சிபில் ஸ்கோர் சிறப்பாக இருந்தால் அவர் குறைந்த வட்டியில் அதிகபட்ச கடன் பெற முடியும்.
கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன?: கிரெடிட் ஸ்கோர் சிபில் ஸ்கோர் என்றும் அழைக்கப்படுகிறது. இது 3 எழுத்து எண் ஆகும். இந்த எண் 300 முதல் 900 வரை இருக்கும். நீங்கள் ஏற்கனவே வாங்கிய கடனை சரிவர திருப்பிச் செலுத்தி இருக்கிறீர்களா? ஏதேனும் தவணையைத் தவற விட்டீர்களா? எந்தத் தேதியில் தவணையை செலுத்தி இருக்கிறீர்கள்? என்ற அனைத்து விவரங்களையும் வங்கிகள் இந்த ஒரே ஒரு கிரெடிட் ஸ்கோரை வைத்தே தெரிந்து கொண்டு விடும்.
எனவே உங்கள் கிரெடிட் ஸ்கோர் 750-க்கு மேல் இருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை. தாராளமாக வங்கிகள் உங்களுக்கு கடன் வழங்கும். ஆனால் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் 650-க்கும் குறைவாக இருந்தால் நீங்கள் நல்ல நிதி நடத்தை உடையவராக வங்கிகள் கருதாது. கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருந்தால் சிறப்பான வட்டி விகிதங்கள் மற்றும் விதிமுறைகளோடு கடன் பெற முடியும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications