நம் நாட்டு சாலைகளில் இப்போது படிப்படியாக எலக்ட்ரிக் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பராமரிப்பு மற்றும் பயணத்துக்கான செலவினம் மிக மிக குறைவு, மாசு ஏற்படாது போன்ற காரணங்களால் வாடிக்கையாளர்கள் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் தாக்கம் அதன் விற்பனையில் எதிரொலிக்கிறது.
கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 1,52,610 எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகி உள்ளது. இது முன்னெப்போதும் இல்லாத விற்பனை வளர்ச்சியாகும்.

நீங்கள் எலக்ட்ரிக் வாகனம் வாங்க விரும்பினால் அதற்கு முன் எலக்ட்ரிக் வாகனத்துடன் இணைக்கப்பட்ட செலவினங்கள் பற்றி முதலில் அறிந்து கொள்ள வேண்டும். எலக்ட்ரிக் வாகனங்களுடன் இணைக்கப்பட்ட செலவினத்தில் மிகப்பெரியது அதன் பேட்டரிகளின் விலைதான்.
இந்த வகையான வாகனங்களில் இது மிகவும் முக்கியமானது. வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பேட்டரி பேக்ஸ்க்கு 8 முதல் 10 ஆண்டுகள் உத்தரவாதம் கொடுக்கின்றன. இருப்பினும் அதற்கு மேலும் பேட்டரி ஆயுள் நீடிக்கும் என கூறப்படுகிறது.
பேட்டரியின் ஆயுட்காலம் முடிவடைந்து விட்டால் நாம் அதனை மாற்றித்தான் ஆக வேண்டும். பேட்டரி பேக் விலை அதிகம் என்றாலும் தற்போது பேட்டரி விலை குறைந்து வருவது ஒரு மகிழ்ச்சியான விஷயம்.
உதாரணமாக, 2022ல் ஒரு கிலோவாட் மணி நேரத்துக்கு (kWh) 161 டாலராக இருந்த பேட்டரி விலை இந்த ஆண்டு 139 டாலராக குறைந்துள்ளது. 2027ம் ஆண்டுக்குள் 100 டாலருக்கும் கீழ் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குடன் வருகின்றன. இதன்படி, பார்த்தால் இந்த ஆண்டில் எலக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரி மாற்றுவதற்கு நீங்கள் சுமார் ரூ.3 லட்சம் முதல் ரூ.4.5 லட்சம் வரை செலவிட வேண்டும்.
இருப்பினும், சந்தை மதிப்பீடுகளின்படி, கார் தயாரிப்பாளர்கள் பேட்டரியை மாற்றுவதற்கு 1 kWhக்கு சுமார் ரூ.15,000-ரூ.20,000 வரை வசூலிப்பதாக கூறப்படுகிறது. சில எலக்ட்ரிக் கார்களின் பேட்டரி பேக்கை மாற்றுவதற்கு ஆகும் செலவு குறித்து கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.
டாடா நெக்ஸான் இ.வி.: இந்த காரின் பேட்டரி (திறனை பொறுத்து) மாற்றுவதற்கு ரூ.3.33 லட்சம் முதல் ரூ.4.43 லட்சமாகும். ஆனால் டாடா நிறுவனம் தனது பேட்டரி விலையை வெளியிடவில்லை. மதிப்பீட்டின்படி, டாடா நெக்ஸான் இ.வி. பேட்டரியின் விலை ரூ.7 லட்சம் என்ற அளவில் அதிகமாக உள்ளது.
டாடா தியாகோ இ.வி.: நீங்கள் இந்த காரின் பேட்டரி மாற்ற ரூ.4.1 லட்சம் முதல் ரூ.5.1 லட்சம் மற்றும் தொழிலாளர் கட்டணமாக ரூ.10,000ம் செலவிட வேண்டியது இருக்கும் என்று தகவல்.
டாடா டிகோர் இ.வி.: இந்த மாடல் காரின் பேட்டரியை மாற்ற டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ.4.42 லட்சம் முதல் ரூ.6.5 லட்சம் வரை வசூலிப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
MG கமெட் இ.வி. இந்த காரின் பேட்டரியை மாற்றுவதற்கு ரூ.3.10 லட்சம் முதல் ரூ.3.7 லட்சம் வரை செலவாகும் என கூறப்படுகிறது.
MG இசட்எஸ் இ.வி.: இந்த மாடல் காரின் பேட்டரி மாற்றுவதற்கு ரூ.6.62 முதல் ரூ.8.50 லட்சம் வரை செலவிட வேண்டியது இருக்கும்.
மஹிந்திரா எக்ஸ்யுவி 400 இ.வி.: இந்த காரின் பேட்டரி மாற்றுவதற்கு தோராயமாக ரூ.5 லட்சம் செலவாகும் என தெரிகிறது.
ஹூண்டாய் கோனா: இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் எலக்ட்ரிக் கார்களில் மிகவும் காஸ்ட்லியான கார் என்றால் அது ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா தான். இந்த காரின் பேட்டரியை மாற்ற 11.9 லட்சம் ரூபாய் செலவாகும் என கூறப்படுகிறது.
எந்த அளவுக்கு சர்வதேச சந்தையில் பேட்டரி விலை குறைகிறதோ, அதன் வாயிலாக இந்தியாவிலும் பேட்டரி பேக் விலை குறையும். ஆனால் உற்பத்தி பிரச்சனை, விநியோக பிரச்சனை காரணமாக டிமாண்ட் அதிகமானால் கட்டாயம் விலை உயரும்.


Click it and Unblock the Notifications