பெங்களூரு: அமெரிக்க பொருளாதார மந்த நிலை அச்சம் காரணமாக இந்தியாவை சேர்ந்த ஐடி நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் கணிசமான அளவு குறைந்து இருக்கின்றன. இதனால் ஐடி நிறுவனங்களின் வருவாயும் குறையும் என சொல்லப்படுகிறது. இந்த சூழலில் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள் ஊழியர்களுக்கு எவ்வளவு ஊதிய உயர்வை வழங்கி இருக்கின்றன என்பதை நாம் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
EY Future of Pay 2025 என்ற தலைப்பில் வெளியாகிய இருக்கக்கூடிய அறிக்கையின் அடிப்படையில் இந்தியாவில் 2024 ஆம் ஆண்டு சராசரியாக 9.8 சதவீதமாக இருந்த ஐடி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு 2025 ஆம் ஆண்டில் 9.6 சதவீதமாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பல்வேறு பெரிய ஐடி நிறுவனங்களும் தங்களுடைய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கின்றன.

இதன்படி இன்போசிஸ் நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வை 5 -7 சதவீதமாக நிர்ணயம் செய்துள்ளது. 2022 ஆம் நிதி ஆண்டில் இது 10.5 சதவீதமாகவும் 2024 ஆம் நிதி ஆண்டில் 7- 9 சதவீதமாகவும் இருந்து, தற்போது குறைக்கப்பட்டு இருக்கிறது.
அதேபோல டிசிஎஸ் நிறுவனம் 2024 ஆம் ஆண்டில் தங்களுடைய ஊழியர்களுக்கு 9 சதவீதத்திலிருந்து ஊதிய உயர்வு வழங்கிய நிலையில் தற்போது அதனை 4-8 சதவீதமாக குறைத்து இருக்கிறது. விப்ரோ நிறுவனம் தங்களுடைய ஊழியர்களுக்கு மெரிட் அடிப்படையில் ஊதிய உயர்வை வழங்கி வருகிறது. அந்த வகையில் அதிகபட்ச செயல் திறனை காட்டிய ஊழியர்களுக்கு சராசரியாக 8 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெச்சிஎல் டெக் ஊழியர்களுக்கு 1- 2 சதவீதம் வரை மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. எல்டிஐ மைண்ட்ரீ நிறுவனத்தை பொருத்தவரை தங்களுடைய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதற்கு புதிதாக சில விதிமுறைகளை கொண்டு வந்திருக்கிறது. இதன்படி நிறுவனத்தில் மூத்த நிலையில் பணிபுரியக்கூடிய ப்ராஜெக்ட் லீட், மேனேஜர் மற்றும் லீட் ஆர்க்கிடெக் ஆகிய பணிகளில் இருக்கும் ஊழியர்கள் நிறுவனம் நடத்தும் போட்டி தேர்வில் கலந்துகொண்டு கோடிங் மற்றும் கணிதம் உள்ளிட்டவற்றில் சிறந்த தேர்ச்சி பெற வேண்டும்.
இந்திய ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி 2025 ஆம் ஆண்டில் 6-7 சதவீதமாக மட்டுமே இருக்கும் என நிறுவனங்கள் கணிப்பு வெளியிட்டுள்ளன. சர்வதேச பொருளாதார மந்த நிலை மற்றும் பல்வேறு வேலைகளும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் தானியங்கு முறைக்கு மாறுவது, அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு கொண்டு வந்திருக்கும் பல்வேறு கொள்கை மாற்றங்கள் ஆகியவை காரணமாக அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் ஐடிக்கான தங்களுடைய செலவினங்களை குறைத்து இருக்கின்றன. இது இந்தியாவை சேர்ந்த ஐடி நிறுவனங்களில் வருமானத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதுவே இந்த ஆண்டு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை குறைக்க காரணமாக சொல்லப்படுகிறது.
Written by: Devika
More From GoodReturns

லட்சக்கணக்குல சம்பளம் குடுக்கிறாங்கனு இந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க!! ஐடி ஊழியர்கள் தலையில் தொங்கும் கத்தி!!

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு 5 முறை பதவி உயர்வு.. இதுக்கு மேல என்ன வேண்டும் சொல்லுங்க..!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications