மும்பை: முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரி லிமிடெட் குழுமத்தின் தலைவராகவும் மேலாண் இயக்குனராகவும் செயல்பட்டு வருகிறார். இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராகவும் இவர் திகழ்ந்து வருகிறார்.
நிதி அறிக்கை: 2025 ஆம் நிதியாண்டில் ரிலையன்ஸ் குழுமம் முகேஷ் அம்பானிக்கு எவ்வளவு சம்பளம் வழங்கியது என்பது குறித்த சுவாரசியமான தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் 2025ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இந்த நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் தலைவர்களுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

முகேஷ் அம்பானி சம்பளம் எவ்வளவு: முகேஷ் அம்பானி 2025 ஆம் நிதி ஆண்டில் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து எந்த ஒரு சம்பளமும் பெறவில்லை என்பது இந்த நிதி அறிக்கை மூலம் வெளிவந்திருக்கிறது. 2021 ஆம் நிதி ஆண்டில் முகேஷ் அம்பானி கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டபோது தனக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வழங்க வேண்டிய சம்பளத்தை வேண்டாம் என மறுத்தார்.
கொரோனா காலம்: சம்பளம் மற்றும் அத்துடன் வரக்கூடிய எந்த ஒரு அலோவென்ஸ் மற்றும் நிதியும் எனக்கு வேண்டாம் என கூறி சம்பளம் பெறுவதை தவிர்த்தார். 2021 ஆம் நிதி ஆண்டில் தொடங்கிய அந்த நடைமுறையை தொடர்ந்து தற்போது வரை 2025 ஆம் ஆண்டு என தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக அவர் பின்பற்றி வருகிறார் . அதாவது கடந்த 5 ஆண்டுகளாக ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து முகேஷ் அம்பானி எந்த ஒரு சம்பளமும் பெறுவதில்லை.
நம்பர் 1 பணக்காரர்: முன்னதாக 2020 ஆம் ஆண்டில் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனத்திலிருந்து 15 கோடி ரூபாயை சம்பளமாக பெற்று வந்தார் . கொரோனா தோற்று காலத்தில் நிறுவனத்தின் சூழலை கருத்தில் கொண்டு நான்ல் சம்பளம் பெறப்போவதில்லை என அறிவித்தார் அதனை தற்போதும் தொடர்ந்து வருகிறார். முகேஷ் அம்பானியை பொறுத்தவரை 103.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்பு கொண்ட நபராக இருக்கிறார். இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராகவும் உலக அளவில் பதினெட்டாவது பணக்காரராகவும் திகழ்ந்த வருகிறார்.
பிள்ளைகளுக்கு சம்பளம்: முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி மகன்கள் ஆகாஷ் அம்பானி மற்றும் ஆனந்த் அம்பானி ஆகியோர் 2025 ஆம் நிதி ஆண்டில் 2.31 கோடி ரூபாயை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து சம்பளமாக பெற்று இருக்கின்றனர். இவர்கள் மூன்று பேருமே ரிலையன்ஸ் குழுமத்தில் எக்சிகியூடிவ் இயக்குனர்களாக பணிபுரிந்து வருகின்றனர். கடந்த ஆண்டு 1 கோடி ரூபாய் சம்பளம் பெற்ற இவர்கள் இந்த ஆண்டு சம்பள உயர்வு பெற்றுள்ளனர்.
அதே வேளையில் நிறுவனத்தின் முக்கியமான எக்ஸிகியூடிவ் டைரக்டராக செயல்பட்டு வரக்கூடிய நிகில் ஆர் மேஸ்வானி மற்றும் ஹிடல் ஆர் மேஸ்வானி ஆகிய இருவரும் தலா 25 கோடி ரூபாய் சம்பளமாக பெற்று இருக்கின்றனர்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications