மும்பை: இந்தியாவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் சந்தை மூலதன மதிப்பில் நாட்டிலேயே முதல் நிறுவனமாக இருக்கிறது. இதன் மூலம் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக இருப்பவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரான முகேஷ் அம்பானி.
ரிலையன்ஸ் குழுமம்: முகேஷ் அம்பானி தன்னுடைய தொழில்களில் படிப்படியாக இரண்டு மகன்கள் மற்றும் மகளுக்கு பொறுப்புகளை வழங்கி வருகிறார். இதில் முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானி அண்மையில் தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் எக்ஸிகியூடிவ் டைரக்டர் எனப்படும் செயல்பாட்டு இயக்குனர் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். முகேஷ் அம்பானியின் வாரிசுகளில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் முக்கிய பதவியைப் பெற்ற முதல் நபர் என்ற பெருமை ஆனந்த் அம்பானிக்கு கிடைத்தது.

ஆனந்த் அம்பானிக்கு முக்கியத்துவம்: இந்த நிலையில் நிறுவனத்தின் செயல்பாட்டு இயக்குநராக ஆனந்த் அம்பானிக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பங்குதாரர்களுக்கு அனுப்பி உள்ள நிதி சார்ந்த விவரங்களில் இந்த தகவல் இடம் பெற்றிருக்கிறது. முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி, மகள் ஈஷா அம்பானி மற்றும் இளைய மகன் ஆனந்த் அம்பானி ஆகிய மூன்று பேரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நான் எக்ஸிகியூட்டிவ் டைரக்டர்களாக 2023ஆம் ஆண்டு ஆகஸ்டில் நியமனம் செய்யப்பட்டனர்.
எவ்வளவு சம்பளம்: நான் எக்ஸிகியூட்டிவ் டைரக்டர்கள் பொறுப்பில் பணியாற்றுபவர்களுக்கு சம்பளம் எதுவும் கிடையாது. ஆனால் அவர்களுக்கு 2023-24 ஆம் ஆண்டில் 4 லட்சம் ரூபாய் பணம் வழங்கப்பட்டது, நிறுவனத்தின் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை கமிஷனாக வழங்கப்பட்டது. இவர்களில் எக்ஸிக்யூடிவ் டைரக்டராக தற்போது பணியாற்றி வரக்கூடிய ஆனந்த் அம்பானிக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் முறைப்படி சம்பளம் வழங்கியாக வேண்டும்.
ஆண்டு சம்பளம் வெளியீடு:அந்த வகையில் ஆனந்த் அம்பானிக்கு ஒரு ஆண்டுக்கு 10 கோடி ரூபாயில் இருந்து 20 கோடி ரூபாய் வரை சம்பளத் தொகுப்பாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அடிப்படை சம்பளம் மட்டும் இல்லாமல் வீட்டு வாடகை கொடுப்பனவு ,வீட்டு பராமரிப்பு செலவுகள் மற்றும் ஆனந்த் அம்பானியின் போக்குவரத்து செலவுகள் உள்ளிட்ட பல கொடுப்பனவுகள் இதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கொடுப்பனவுகள் என்னென்ன: மேலும் தொழில் சம்பந்தமாக அவரும் அவரை சார்ந்த குடும்பத்தினரும் பயணம் செய்யும்போது அதற்கான செலவுகளை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஏற்றுக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல அவருக்கும் அவரது குடும்பத்தினருக்குமான மருத்துவ செலவுகளை நிறுவனம் ஏற்றுக்கொள்ளும். இது தவிர நிறுவனத்தின் லாபத்தில் ஒரு கணிசமான தொகையும் ஆனந்த் அம்பானிக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனந்த் அம்பானி: ஆனந்த் அம்பானி அமெரிக்காவில் பட்டப்படிப்பை முடித்தவர். இவர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் எரிசக்தி துறையினை கவனித்து வந்தார். மேலும் ஜியோ பிளாட்பார்ம் , ரிலையன்ஸ் ரீடெய்ல் மற்றும் ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் ஆகியவற்றில் வாரியக் குழு இயக்குனராக செயல்பட்டு வருகிறார் 2015 ஆம் ஆண்டிலிருந்து ஆனந்த் அம்பானி ரிலையன்ஸ் குழும தொழில்களில் பங்களிப்பு செய்து வருகிறார்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!



Click it and Unblock the Notifications