சென்னை: சமூக ஊடகங்களில் இன்ஃப்ளுயன்சர்களாக உருவாகி பலரும் பெரும் வருமானம் ஈட்டி வருகின்றனர். யூடியூப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற தளங்களில் இதுபோன்ற இன்ஃப்ளுயன்சர்கள் லட்சக்கணக்கான ஃபாலோவர்களை வைத்திருக்கின்றனர். இதனால் இந்தியாவில் இன்ஃப்ளுயன்சர்கள் சந்தை என்பது வளர்ச்சி அடைந்து வருகிறது.
கோஃப்ளூயன்ஸ் என்ற இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி இந்தியாவில் சோசியல் மீடியா கன்டென்ட் கிரியேட்டர்கள் ஒரு மாதத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர்.

சோசியல் மீடியாவில் உள்ள ஃபாலோவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் இன்ஃப்ளூயன்சர்களை 5 வகையாக பிரிக்கலாம்.
நானோ : 100 - 10,000 ஃபாலோவர்கள்
மைக்ரோ : 10,000 - 1,00,000 ஃபாலோவர்கள்
மேக்ரோ : 1,00,000 - 10,00,000 ஃபாலோவர்கள்
மெகா : 10,00,000 மேல் ஃபாலோவர்கள்
செலிபிரட்டி: 50,00,000 மேல் ஃபாலோவர்கள்
இவர்கள் ஒரு நிறுவனத்துக்காக விளம்பரம் செய்து வெளியிடும் ரீல்ஸ் அல்லது ஷார்ட்ஸ்களுக்கு ஃபாலோவர்கள், லைக்குகள் மற்று கமெண்டுகள் ஆகிய அடிப்படையில் வருமானம் பெறுகின்றனர்.
ஆயிரம் முதல் இந்தியாவில் மைக்ரோ இன்ஃப்ளுடன் அதாவது இந்தியாவில் மைக்ரோ இன்புளுயன்சர்கள் இவர்களில் மைக்ரோ இன்ஃப்ளூயன்சர்கள் இன்ஸ்டாகிராமில் ஒரு ரீலை போடுவதற்காக 20,000 முதல் 50 ஆயிரம் ரூபாய் வரையிலும் யூடியூப்பில் ஒரு ஷார்ட்ஸ் போடுவதற்காக 20,000 முதல் 40 ஆயிரம் ரூபாய் வரையும் வருவாயாக பெறுகின்றனர். இப்படி ஃபாலோவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வருமானம் அதிகரித்து கொண்டே இருக்கும்.
வழக்கமாக பேஷன் இன்ஃப்ளுயன்சர்கள் ஒரு வியூவிற்கு 40 முதல் 60 பைசா வரை பெறுகின்றனர், அதேபோல லைப் ஸ்டைல் கிரியேட்டர்கள் 30 பைசா முதல் 50 பைசா வரை பெறுகின்றனர். நிதி சார்ந்த கிரியேட்டர்கள் 3 முதல் 4 ரூபாய் வரை பெறுகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் உள்ள கன்டென்ட் கிரியேட்டர்களின் எண்ணிக்கை 25 முதல் 30 லட்சமாக இருக்கிறது. இதில் பணம் சம்பாதிக்கும் கண்டன்ட் கிரியேட்டர்கள் எண்ணிக்கை 1.5 லட்சம் முதல் 1.7 லட்சமாக இருக்கிறது.
அதாவது யூடியூப் வழியாக நானோ கன்டென்ட் கிரியேட்டர்கள் 30,000 பேர் வருமானம் பெறுகின்றனர். மைக்ரோ கன்டென்ட் கிரியேட்டர்கள் சுமார் 60,000 பேரும், மெகா கிரியேட்டர்கள் 6,000 முதல் 10,000 பேரும் வருமானம் ஈட்டுகின்றனர்.
இந்தியாவில் கிரியேட்டர்களுக்கான இந்த பொருளாதாரம் என்பது 10 லிருந்து 15 சதவிகிதம் வரை அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்படுகிறது இந்தியாவில் இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங் துறை என்பது ஆண்டுதோறும் 30 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. எனவே சமூக ஊடகங்களில் இன்ஃப்ளுயன்சர்களாக இருப்பவர்களுக்கு அடுத்த சில ஆண்டுகளுக்கு சிறந்த எதிர்காலம் இருக்க போகிறது.
Story written by : Devika
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications