இந்தியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருவது மட்டும் அல்லாமல் இந்தியாவின் டிஜிட்டல் சேவை வளர்ச்சியின் இன்ஜினாக உள்ளது. ஒவ்வொரு புதிய டிஜிட்டல் சேவைகளும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் வாயிலாக மட்டுமே துவங்குகிறது.
இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கடந்த ஒரு வருடமாக அதிகப்படியான முதலீட்டை திரட்ட முடியாமல் மாட்டிக்கொண்டு இருக்கும் வேளையிலும் தொடர்ந்து வர்த்தகத்தை நியாயமான முறையில் மேம்படுத்தி வருகிறது. ஆனால் இந்த இடைப்பட்ட காலத்தில் அதிகப்படியான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டது மறக்க முடியாது.

எது எப்படி இருந்தாலும் ஸ்டார்ட்அப் நிறுவனர்களின் சம்பளம் மட்டும் குறையவே இல்லை. 2023 ஆம் நிதியாண்டில் நாட்டின் 29 நியூ ஏஜ் டெக் நிறுவனங்களின் 51 நிறுவனர்கள் மட்டும் சுமார் 78.1 கோடி ரூபாய் சம்பளத்தை பெற்றுள்ளனர். இதன் மூலம் ஸ்டார்ட்அப் நிறுவனர்களின் சராசரி சம்பளம் 1.59 கோடி ரூபாயாக உள்ளது.
இந்தியாவில் லட்ச கணக்கான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இருக்கும் பட்சத்தில் அனைத்தையும் கணக்கிட முடியாது, ஆனால் டாப் 30 நிறுவனங்களை கணக்கிட்டால் சராசரி சம்பளத்தை தெரிந்தக்கொள்ள முடியும்.
1 கோடி ரூபாய்க்கு கீழ் சம்பளம் வாங்கும் சிஇஓ-க்கள் பட்டியல்
- ஜிதேந்திர குப்தா Jupiter நிறுவனத்தின் நிறுவனராக உள்ளார். 2023 ஆம் ஆண்டில் இவருடைய மொத்த சம்பளம் 0.68 கோடி ரூபாய்.
- அங்குஷ் சச்தேவா ShareChat நிறுவனத்தின் இணை நிறுவனர், CEO ஆக உள்ளார். 2023 ஆம் ஆண்டில் இவருடைய மொத்த சம்பளம் 0.8 கோடி ரூபாய்.
- அவினாஷ் கோட்கிண்டி Zaggle நிறுவனத்தின் CEO ஆக உள்ளார். 2023 ஆம் ஆண்டில் இவருடைய மொத்த சம்பளம் 0.82 கோடி ரூபாய்.
- பிரதீக் ஸ்ரீவஸ்தவா Droneacharya நிறுவனத்தின் நிறுவனர், நிர்வாக இயக்குனர் ஆக உள்ளார். 2023 ஆம் ஆண்டில் இவருடைய மொத்த சம்பளம் 0.9 கோடி ரூபாய்.
- கசல் அலக் Mamaearth நிறுவனத்தின் இணை நிறுவனராக உள்ளார். 2023 ஆம் ஆண்டில் இவருடைய மொத்த சம்பளம் 0.9 கோடி ரூபாய்.
- Cashify நிறுவனத்தின் நிறுவனர்களான மந்தீப் மனோச்சா, நகுல் குமார், அமித் சேத்தி ஆகியோர் 0.91 முதல் 0.95 கோடி ரூபாய் வரையில் சம்பளம் வாங்குகிறார்கள்.
- இதேபோல் EaseMyTrip நிறுவனத்தின் நிறுவனர்களான நிஷாந்த் பிட்டி , பிரசாந்த் பிட்டி , ரிகாந்த் பிட்டி ஆகியோ தலா 0.96 கோடி ரூபாயை சம்பளமாக வாங்குகிறார்கள்.
1 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் சிஇஓ-க்கள் பட்டியல்
- சுமீத் மேத்தா LEAD நிறுவனத்தின் இணை நிறுவனர், CEO ஆக உள்ளார். 2023 ஆம் ஆண்டில் இவருடைய மொத்த சம்பளம் 1 கோடி ரூபாய்.
- ஸ்மிதா தியோரா LEAD நிறுவனத்தின் இணை நிறுவனர், இணை தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். 2023 ஆம் ஆண்டில் இவருடைய மொத்த சம்பளம் 1 கோடி ரூபாய்.
- ராஜ் நாராயணம் Zaggle நிறுவனத்தின் நிர்வாக தலைவராக உள்ளார். 2023 ஆம் ஆண்டில் இவருடைய மொத்த சம்பளம் 1.02 கோடி ரூபாய்.
- அலோக் பன்சால் PB Fintech நிறுவனத்தின் இணை நிறுவனராக உள்ளார். 2023 ஆம் ஆண்டில் இவருடைய மொத்த சம்பளம் 1.08 கோடி ரூபாய்.
- ஃபால்குனி நாயர் Nykaa நிறுவனத்தின் நிறுவனர், CEO ஆக உள்ளார். 2023 ஆம் ஆண்டில் இவருடைய மொத்த சம்பளம் 1.15 கோடி ரூபாய்.
- அங்கித் மேத்தா Ideaforge நிறுவனத்தின் இணை நிறுவனர், CEO ஆக உள்ளார். 2023 ஆம் ஆண்டில் இவருடைய மொத்த சம்பளம் 1.24 கோடி ரூபாய்.
- ஆஷிஷ் ரமேஷ் பட் Ideaforge நிறுவனத்தின் Cofouner, VP ஆக உள்ளார். 2023 ஆம் ஆண்டில் இவருடைய மொத்த சம்பளம் 1.24 கோடி ரூபாய்.
- ராகுல் சிங் Ideaforge நிறுவனத்தின் இணை நிறுவனர், வி.பி., இன்ஜி ஆக உள்ளார். 2023 ஆம் ஆண்டில் இவருடைய மொத்த சம்பளம் 1.24 கோடி ரூபாய்.
- மணீஷ் சவுத்ரி WOW Skin Science நிறுவனத்தின் இணை நிறுவனராக உள்ளார். 2023 ஆம் ஆண்டில் இவருடைய மொத்த சம்பளம் 1.26 கோடி ரூபாய்.
- கரண் சௌத்ரி WOW Skin Science நிறுவனத்தின் இணை நிறுவனராக உள்ளார். 2023 ஆம் ஆண்டில் இவருடைய மொத்த சம்பளம் 1.26 கோடி ரூபாய்.
- அமித் காத்ரி Noise நிறுவனத்தின் இணை நிறுவனராக உள்ளார். 2023 ஆம் ஆண்டில் இவருடைய மொத்த சம்பளம் 1.28 கோடி ரூபாய்.
- அபய் ஹஞ்சுரா Licious நிறுவனத்தின் இணை நிறுவனராக உள்ளார். 2023 ஆம் ஆண்டில் இவருடைய மொத்த சம்பளம் 1.3 கோடி ரூபாய்.
- சாஹில் கோயல் Shiprocket நிறுவனத்தின் இணை நிறுவனர், CEO ஆக உள்ளார். 2023 ஆம் ஆண்டில் இவருடைய மொத்த சம்பளம் 1.42 கோடி ரூபாய்.
- கௌதம் கபூர் Shiprocket நிறுவனத்தின் இணை நிறுவனர், சிஓஓ ஆக உள்ளார். 2023 ஆம் ஆண்டில் இவருடைய மொத்த சம்பளம் 1.48 கோடி ரூபாய்.
- வருண் அலக் Mamaearth நிறுவனத்தின் இணை நிறுவனர், CEO ஆக உள்ளார். 2023 ஆம் ஆண்டில் இவருடைய மொத்த சம்பளம் 1.49 கோடி ரூபாய்.
1.5 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் சிஇஓ-க்கள் பட்டியல்
- ராகேஷ் வர்மா MapMyIndia நிறுவனத்தின் நிறுவனர், தலைவராக உள்ளார். 2023 ஆம் ஆண்டில் இவருடைய மொத்த சம்பளம் 1.5 கோடி ரூபாய்.
- ரோஹன் வர்மா MapMyIndia நிறுவனத்தின் CEO ஆக உள்ளார். 2023 ஆம் ஆண்டில் இவருடைய மொத்த சம்பளம் 1.5 கோடி ரூபாய்.
- விபவ் ஹாதி OneCard நிறுவனத்தின் இணை நிறுவனராக உள்ளார். 2023 ஆம் ஆண்டில் இவருடைய மொத்த சம்பளம் 1.5 கோடி ரூபாய்.
- அனுராக் சின்ஹா OneCard நிறுவனத்தின் இணை நிறுவனர், CEO ஆக உள்ளார். 2023 ஆம் ஆண்டில் இவருடைய மொத்த சம்பளம் 1.5 கோடி ரூபாய்.
- ரூபேஷ் குமார் OneCard நிறுவனத்தின் இணை நிறுவனராக உள்ளார். 2023 ஆம் ஆண்டில் இவருடைய மொத்த சம்பளம் 1.5 கோடி ரூபாய்.
- ஆதித் பளிச்சா Zepto நிறுவனத்தின் இணை நிறுவனர், CEO ஆக உள்ளார். 2023 ஆம் ஆண்டில் இவருடைய மொத்த சம்பளம் 1.5 கோடி ரூபாய்.
- கைவல்யா வோஹ்ரா Zepto நிறுவனத்தின் இணை நிறுவனர், CTO ஆக உள்ளார். 2023 ஆம் ஆண்டில் இவருடைய மொத்த சம்பளம் 1.5 கோடி ரூபாய்.
- சந்தீப் தேஸ்முக் ElasticRun நிறுவனத்தின் இணை நிறுவனராக உள்ளார். 2023 ஆம் ஆண்டில் இவருடைய மொத்த சம்பளம் 1.75 கோடி ரூபாய்.
- ஷிடிஸ் பன்சால் ElasticRun நிறுவனத்தின் இணை நிறுவனர், CTO ஆக உள்ளார். 2023 ஆம் ஆண்டில் இவருடைய மொத்த சம்பளம் 1.75 கோடி ரூபாய்.
- சௌரப் நிகாம் ElasticRun நிறுவனத்தின் இணை நிறுவனர், சிஓஓ ஆக உள்ளார். 2023 ஆம் ஆண்டில் இவருடைய மொத்த சம்பளம் 1.75 கோடி ரூபாய்.
- கௌரவ் காத்ரி Noise நிறுவனத்தின் இணை நிறுவனர், CEO ஆக உள்ளார். 2023 ஆம் ஆண்டில் இவருடைய மொத்த சம்பளம் 1.88 கோடி ரூபாய்.
2 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் சிஇஓ-க்கள் பட்டியல்
- தருண் மேத்தா Ather நிறுவனத்தின் இணை நிறுவனர், CEO ஆக உள்ளார். 2023 ஆம் ஆண்டில் இவருடைய மொத்த சம்பளம் 2 கோடி ரூபாய்.
- ஸ்வப்னில் ஜெயின் Ather நிறுவனத்தின் இணை நிறுவனராக உள்ளார். 2023 ஆம் ஆண்டில் இவருடைய மொத்த சம்பளம் 2 கோடி ரூபாய்.
- ராகுல் கர்க் Moglix நிறுவனத்தின் CEO ஆக உள்ளார். 2023 ஆம் ஆண்டில் இவருடைய மொத்த சம்பளம் 2 கோடி ரூபாய்.
- விவேக் குப்தா Licious நிறுவனத்தின் இணை நிறுவனராக உள்ளார். 2023 ஆம் ஆண்டில் இவருடைய மொத்த சம்பளம் 2.14 கோடி ரூபாய்.
- துஷார் வசிஷ்ட் HealthifyMe நிறுவனத்தின் இணை நிறுவனர், CEO ஆக உள்ளார். 2023 ஆம் ஆண்டில் இவருடைய மொத்த சம்பளம் 2.24 கோடி ரூபாய்.
- அமிதவ சாஹா Xpressbees நிறுவனத்தின் இணை நிறுவனர், CEO ஆக உள்ளார். 2023 ஆம் ஆண்டில் இவருடைய மொத்த சம்பளம் 2.24 கோடி ரூபாய்.
- பிரிஜேஷ் அகர்வால் IndiaMart நிறுவனத்தின் நிறுவனராக உள்ளார். 2023 ஆம் ஆண்டில் இவருடைய மொத்த சம்பளம் 2.75 கோடி ரூபாய்.
3 கோடி ரூபாய்க்கு கீழ் சம்பளம் வாங்கும் சிஇஓ-க்கள் பட்டியல்
- கபிலர் பாரதி Delhivery நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் & CTO ஆக உள்ளார். 2023 ஆம் ஆண்டில் இவருடைய மொத்த சம்பளம் 3 கோடி ரூபாய்.
- பானு சோப்ரா RateGain நிறுவனத்தின் நிறுவனராக உள்ளார். 2023 ஆம் ஆண்டில் இவருடைய மொத்த சம்பளம் 3 கோடி ரூபாய்.
- சாஹில் பருவா Delhivery நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் & CEO ஆக உள்ளார். 2023 ஆம் ஆண்டில் இவருடைய மொத்த சம்பளம் 3.1 கோடி ரூபாய்.
- தினேஷ் அகர்வால் IndiaMart நிறுவனத்தின் நிறுவனராக உள்ளார். 2023 ஆம் ஆண்டில் இவருடைய மொத்த சம்பளம் 3.8 கோடி ரூபாய்.
4 கோடி ரூபாய் சம்பள பட்டியல்
- நிதிஷ் மிட்டர்சேன் Nazara Games நிறுவனத்தின் CEO ஆக உள்ளார். 2023 ஆம் ஆண்டில் இவருடைய மொத்த சம்பளம் 4 கோடி ரூபாய்.
- விஜய் சேகர் சர்மா Paytm நிறுவனத்தின் நிறுவனராக உள்ளார். 2023 ஆம் ஆண்டில் இவருடைய மொத்த சம்பளம் 4 கோடி ரூபாய்.
அதிகப்படியான சம்பளம் பெறும் ரித்தேஷ்
- ரித்தேஷ் அகர்வால் OYO நிறுவனத்தின் நிறுவனராக உள்ளார். 2023 ஆம் ஆண்டில் இவருடைய மொத்த சம்பளம் 12 கோடி ரூபாய்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications