ரூ. 40,000 ஓய்வூதியம் பெற வேண்டுமா? இந்தத் திட்டம் ஒன்னு போதும்.. ஈஸியான முதலீடு!

சென்னை: பணவீக்கம் காரணமாக, அன்றாட செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஓய்வூதியத் திட்டமிடல் ஒவ்வோருவருக்கும் முக்கியமான ஒன்றாகும். ஓய்வுக்குப் பின்னால் வசதியான வாழ்க்கையை உறுதிசெய்ய சேமிப்பை மட்டுமே நம்பியிருப்பதும் போதுமானதாக இருக்காது. உறுதியான ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்வது உங்களின் ஓய்வுக்குப் பிறகு நிம்மதியாக வாழ வழி வகுக்கிறது. இந்தியாவில் இதுபோன்ற நம்பகமான விருப்பங்களில் ஒன்று தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) ஆகும். NPS திட்டத்தைப் பயன்படுத்தி ஒருவர் எவ்வாறு ரூ. 40,000 வருமானத்தைப் பெற முடியும் என்று பார்ப்போம்.

NPS திட்டத்தின் நன்மைகள்: NPS திட்டம் கூட்டு வருவாயை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் எவ்வளவு காலம் முதலீடு செய்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக உங்கள் வருமான வளர்ச்சி அதிகரிக்கும். உங்கள் முதலீடுகளை முன்கூட்டியே தொடங்குவது, இன்னும் சிறந்தது. உங்கள் 20 வயதிற்குள் முதலீட்டைத் தொடங்குவதால், உங்கள் பணம் இன்னும் நீண்ட காலத்திற்கு வளர்ச்சி அடையும். சாதாரண மாதாந்திர முதலீட்டு தொகை கூட கணிசமான ஓய்வூதிய கார்பஸாக NPS திட்டம் மாற்றுகிறது.

 ரூ. 40,000 ஓய்வூதியம் பெற வேண்டுமா? இந்தத் திட்டம் ஒன்னு போதும்.. ஈஸியான முதலீடு!

40,000 மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெற வேண்டும் என்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம். நீங்கள் உங்களுடைய 21ஆவது வயதில் இருந்து NPS திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். தொடர்ந்து 39 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 3,475 பங்களிப்பதன் மூலம், உங்களுடைய 60ஆவது வயதில், நீங்கள் சுமார் ரூ. 40,000 மாத ஓய்வூதியத்தைப் பெறலாம்.

ரூ. 40,000 ஓய்வூதிய கார்பஸ்-ஐ உருவாக்குவதற்கான NPS கால்குலேட்டர்:

NPS தொடக்க வயது: 21 ஆண்டுகள்
ஓய்வு வயது: 60 ஆண்டுகள்
மாதாந்திர பங்களிப்பு: ரூ 3,475
ஆண்டு வருமானம் விகிதம்: 10%
மொத்த கார்பஸ்: ரூ 2,00,19,029
திரும்பப் பெறும் மொத்தத் தொகை (60%): ரூ. 1,20,11,417

60 வயதிற்குள், உங்களின் மொத்த கார்பஸ் தோராயமாக ரூ.2,00,19,029 ஆக இருக்கும். ஓய்வு பெறும்போது, ​​இந்த கார்பஸில் 60% வரை மொத்தமாக திரும்பப் பெற NPS உங்களை அனுமதிக்கிறது.

மாதாந்திர ஓய்வூதியத்தை உருவாக்குவதற்காக, உங்கள் வருடாந்திர நிதியை ஃபண்டுகள் மற்றும் கார்ப்பரேட் பத்திரங்களில் அரசாங்கம் முதலீடு செய்கிறது. இது நிலையான வருமானத்தை அளிக்க உதவுகிறது. வருடாந்திர முதலீட்டில் 6% ஆண்டு வருமானம் என்று வைத்துக் கொண்டால், நீங்கள் எதிர்பார்க்கும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.40,038 கிடைக்கும் .

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+