அண்மைக்காலமாக யூடியூப்பில் சேனல்களை தொடங்கி கிரியேட்டர்களாக மாறுவது மற்றும் அதன் மூலம் வருவாய் ஈட்டுவது என்பது ட்ரெண்டாக உள்ளது. அந்த வகையில் யூடியூபில் ஒரு சேனலை உருவாக்கி ஒரு லட்சம் சப்ஸ்கிரைபர்கள் இருந்தால் உங்களுக்கு யூடியூப் எவ்வளவு பணம் தரும் என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்..
பொதுவாக யூடியூபில் சேனல் வைத்திருப்பவர்கள் தங்கள் வீடியோக்களில் ஒளிபரப்பாகும் விளம்பரங்கள் மூலம் குறிப்பிட்ட அளவு வருவாயை பெறுகின்றனர. யூடியூப் சேனல் மூலம் நீங்கள் வருமானம் ஈட்ட வேண்டும் எனில் உங்களது சேனலுக்கு குறைந்தது ஆயிரம் சப்ஸ்கிரைபர்கள் மற்றும் 4000 வாட்ச் அவர்ஸ் இருக்க வேண்டும். இந்த இலக்கை எட்டியவர்கள் youtube பார்ட்னர் ப்ரோக்ராம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதன் மூலம் சேனல் மானிட்டைஸ் செய்யப்பட்டு வருமான வழங்கப்படும்.

குறிப்பாக ஒவ்வொரு ஆயிரம் விளம்பர பார்வைக்கும் அந்த குறிப்பிட்ட விளம்பரதாரர் ஒரு குறிப்பிட்ட தொகையை யூடியூப்பிற்கு வழங்குகிறார். யூடியூப் நிறுவனம் அதில் 45 சதவீதத்தை எடுத்துக் கொண்டு மீதமுள்ள 55 சதவீதத்தை கிரியேட்டர்களுக்கு வழங்குகிறது. பொதுவாக யூடியூப் சேனல் வைத்திருப்பவர்கள் விளம்பரங்கள் மட்டுமல்ல சில பொருட்களை பிரமோஷன் செய்து மற்றும் அஃப்ளியேட் மார்க்கெட்டிங் மூலமும் பணம் சம்பாதிக்கிறார்கள் .
இந்தியாவில் ஒரு லட்சம் சப்ஸ்கிரைபர்களை வைத்திருப்பவர்கள் ரூ.1,98,400 முதல் ரூ.3,30,770 வரை வருமானம் ஈட்ட முடியும். ஆனால் சில குறிப்பிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தொகையானது மாறுபடக்கூடும். ஷார்ட் ஃபார்ம் வீடியோக்களான ஷார்ட்ஸ் மூலமும் தற்போது பணம் சம்பாதிக்க முடியும். அதற்கு 90 நாட்களில் ஆயிரம் சப்ஸ்க்ரைபர்கள் மற்றும் 10 மில்லியன் வியூக்களை பெற்றிருக்க வேண்டும்.
யூடியூப் மூலம் வருமான ஈட்ட, முதலில் ஒரு சேனலை தொடங்குங்கள். மானிடைஸ் செய்வதற்கான நிபந்தனைகளை நிறைவேற்றிய பிறகு,YouTube Partnership Programக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும். இதற்கு YouTube Studio app-ஐ பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
அதில் உள்ள "Earn" பட்டனை கிளிக் செய்து, "Apply" என்பதை தேர்வு செய்யவும். பின்னர் "Start" என்பதை கிளிக் செய்து, termsஐ ஏற்க வேண்டும். பின்னர் AdSense கணக்கை தொடங்கலாம் அல்லது ஏற்கனவே உள்ள கணக்கை இதில் இணைக்கலாம். பின்னர் யூடியூப் தரப்பில் உங்களது சேனல் ரிவியூவ் செய்யப்படும். அதில் யூடியூபின் தரநிலைகளுக்கு ஏற்ப சேனல் இருப்பது உறுதியானால் மானிடைசேசனுக்கு ஒப்புதல் கிடைக்கும். இதன் பின்னர் மாதந்தோறும் உங்களுக்கு வருமானம் கிடைக்கும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications