சென்னை: காலம் மாறிக்கொண்டே இருக்கிறது, நம் நிதி பராமரிப்பு முறைகளும் மாறுகிறது. இன்றைய நவீன உலகில், கிரெடிட் கார்டுகள் நம் வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டன. ஆனால், பல கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பது உங்கள் கிரெடிட் ஸ்கோரை எப்படி பாதிக்கிறது என்பதையும், அதன் நன்மை-தீமைகளைப் பற்றியும் அறிவது அவசியம்.
உங்கள் கிரெடிட் ஸ்கோர், உங்கள் கடன் வரலாற்றிற்கான அறிக்கை அட்டை போன்றது. நீங்கள் கடன் வாங்க விரும்பினால், கடன் வழங்குபவர்கள் கிரெடிட் ஸ்கோரைச் சரிபார்த்து, உங்களுக்குக் கடன் கொடுப்பது நல்லதா.. கடன் வழங்கினால் நீங்கள் சரிவர திருப்பி செலுத்துவீர்களா என்பதைச் சரி பார்க்கும்.

அதிக கிரெடிட் ஸ்கோர் என்பது பொதுவாக குறைவான அபாயத்தைக் குறிக்கிறது. பல கிரெடிட் கார்டுகள் உங்கள் கிரெடிட் ஸ்கோரை எவ்வாறு பாதிக்கிறது? என்பதைப் பார்ப்போம்.
கிரெடிட் ஸ்கோர் பாதிப்பு குறித்து பேசுவதற்கு முன், உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் எப்படி கணக்கிடப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம்.
கட்டண வரலாறு (35%): பல கிரெடிட் கார்டுகளை வைத்திருக்கும் போது, அந்தக் கடனை சரிவர திருப்பிச் செலுத்த வேண்டும். இல்லை என்றால் அது உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை பாதிக்கலாம். அதிக அளவு உங்களுடைய கடன் வரலாற்றுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நீங்கள் எவ்வளவு சரிவர உங்கள் கடனை திருப்பி செலுத்தி இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து ஸ்கோர் அதிகமாகும்.
கிரெடிட் விகிதம் (30%): உங்கள் கடனுக்கு கிடைக்கும் கிரடிட்டை பொறுத்து இந்த 30 சதவீத கிரெடிட் ஸ்கோர் கணக்கிடப்படுகிறது. அதாவது பல கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பது உங்கள் ஒட்டுமொத்த கிரெடிட்டை அதிகரிக்கலாம். இதனால் 30 சதவீத வரம்பிற்கும் மேல் உங்கள் கிரெடிட் லிமிட் தாண்டும்போது, இந்த விகிதத்தில் அதாவது கிரெடிட் ஸ்கோர் விகிதத்தில் உங்களுக்கு குறைவு ஏற்படலாம்.
உங்கள் கிரெடிட் கார்டுகளின் வயது (15%): புதிய கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பது உங்கள் கிரெடிட் ஸ்கோரை குறைக்கலாம். நீண்ட கடன் வரலாற்றைக் கொண்டவர்கள் சிறந்த கிரெடிட் ஸ்கோரைப் பெற முடியும். இப்பொழுது உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம்.. கடன் இல்லாமல் புதிதாக கிரெடிட் கார்டு பெற்றவர்களுக்கு ஏன் கிரெடிட் ஸ்கோர் குறைவாக உள்ளது? என்று, கிரெடிட் ஸ்கோர் பொதுவாக உங்கள் கடன் வரலாற்றைப் பொறுத்து கணக்கிடப்படுவதால், நீங்கள் ஒரு புதிய கிரெடிட் கார்டை வாங்கி அதை உபயோகப்படுத்தி விட்டு திருப்பி செலுத்தும் போது எவ்வளவு கடமை உணர்ச்சியோடு செலுத்தி இருக்கிறீர்கள்.. என்பதைப் பொறுத்து தான் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் அதிகரிக்கும். நீங்கள் புதியதாக கிரெடிட் கார்டு வாங்கி இருக்கும்போது அதை சரிவர சொல்ல முடியாது என்பதால் முதலில் கிரெடிட் ஸ்கோர் குறைவாக உள்ளது.
கிரெடிட் வகை (10%): உங்களிடம் பல்வேறு வகையான கிரெடிட் கார்டுகள் இருந்தால், அவை ஒன்றுக்கொன்று மாறுபடும். மேலும் அதன் கிரெடிட் லிமிட்டும் கிரெடிட் கார்டு வழங்குனரைப் பொருத்து மாறுபடலாம். இதனால் உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறைய வாய்ப்புள்ளது.
புதிய கிரெடிட் கார்டுகளை பெறுவது (10%): புதிய கிரெடிட் கார்டுகளை தொடர்ந்து பெறுவது உங்கள் ஸ்கோரை அடிவாங்க செய்யும். பல புதிய கிரெடிட் கார்டு வழங்குனர்களை பார்த்து பிறகு குறுகிய காலத்தில் அதிக கிரெடிட் கார்டுகளை பெறுவதால் கிரெடிட் லிமிட் அதிகரித்து ஸ்கோர் குறையலாம்.
நீங்கள் பல கிரெடிட் கார்டுகளைப் பெறுவதைக் கருத்தில் கொண்டால், ஒரே நேரத்தில் அவற்றைப் பெறுவதைத் தவிர்க்கவும். அதற்குப் பதிலாக, ஒன்று அல்லது இரண்டு கார்டுகளை வழக்கமாகப் பயன்படுத்துங்கள், உங்கள் கட்டணங்களை விடாமுயற்சியுடன் கண்காணியுங்கள்.


Click it and Unblock the Notifications