இந்தியாவும், இந்திய மக்களும் 75வது குடியரசு தினத்தை ஜனவரி 26, 2024 அன்று கொண்டாட உள்ள நிலையில், தலைநகர் டெல்லி, ராஜ்பாத்தில் பிரமாண்டமான அணிவகுப்புகள் நடக்க உள்ளது. இதில் இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை, போலீஸ் மற்றும் துணை ராணுவ அமைப்புகள் பங்கேற்கும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டதைக் கொண்டாடுவது தான் குடியரசு தினம்.
இந்த நிலையில் வரலாற்றில் சுவாரஸ்யமான நிகழ்வை நினைவுக்கூறும் வகையில் செல்வன் என்பவரின் பேஸ்புக் பதிவு பலரையும் கவர்ந்தது. இந்த சுவாரஸ்ய பதிவு இதோ..

ப்ரிட்டிஷார் இந்தியாவை விட்டு போயிருந்தாலும் அவர்களின் கம்பனியான மர்பி ரேடியோ (Murphy Radio) இந்திய சந்தையை ஆண்டு வந்தது. அன்று பெரிய பணக்காரர்கள் தான் மர்பி ரேடியோ வைத்து இருப்பார்கள்.
மத்தள சைஸில் இருக்கும் இந்த Murphy Radio, வீட்டின் ஹால் நடுவே வைத்துக்கொண்டு மொத்த குடும்பமும், உறவினர்களும், அக்கம் பக்கத்தினரும் "பினாகா வழங்கும் கீதமாலா" நிகழ்ச்சியை ரசிப்பார்கள். மர்பி ரேடியோ நிறுவனர் மர்பியின் மகளின் உருவம் தான் விளம்பர படமாக அப்போது பயன்படுத்தப்பட்டது.
"அமுல் பேபி" என்ற சொல்லாடல் போல "மர்பி பேபி" என்ற சொல்லாடல் அக்காலத்தில் பிரபலம். கன்னத்தை ஒற்றை விரலை வைத்தபடி நிற்கும் அந்த குழந்தை மர்பி நிறுவனரின் மகள் என்ற வதந்தி பலமாக உலா வந்தது. நிஜத்தில் அவர் யார் என யாருக்கும் தெரியாது.
ஆனால் 30- 40 ஆண்டுகளாக ஒரே குழந்தையின் படத்தை போட்டு கம்பனிக்கே போரடித்துவிட்டது. "புதியதாக ஒரு குழந்தை படம் வேண்டும்" என பெங்களூரில் உள்ள எண்டெர்பிரைஸ் என்ற விளம்பர நிறுவனத்துக்கு காண்ட்ராக்ட் கொடுத்தார்கள். உலகெங்கும் புகழ் பெற்ற குழந்தையின் உருவத்தை ரீப்ளேஸ் செய்ய முடியுமா?

மும்பை, டெல்லி என எல்லா இடங்களுக்கும் சென்றும் ஆயிரமாயிரம் குழந்தை மாடல்களின் உருவத்தை பார்த்தும் எதுவும் திருப்தி ஆகவில்லை "காண்டிராக்ட் காலி" என புலம்பியபடி மணாலி வந்தார்கள். தெருவில் அழகான ஒரு திபெத்திய லாமா குழந்தை சிரித்தபடி விளையாட அதே மர்பி குழந்தையின் சிரிப்பு.. அதனுடன் சிரித்துபேசி கன்னத்தில் விரலை வைக்க சொல்லி போட்டோ எடுத்து க்ளையன்டுக்கு அனுப்ப " ஓகே ஆகிவிட்டது"
அந்த குழந்தையின் பெயர் காக்யூர் டில்கு (Kagyur Tulku). திபெத்திய அகதிகளின் பிள்ளை, அவர்களுக்கு இந்தியும் தெரியாது. சில மாதங்களில் அவர்கள் குழந்தையின் படம் இந்தியாவெங்கும் பட்டிதொட்டி எங்கும் "மர்பி பேபி" ஆக பரவியது. விளம்பர நிறுவனத்துக்கு பெற்றோர் கடிதம் எழுத "சாரி, யதேச்சையாக நடந்த விசயம்" என்றார்கள்.

அது வேறு காலகட்டம். வழக்கு போட்டு கோடிக்கணக்கில் பணம் வாங்கும் உத்தி எல்லாம் தெரியாத எளிய அகதிகள். அந்த மர்பி பேபி விளம்பரம் பட்டி, தொட்டியெங்கும் தீயாக பரவியது. ஆனால் அந்த மர்பி பேபிக்கு அந்த விளம்பர படத்தில் நடித்ததுக்கு ஒரே ஒரு பைசா கூட ஊதியம் கிடைக்கவில்லை. ஆனா அந்த போட்டோவை காட்டி கம்பனி கோடி, கோடியாக சம்பாதித்துவிட்டது.
அதன்பின் அந்த மர்பி பேபி படித்து, வளர்ந்து, பெரியவனாகி, திபெத்திய பவுத்த மடாலயத்தில் துறவியாக சேர்ந்து "ரின்போச்சே" (Rinpoche) எனும் பட்டத்தை பெற்றான். ரின்போச்சே இந்து மதத்தில் "மகரிஷி" என்பதுக்கு ஒப்பான பட்டம்.
மகரிஷிகளை மயக்க, மேனகை வராமலா இருப்பார்? அப்படி ஒரு மேனகை அந்த மடத்துக்கு வந்தார். 'நான் புகழ் பெற்ற நடிகையாக இருந்தேன். நிறைய சம்பாதித்தேன். ஆனால் மன அமைதி இல்ல, பவுத்த சமயத்தில் சேரவேண்டும்" என்றார்.

அதன்பின் அவர் பவுத்த சமயத்தில் சேர்ந்தார். நம் மர்பி பேபி ரின்போச்சே காக்லு டிக்லு மனதையும் கவர்ந்தார். இருவரும் திருமணம் செய்துகொண்டு மும்பை சென்று மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.
அந்த பெண் வேறு யாருமல்ல.. இந்தி நடிகையான மந்தாகினி. ராம் தேரி கங்கா மைலி படத்தில் நடித்தவர். அவரை முதல் முதலாக போட்டோ பிடித்து இயக்குனர் ராஜ்கபூரிடம் கொடுத்தவர் மர்பி பேபியை படம் பிடித்த அதே புகைப்பட நிபுணர் தான். சாமி போட்ட முடிச்சு என்பது இதுதான் போல.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications