சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் தங்கள் வாழ்வில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியவர் இந்தியாவை சேர்ந்த நீம் கரோலி பாபா என்கின்றனர். ஸ்டீவ் ஜாப்ஸ், மார்க் ஸக்கர்பர்க், ஜேக் டார்ஸி ஆகியோர் மிகப்பெரிய டெக் நிறுவனங்களை தொடங்கி வெற்றிகரமாக நடத்தியதற்கு நீம் கரோலி பாபா ஆசிரமத்தில் கிடைத்த அனுபவங்களே காரணம் என்கின்றனர்.
1900 ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் பிறந்தவர் தான் நீம் கரோலி பாபா . தீவிர அனுமான் பக்தராக இருந்தவர். 1973 ஆம் ஆண்டு அவர் காலமானார். இவரின் உண்மையான பெயர் லக்ஷ்மன் நாராயணன் சர்மா. 11 வயதிலேயே இவருக்கு திருமணம் ஆகிவிட்டதாம். பின்னர் ஆன்மீகத்தில் ஏற்பட்ட நாட்டம் காரணமாக இவர் 1958 ஆம் ஆண்டு திருமண வாழ்வில் இருந்து வெளியேறி விட்டார். இவரை இவருடைய பக்தர்கள் மகாராஜ் என அழைக்கின்றனர்.

ஸ்டீவ் ஜாப்ஸ்:ஆப்பிள் நிறுவனத்தை நிறுவிய ஸ்டீவ் ஜாப்ஸ் தன்னை பற்றி தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற தேடலின் ஒரு பகுதியாக 1970 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வருகை தந்தார். அப்போது வட இந்தியாவில் உள்ள கைஞ்சி ஆசிரமத்தில் நீம் கரோலி பாபா என்பவரை காண்பதற்காக வந்திருந்தார். ஆனால் அவர் வருவதற்கு ஓராண்டு முன்பே நீம் கரோலி பாபா இறந்து விட்டார். அவரை பார்க்க முடியவில்லை என்றாலும் அந்த ஆசிரமத்திலேயே தங்கி இருந்து தன்னுடைய ஆன்மீக பயணத்தை தொடர்ந்தார்.
ஸ்டீவ் ஜாப்ஸ் அப்போது தான் தேடிய அறிவொளி தன்னிடமே உள்ளது என்பதை தான் உணர்ந்ததாகவும் அதன் பிறகு தான் ஆப்பிள் நிறுவனத்தை தொடங்கி ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளை கொண்டு வந்தது எல்லாமே இந்த ஆசிரமத்தில் தனக்கு கிடைத்த தாக்கமே காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.
மார்க் ஸக்கர்பர்க் : பேஸ்புக் நிறுவனத்தை தொடங்கிய போது பல்வேறு குழப்பங்கள் தன்னை ஆட்கொண்டதாகவும் நிறுவனத்தை எந்த பாதையில் கொண்டு செல்வது என்ற குழப்பம் நீடித்ததாகவும் அப்போது ஸ்டீவ் ஜாப்ஸ் தனக்கு நீம் கரோலி பாபாவின் ஆசிரமத்திற்கு சென்றால் உனக்கு தெளிவு பிறக்கும் என அறிவுரை வழங்கியதாகவும் மார்க் ஸக்கர்பர்க் கூறியுள்ளார். எனவே 2015 ஆம் ஆண்டு இதற்காகவே தான் இந்தியாவிற்கு வருகை தந்து அந்த ஆசிரமத்திற்கு சென்றதாகவும் கூறியுள்ளார்.
அங்கே தனக்கு அமைதியும் வாழ்க்கை தொடர்பான பல புரிதலும் கிடைத்ததாக மார்க் கூறியுள்ளார். அதன் பிறகு தன்னால் பேஸ்புக்கை மிகப்பெரிய நிறுவனமாக வளர்ச்சி அடைய செய்ய முடிந்தது எனக் கூறியுள்ளார். இந்த ஆசிரமத்தில் தான் இருந்த காலகட்டத்தில் தனக்கு முன் எப்போதும் இல்லாததை விட தன்னம்பிக்கையும் மன உறுதியும் அதிகரித்ததாக தெரிவித்துள்ளார்.
ஜேக் டார்ஸி: டிவிட்டர் நிறுவனத்தை தொடங்கிய ஜேக் டார்ஸி நீம் கரோலி பாபாவை தீவிரமாக பின் தொடர்பவர். அவர் இந்த ஆசிரமத்திற்கு வருகை தந்தது குறித்து வெளிப்படையாக தெரிவித்த கிடையாது இருந்தாலும் இவருடைய தாக்கம் தன்னிடம் இருப்பதாக அவர் கூறியுள்ளார். தான் தினந்தோறும் தியானத்தில் ஈடுபடுவதாகவும் அதற்கு நீம் கரோலி பாபாவே காரணம் என்று கூறியுள்ளார். இதுவே தன்னை தலைமைத்துவத்திற்கு கொண்டு சென்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
நீம் கரோலி பாபா அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் மற்றவர்களுக்கு உதவி செய்வதற்காகவே இந்த வாழ்வை அர்ப்பணிக்க வேண்டும் என தொடர்ந்து கூறி வந்தவர். உலகளாவிய அன்பையும் புரிதலையும் தழுவுதலே முக்கியம், வெகுமதி எதிர்பார்க்காமல் தன்னலமற்ற முறையில் மற்றவர்கள் உதவுதல் , தியானம் மற்றும் அந்த தருணத்தில் வாழ்க்கையை அனுபவிப்பது ஆகிய மூன்றையும் அனைவரும் பின்பற்ற வேண்டும் என கூறியவர்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications