நோபல் பரிசு - உலகின் மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றாகும். இது அறிவியல், இலக்கியம் மற்றும் சமாதானம் ஆகிய துறைகளில் சிறந்த பங்களிப்புகளை வழங்கியவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருது எப்படி, எதற்காக உருவானது தெரியுமா..?
நோபல் பரிசுக்கான தேர்வு செயல்முறை மிகவும் கடுமையானது. ஒவ்வொரு துறையிலும் நிபுணர்களைக் கொண்ட குழுக்கள், பரிசுக்கான பரிந்துரைகளைப் பெற்று, அவற்றை மதிப்பீடு செய்து, இறுதித் தேர்வு செய்கின்றன. நோபல் பரிசு என்பது ஒரு தனிப்பட்ட சாதனையை மட்டுமல்ல, மனிதக்குலத்தின் முன்னேற்றத்திற்கான ஒரு அங்கீகாரமும் ஆகும்.

ஆல்ஃப்ரெட் நோபல் (Alfred Nobel) என்ற சுவீடிஷ் கண்டுபிடிப்பாளர் மற்றும் தொழிலதிபர், தனது சொத்துக்களின் பெரும்பகுதியை, "மனிதக்குலத்திற்கு மிகுந்த நன்மை தரும் கண்டுபிடிப்புகள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும், சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும்" வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கினார்.
1901 ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வந்தாலும், அதன் ஆரம்பம் ஆல்ஃப்ரெட் நோபல் மூலம் துவங்குகிறது. ஆல்ஃப்ரெட் நோபல் குறித்துச் செல்வ சிதம்பரம் என்பவர் டிவிட்டரில் செய்த பதிவு மிகவும் சுவாரஸ்யமானது. 1833 ஆகஸ்ட் 21 அன்று ஸ்வீடனில் ஒரு பொறியாளர்கள் குடும்பத்தில் பிறந்த ஆல்ஃப்ரெட். இவர் ஒரு பொறியாளர், வேதியியலாளர், கண்டுபிடிப்பாளர் மட்டுமின்றிப் பெரிய போர்த்தளவாட உற்பத்தியாளரும் ஆவார். போஃபர்ஸ் உட்பட 90 போர்த்தளவாட நிறுவனங்கள் அவருக்குச் சொந்தமாக இருந்தன.
அவர் 355 கண்டுபிடிப்புக்களுக்குக் காப்புரிமை பெற்றிருந்தாலும், அவரை உலகறியச் செய்தது டைனமைட் தான். இங்கிலாந்து உருவாக்கிய கார்டைட் உள்ளிட்ட, புகையில்லாமல் வெடிக்கக்கூடிய பொருட்களுக்கு, அடிப்படையாக அமைந்தது இவர் கண்டுபிடித்த பாலிஸ்டைட் என்னும் பொருள்தான்.
சுரங்கம் தோண்டுதல், மலைகளை, கற்களை உடைத்தல் உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு டைனமைட் பயன்பட்டாலும், அழிவுப் பொருளை உருவாக்கியவராகவே நோபல் பார்க்கப்பட்டார். அவரது மறைவுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பாக, அவரது சகோதரர் லுத்விக் மறைந்தபோது, ஒரு ஃப்ரான்ஸ் செய்தித்தாள், நோபல் இறந்துவிட்டதாகக் கருதி, 'மரண வியாபாரி மரணமடைந்தார்' என்று செய்தி வெளியிட்டிருந்தது.
அதனைப் படித்த நோபல், தன்னை உலகம் அவ்வாறு நினைவுகூருவதை விரும்பாததால், நோபல் பரிசை உருவாக்கினார். 1895 ஆண்டு நோபல் பரிசுக்கான நோபல் அறக்கட்டளையை உருவாக்க தன் சொத்தில் 94 சதவீதத்தை (அன்றைய மதிப்பில் 3,12,25,000 ஸ்வீடன் க்ரோனார்கள்) வழங்கும் உயிலில் ஆல்ஃப்ரெட் நோபல் கையெழுத்திட்ட பத்திரம் புகைப்படம் தான் இது
ஆல்ஃப்ரெட் நோபல் உயில் எழுதப்பட்டு ஓராண்டில், 1896 டிசம்பர் 10 அன்று நோபல் மறைந்துவிட, 1900 ஜூன் 29 அன்று ஒரு தனியார் நிறுவனமாக நோபல் அறக்கட்டளை உருவாக்கப்பட்டது.
இயற்பியல், வேதியியல், உடற்கூறியல் அல்லது மருத்துவம், இலக்கியம், அமைதி ஆகிய துறைகளில் மனிதக் குலத்திற்குப் பெரும் பயனளிக்கும் சாதனைகளைப் புரிவோருக்கு இப்பரிசு வழங்கப்படவேண்டும் என்ற அவரது விருப்பத்தின்படி, 1901இலிருந்து வழங்கப்பட்டுவருகிறது.
ஒரு நோபல் பரிசின் இன்றைய மதிப்பு சுமார் ஏழேகால் கோடி ரூபாய்களாகளும். 1966இல் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு செயற்கைத் தனிமம், நோபலின் பெயரால் நோபலியம் என்று பெயரிடப்பட்டது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications