ஐடி துறையில் சமீப காலமாக தொடர்ந்து பணிநீக்கம் நடைபெற்று வருகிறது. அதற்கு காரணமாக கூறப்படுவது என்னவோ ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் தான். அப்படி இருக்கையில் இதே AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு பெண் தன்னுடைய சம்பளத்தை அதிகரித்துள்ளார். இன்றைய சூழலில் ஒரு நல்ல வேலை கிடைப்பதே அரிதாக இருக்கிறது. அப்படி வேலை கிடைத்தாலும் அதற்கு ஏற்றவாறு சம்பளம் வழங்கப்படுவதில்லை. இந்தப் பிரச்சனையால் பல மாணவர்கள் மற்றும் பணி புரியும் ஊழியர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
அனால் இதற்கு மத்தியில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ரீத்து மவுரியா என்ற பெண் ஒரே ஒரு வருடம் பணிபுரிந்து.. தன்னுடைய ஆண்டு வருமானத்தை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.80 லட்சமாக மாற்றி காண்பித்துள்ளார். இதில் சுவாரசியம் என்னவென்றால் அவருக்கு தற்பொழுது கிடைத்திருப்பது ரிமோட் ஜாப். நீண்ட காலமாக விலைவாசி உயர்கிறதே.. தவிர ஊழியர்கள் பெறும் சம்பளம் மட்டும் உயர்ந்தபாடில்லை.அப்படி இருக்கையில் இதெல்லாம் எப்படி நடந்திருக்கும் என்று தானே யோசிக்கிறீர்கள்? அதற்கு அவர் என்ன செய்தார் என்பதைப் பார்ப்போம்.
எந்த ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தினால் பலர் வேலை இழக்கின்றனரோ அதை பயன்படுத்தி தான் தற்போது இவ்வளவு பெரிய சாதனையை செய்துள்ளார். இன்ஸ்டாகிராமில் இது தொடர்பாக ஒரு வீடியோவையும் பதிவிட்டிருக்கிறார். வேலை தேடுபவர்கள் செய்யும் பொதுவான விஷயம் ஒரு ரெஸ்யூமை தயார் செய்வார்கள், பின்னர் லிங்க்டின், நௌக்ரி போன்ற வேலை தேடும் தளங்களில் அதை பதிவேற்றுவார்கள்.

நிறுவனங்களைத் தேடி தேடி அப்ளை பட்டனை தட்டிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் ரீத்து இந்த வழக்கமான பாணியை கையாளவில்லை. இன்டெர்வியூ செல்வதற்கு முன்பே அவருக்கு என்னென்ன விஷயங்கள் தெரியும் என்பதை நிறுவனங்களுக்கு நிரூபித்துள்ளார். அதற்காக அவர் என்ன செய்தார் என்பதை பார்ப்போம்.
வேலை தேடுபவர்கள் முதலில் என்ன செய்ய வேண்டும் என்ற விவரங்களையும் ரீத்து பகிர்ந்துள்ளார். அதற்கு முதலில் எந்த நிறுவனத்தில் உங்களுக்கு பணிபுரிய ஆசை என்பதை தேர்வு செய்ய வேண்டும். அங்கு நீங்கள் என்ன பணிக்கு அப்ளை செய்ய இருக்கிறீர்கள்?, அதற்கு என்னென்ன தகுதிகள் தேவை?, என்பதை நிறுவனம் பகிரும் ஜாப் டெஸ்கிரிப்ஷன் மூலம் ஆழமாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும். அதேபோல நீங்கள் நினைக்கும் நிறுவனத்தில் நீங்கள் ஆசைப்படும் ஜாப் ரோலுக்கு ஆள் எடுக்கின்றனரா? இல்லையா? என்பதை எல்லாம் பற்றி கவலைப்பட தேவையில்லை. நிறுவனத்தின் தேவையை மட்டும் புரிந்து கொண்டால் போதும். இதுதான் முதல் படி.
அடுத்ததாக ஜாப் டிஸ்கிரிப்ஷன் என்ன என்பதை பற்றி புரிந்து கொள்ள நிறுவனங்கள் போட்டிருக்கும் டிஸ்கிரிப்ஷனை அப்படியே தூக்கி சாட்ஜிபிடியில் போடுங்கள். அது என்னென்ன விஷயங்களை செய்ய வேண்டும் என்பதற்கான ஐடியாவை உங்களுக்கு வழங்கிவிடும். அதோடு அதை எப்படி செய்யவேண்டும் என்பதற்கான வழிகளையும் கொடுத்து விடும். இதை பயன்படுத்தி ஒரு புதிய ப்ராஜெக்ட் செய்யலாம்.
இதற்கு பெரிதாக கோடிங் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. Emergent.sh போன்ற ஏஐ தளங்களை பயன்படுத்தி உங்கள் ஐடியாவை ப்ராஜெக்ட்டாக மாற்ற முடியும். இதற்காக நீங்கள் பிளானிங், டெஸ்டிங், கோடிங் ஆகியவற்றையெல்லாம் செய்ய தேவையில்லை. இந்த ஏஐ இணையதளமே உங்களுக்கு அனைத்தையும் செய்து இணையத்தில் வெளியிடும் வரை என்னென்ன தேவை என்பதை செய்து கொடுத்து விடும். ஆனால் முதல் முறை செய்யும் போதே ப்ராஜெக்ட் சரியாக வரும் என்று சொல்லிவிட முடியாது.
அதில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதை நீங்கள் திருத்திக் கொள்ளலாம். ப்ராஜெக்ட்டை வைத்துக் கொண்டே இருக்காமல் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மேனேஜருக்கு மெசேஜ் அனுப்பலாம். உங்கள் நிறுவனத்தின் தேவைக்காக நான் ஒரு புதிய ப்ராஜெக்ட் செய்திருக்கிறேன் என்று அவர்களுக்கு பகிரலாம். அதேபோல உங்களுடைய லிங்க்டின் பக்கத்திலும் நீங்கள் எந்த ப்ராஜெக்ட் செய்திருக்கிறீர்களோ? அதற்கான வீடியோவை பதிவிடலாம்.
முக்கியமாக உங்கள் ப்ரொபைலின் மேற்பகுதியில் அதை பின் செய்து வைக்க வேண்டும். ரெக்ரூட்டர்கள் உங்கள் திறமையை நேரடியாக பார்ப்பதற்கு இது உதவியாக இருக்கும். இதுதான் ரீத்து தனது சம்பளத்தை அதிகரிக்க செய்த விஷயங்கள்.வேலை தேடுபவர்கள் இவருடைய பாணியைக் கையாண்டால் புதிய வாய்ப்புகளை பெறலாம். வெறும் ரெஸ்யூமை வைத்துக்கொண்டு வேலை தேடினால் இனி வேளைக்கே ஆகாது. நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறமை உண்மையிலேயே உங்களிடம் இருக்கிறது என்பதை நிரூபித்தால் ரித்துவை போல அதிக பேக்கேஜில் பணியில் சேரலாம்.


Click it and Unblock the Notifications