பலரை ஆச்சரியப்படுத்தும் வகையில் உலகப் பொருளாதாரம் ரெசிஷன் அச்சத்தாலும், தொடர் பணவீக்க உயர்வாலும் பாதிக்கப்பட்டு வரும் வேளையில் வர்த்தக சந்தைக்கு கூடுதல் சுமையை உருவாக்கும் விதிகமாக 23 OPEC+ கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகள் ஏப்ரல் 2 அன்று தனது எண்ணெய் உற்பத்தியை ஒரு நாளுக்கு 1.66 மில்லியன் பேரல் வரையில் குறைப்பதாக அறிவித்தது.
Recommended Video
இந்த அறிவிப்பை அடுத்து கச்சா எண்ணெய் விலைகள் தொடர்ந்து அதிகரிக்க துவங்கின, இதன் உண்மையான தாக்கம் மே மாதத்தில் இருந்து தான் துவங்கும் என்றாலும், ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் கச்சா எண்ணெய் விலை 6.3 சதவிகிதம் வரையில் உயர்ந்துள்ளது. இது கடந்த ஒரு வருடத்தில் உயர்ந்ததற்கும் அதிகமான உயர்வாகும்.

OPEC+ கார்டெலில் 13 உறுப்பினர் நாடுகளும் மற்றும் 10 பிற நாடுகளும் உள்ளது. மார்ச் 10 அன்று அமெரிக்காவில் சிலிக்கான் வேலி வங்கி திவாலானதில் இருந்து சில நாட்களிலேயே கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைய துவங்கியது. இந்த விலை சரிவை ஈடு செய்யவே செயற்கையாக டிமாண்ட் அளவை அதிகரிக்க உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளது.
ஏப்ரல் 2 ஆம் தேதி உற்பத்தி குறைப்பு அறிவிப்புகள் ஒருபுறம் இருக்க. OPEC+ கார்டெல் அக்டோபர் மாத முடிவின் படி தனது கச்சா எண்ணெய் உற்பத்தியை 2 மில்லியன் பேரல்கள் குறைப்பதாக அறிவித்ததை கடைபிடித்து வரும் நிலையில், இப்புதிய 1.66 மில்லியன் பேரல் உடன் சேர்த்து மொத்தம் 3.66 மில்லியன் பேரலாக குறைய உள்ளது. இது உலகளாவிய எண்ணெய் தேவையில் சுமார் 3.7 சதவீதமாகும்.
3.66 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பில் பெரும் பகுதியை சவுதி அரேபியா, ரஷ்யா ஆகிய இரு நாடுகள் குறைக்க உள்ளது. இதை தொடர்ந்து தான் ஐக்கிய அரபு நாடுகள், ஈரான் ஆகிய நாடுகள் வருகிறது. மேலும் opec+ நாடுகள் தனது கச்சா எண்ணெய் சப்ளையை அமெரிக்கா, ஐரோப்பாவிற்கு குறைத்த நிலையில், இந்தியா, சீனாவுக்கு அதிகரித்துள்ளது. இதனால் தனது வர்த்தகத்திற்கு எவ்விதமான பாதிப்பும் இருக்காது, வருமானமும் கிடைத்துவிடும்.
ரஷ்யா - உக்ரைன் போரில் உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் மத்தியில் பெரும் பிளவு எற்பட்டு உள்ளது. உதாரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு மத்தியில் இருக்கும் பிரச்சனையை அமெரிக்கா இதுநாள் வரையில் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் போருக்கு பின்பு ரஷ்யாவும், சீனாவும் தலையிட்டு சவுதி அரேபிய ஈரான் நாடுகளை இணைத்துள்ளது.

இதேவேளையில் ரஷ்யா OPEC நாடுகள் உடனான தனது தொடர்பை பயன்படுத்தி கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்கு சாதகமான முடிவுகளை எடுக்க தூண்டியதன் விளைவாக தான் தற்போது 1.66 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பு வெளியாகியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்வால் உலகின் அனைத்து நாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் இந்தியாவுக்கு ரஷ்யா அதிகளவிலான தள்ளுபடியை கொடுக்கும் காரணத்தால் கணிசமான பாதிப்புகள் குறையும்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications