பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது மத்திய அரசு படிப்படியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த வண்ணம் இருக்கிறது. முதல் கட்டமாக இந்தியா பாகிஸ்தான் இடையிலான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. அதேபோல பாகிஸ்தான் உடனான ராஜாங்க ரீதியான உறவை முறித்துக் கொண்டது. இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்ற அறிவிக்கையும் வெளியிட்டது.
இந்தியாவின் தொடர் நடவடிக்கைகளால் பாகிஸ்தானில் பதற்றமான ஒரு சூழல் உண்டாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன . கடந்த 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் நடவடிக்கையால் கடும் கோபம் அடைந்திருக்கும் இந்தியா பாகிஸ்தான் மீது ராஜாங்க ரீதியிலான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் இந்திய பாதுகாப்பு படையினருக்கு முழு சுதந்திரமும் அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார் . பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியாவின் முப்படைகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி இந்த அதிகாரத்தை வழங்கியிருக்கிறார். முன்னதாக கடந்த வியாழக்கிழமை அன்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பஹல் காம் தாக்குதலுக்கு பின்னணியில் இருக்கும் ஒவ்வொரு பயங்கரவாதியும் பிடிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை கிடைப்பது உறுதி செய்யப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்த தாக்குதலில் தொடர்புடைய ஒருவரை கூட நாம் விட்டு வைக்க மாட்டோம் என அவர் கூறியிருந்தார். மத்திய அரசு பயங்கரவாதத்திற்கு எதிரான கடும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு தயாராகி விட்டது என்பதையே இந்த பேச்சுகள் உணர்த்துகின்றன. நாட்டில் பயங்கரவாதத்தை வேரறுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தெரிவித்திருக்கும் அமித்ஷா இது போன்ற ஒரு முட்டாள்தனமான தாக்குதலை நடத்திவிட்டு தப்பிவிடலாம் என எண்ணுபவர்களுக்கு நான் ஒன்று கூறுகிறேன், இது நரேந்திர மோடி தலைமையிலான அரசு , இந்த அரசு உங்கள் ஒருவரை கூட விட்டு வைக்காது என கூறினார்.
இந்தியாவின் தொடர் நடவடிக்கைகளால் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த பிரச்சனையை எதிர்கொள்வதற்கு பாகிஸ்தானும் தன் தரப்பில் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் பாகிஸ்தானில் சாமானிய மக்களிடைய ஒரு விதமான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் அரசு தன் தரப்பில் சில நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன . லஷ்கர் ஐ தொய்பா நிறுவனரும் ஜமாத் உத்தவா கட்சியின் தலைவருமான அஃபீஸ் சையத்திற்கு முழுமையான பாதுகாப்பு தந்திருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. பாகிஸ்தான் உளவுத்துறையினர் தந்த தகவலின் அடிப்படையில் பாகிஸ்தான் அரசு ராணுவத்தினர் மற்றும் சிறப்பு பாதுகாப்பு பிரிவை சேர்ந்தவர்களை அனுப்பி அஃபீஸ் சையத்துக்கு பாதுகாப்பை உறுதி செய்து இருக்கிறதாம்.
லாகூரில் இருக்கும் அவருடைய வீட்டினை சுற்றி தற்போது பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர் வீட்டை சுற்றியுள்ள ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு ராஜாங்க ரீதியிலான நடவடிக்கைகளை தான் இதுவரை எடுத்திருக்கிறது .ராணுவ ரீதியான நடவடிக்கைகளை இதுவரை தொடங்கவில்லை .

தற்போது இந்தியா அமைதியாக இருப்பது புயலுக்கு முன் இருக்கும் அமைதியாக இருக்குமோ என்ற அச்சம் பாகிஸ்தான் அரசிடம் ஏற்பட்டிருக்கிறதாம். எனவே எந்த நேரத்திலும் இந்தியா எல்லையில் தாக்குதலை தொடங்கலாம் என்ற அச்சம் நிலவுவதாக பாகிஸ்தானை சேர்ந்த பாதுகாப்புத்துறை ஆய்வாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். குறிப்பாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்துள்ள காஷ்மீர் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுராசாக்கள் மூடப்பட்டிருக்கின்றன.
குறிப்பாக எல்லை பகுதியில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே இருக்கக்கூடிய கிராமங்களில் எல்லாம் மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்களாம் .பள்ளிகள் அனைத்து மூடப்பட்டு அவை அனைத்தும் பயிற்சி மையங்களாக மாற்றப்பட்டு இருக்கின்றன என ஏஎஃப்பி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகிறது. 11 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் எப்படி தீயணைப்பு கருவிகளை பயன்படுத்துவது, முதலுதவி செய்வது என்பன உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
எல்லையில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய கிராமங்களில் எல்லாம் பங்கர் அமைத்து பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் தஞ்சம் அடைந்து இருக்கிறார்கள். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் மக்கள் அடுத்த இரண்டு மாதங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வாங்கி சேமித்து வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல அனைவருக்கும் உணவு, மருந்து மற்றும் அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக பாகிஸ்தான் அரசு ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 3.5 மில்லியன் டாலர்கள் பணத்தை தயாராக வைத்திருக்கிறதாம்.
நீளம் வேலி உள்ளிட்ட பாகிஸ்தானின் சுற்றுலாத்தலங்கள் அனைத்தும் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. இந்தியா எந்த நேரமும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்ச உணர்வே இதற்கு காரணம் என தெரியவந்திருக்கிறது. அங்கே இருக்கும் தங்கும் விடுதிகள் அனைத்தும் காலியாக இருக்கின்றன, கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கின்றன. பஹல் காம் தாக்குதலை தொடர்ந்து அந்த பகுதியில் தங்கி இருந்த சுற்றுலாப் பயணிகள் அனைவரும் வெளியேறிவிட்டதாக அங்கே செயல்படக்கூடிய தங்குமிட உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
முன்னதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் இந்தியா பாகிஸ்தான் இடையிலான இந்த பதற்றம் தொடர்பாக இருநாட்டு அமைச்சர்களிடமும் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். முன்னதாக அமெரிக்க துணை அதிபர் ஜே டி வான்சும் இந்த தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளை பிடிப்பதற்கு இந்தியாவிற்கு பாகிஸ்தான் ஒத்துழைக்கும் என நம்பிக்கை தெரிவிப்பதாக தெரிவித்திருந்தார். மேலும் இந்த பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளில் இந்தியாவிற்கு அமெரிக்கா துணை நிற்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார். இந்த நிலையில் அமெரிக்கா இந்தியாவுடன் கைகோர்த்து இருப்பதும் பாகிஸ்தானுக்கு பெரிய அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
முன்னதாக மத்திய அரசு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இதனால் பாகிஸ்தானில் இருக்கும் செனாப் நதி வறண்டு போயிருப்பதாக தகவல்கள் வெளியாகின. செற்கை கோள் படங்கள் வெளிவந்தன. அதே வேளையில் பாகிஸ்தானுக்கு கிடைக்கும் வெளிநாட்டு நிதி உதவிகளை தடுக்கும் நடவடிக்கைகளையும் இந்தியா கையில் எடுத்துள்ளது. ராஜாங்க ரீதியாக பல நெருக்கடிகளை இந்தியா பாகிஸ்தானுக்கு தந்திருக்கிறது.
More From GoodReturns

துரந்தர் படத்தின் வசூலில் பங்கு கேட்கும் பாகிஸ்தான் மக்கள்!! இதென்ன புது பிரச்சினை!!

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications