உலகின் வைர தலைநகரமாக இருக்கும் பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப்-பில் (Antwerp), தலைசிறந்த வைர வியாபாரியாக இருப்பவர்கள் இந்தியர்கள்.
அதிலும் குறிப்பிட்ட மதம் மற்றும் கிராமத்தை சேர்ந்தவர் தான் பெல்ஜிய வைர வியாபாரத்தில் அதிகப்படியான ஆதிக்கம் என்பது முக்கியமான விஷயமாக உள்ளது.
இந்தியாவின் வைர தொழிலின் அதிபதி!
இந்தியாவின் மிகப்பெரிய வைர வியாபாரியாகவும், உலக அளவில் குறிப்பிடத்தக்க வைர வியாபாரிகளில் ஒருவராக பாரத் ஷா என்பவர், அத்தொழிலில் கொடி கட்டி பறந்த்து வரும் நபராக உள்ளார்.
இவர் பாலன்பூரின் ஜெயின் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஜெயின் சமூகத்தின் சிறப்பு மற்றும் அவர்களின் வர்த்த யுக்திகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
குஜராத் ஜெயின்கள்!
இந்தியாவின் குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள பாலன்பூரி நகரத்தில் இருந்து வரும் ஜெயின் சமூகத்தினர், இன்று உலக அளவில் புலம்பெயர்ந்து உலகின் வைரம் செதுக்கும் முக்கிய நாடான பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப்பில் மாபெரும் வளர்ச்சியை அடைந்து ஒர் அசைக்க முடியாத வைர வியாபாரிகளை உருவாக்கி வருகின்றனர்.
மேத்தா & ஷா!
பெரும்பாலும் பாலன்பூரைச் சேர்ந்த ஜெயின் குடும்பங்களின் பெயர்கள் மேத்தா அல்லது ஷா என்ற பெயர்களுடனே முடிவடைகின்றன. இவர்கள் அக்கிராமத்தின் நவாப்கள் மற்றும் திறமையான நிர்வாகிகளாகவும், கணக்காளர்களாகவும் பணியாற்றியுள்ளனர்.
1960 இல் தொடங்கிய சகாப்தம்!
குஜராத்தின் பலன்பூரிலிருந்து ஜெயின்கள், பெரும்பாலும் ஷாக்கள் மற்றும் மேதாக்கள் 1960 களில் ஆண்ட்வெர்ப்பிற்கு இடம் பெயர ஆரம்பித்தனர். அச்சமயம் அங்கு வைர வியாபாரத்தில் ஹசிடிக் யூதர்களின் கை மேலோங்கி இருந்தது. அதனால் பல கட்டுப்பாடுகள், அடக்கமுறைகளை ஜெயின்கள் சந்திக்க ஆரம்பித்தனர்.
யூதர்கள் ஆதிக்கம்
யூதர்கள் உடன் போட்டிப்போட முடியாத காரணத்தால் யூதர்கள் இல்லாத வர்த்தகத்தில் அதிலும் குறிப்பாக யூதர்கள் கண்டுக்கொள்ளாத வர்த்தகத்த குறிவைத்து ஜெயின் மக்கள் களத்தில் இறங்க முடிவு செய்தனர்.
குழு உருவாக்கம்!
இந்நிலையில் ஜெயின்களால் ஹசிடிக் யூதர்களுடன் போட்டியிட முடியாத நிலையில், ஜெயின் சமூகத்தினர் ஒரு சிறிய குழுவாக மாறி, வைரத்தூள்களை வெட்டும் மற்றும் சிறிய வைரங்களை மெருகூட்டும், கட் செய்யும் பணிகளை தொடங்கினர். இது வைர வியாபாரிகள் மத்தியில் ஜெயின்களின் வைர வேலைப்பாடுகள் மீது கவனம் திரும்பியது.
ஆண்ட்வெர்ப் டூ இந்தியா
வைர வர்த்தக மையமான ஆண்ட்வெர்ப்-பிற்கு, ஆஸ்திரேலியா மற்றும் சைபீரியாவில் இருந்து கரடுமுரடான வைரங்கள் வரும். அவற்றை ஜெயின்கள் சிறிய வைரங்கள் மற்றும் வைர தூள்களை வாங்கி வேலைப்பாடுகளுக்காக சூரத் மற்றும் நவ்சாரி நகரங்களுக்கு அனுப்பி வைப்பர்.
இந்தியா கைகொடுத்தது
ஏனெனில் ஆண்ட்வெர்ப்பில் ஒரு சிலருக்கும் மட்டுமே வைரங்களை வெட்டும், பாலிஷ் செய்யும் பணி தெரியும் என்பதாலும், பலர் சிறிய வைரத்தை வைத்து பணியாற்ற சிரமப்பட்டதால் ஜெயின் மக்கள் இந்தியாவிற்கு அனுப்பி குறைந்த செலவில் வைர நகைகளை உருவாக்கி ஆண்ட்வெர்ப்பிற்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.
காலப்போக்கில் பதப்படுத்தப்பட்ட வைரங்கள் பின்னர் ஆண்ட்வெர்ப்பிற்கு அனுப்பப்பட்டு, பெல்ஜியம் மற்றும் ஐரோப்பிய நகரங்களிலும் விற்கப்பட்டன.
தனித்துவமிக்க வைர வேலைப்பாடுகள்!
உலக அளவில் இந்த ஜெயின் சமூகத்தினர் வைர கற்களை வெட்டும் மற்றும் பாலிஷ் செய்யும் வேலையிலும், சிறந்த தனித்துவமான வைர நகைகளை உருவாக்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனால்தான் அவர்கள் இந்தியா மட்டுமின்றி உலக அளவிலும் சிறந்த வைர வியாபாரிகளாகவும் உள்ளனர் எனக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications