டெல்லி: இந்தியர்கள் மத்தியில் பன்னீர் உண்ணும் போக்கு அதிகரித்திருக்கிறது. ஆனால் அதில் தான் தற்போது பெரிய சர்ச்சை எழுந்திருக்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கலப்படம் செய்யப்பட்ட பன்னீர் மூலம் உணவு தயாரிக்கப்பட்டு மக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
இரு தினங்களுக்கு முன்னர் லக்னோவில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் 4810 கிலோகிராம் கலப்படம் செய்யப்பட்ட பனீரை கைப்பற்றி அழித்தனர். இவை மனிதர்கள் உண்ண தகுதி இல்லாத பன்னீர் என ஆய்வக சோதனையில் தெரிய வந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். பாலில் இருந்து தயாரிக்காமல் ஸ்கிம்முடு மில்க் பவுடரிலிருந்து இந்த பனீரை தயாரித்து உள்ளனர் என்றும் அதில் கூடுதலாக எண்ணெய் மற்றும் சில கொழுப்பு பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பதும் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

இந்தியா முழுவதுமே தற்போது இந்த பிரச்சனை பெரிய பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பனீரை கைப்பற்றி பரிசோதனை செய்த வண்ணம் இருக்கின்றனர். இதற்கிடையே மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சரான பிரகலாத் ஜோசி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே. பி.நட்டாவிடம் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்.
பல்வேறு உணவகங்கள் மற்றும் விற்பனை நிலையங்கள் போலியான மற்றும் கலப்படமான பனீரை விற்பனை செய்து வருவதாகவும் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். பார்ப்பதற்கு பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட உண்மையான பனீரை போலவே இருக்கும் இந்த சிந்தடிக் பன்னீர் விலை மலிவான பொருட்கள் மற்றும் கொழுப்புகளை கொண்டு தயார் செய்யப்படுகிறதாம்.
உண்மையான பன்னீர் என்பது பாலில் எலுமிச்சை சாறு அல்லது வினிகர் கலந்து அதன்பிறகு பனீராக மாற்றப்படுவது. இத்தகைய போலியான பன்னீர் என்பது காய்கறிகளில் இருந்து எடுக்கப்பட்ட கொழுப்புகள் மற்றும் எண்ணெய் உள்ளிட்டவற்றை கலந்து பால் பவுடர்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு தயார் செய்யப்படும் பன்னீரில் எந்தவித ஊட்டச்சத்தும் இருக்காது எனக் கூறும் அதிகாரிகள் இதனை நுகர்வோருக்கு பின்னாளில் உடல் நல பிரச்சினைகள் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கின்றனர்.
அண்மையில் கூட நடிகர் ஷாருக்கானின் மனைவி கௌரி கானுக்கு சொந்தமான உணவகத்தில் போலியான பன்னீர் மூலம் உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்படுவதாக ஒரு தகவல் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டில் கூட zomato நிறுவனம் போலி பனீரை விற்பனை செய்வதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. 2024 ஏப்ரல் மாதத்தில் இருந்து மார்ச் 2025 வரையிலான ஓராண்டு காலத்தில் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா ஆகிய பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் 702 உணவு பொருட்களை கைப்பற்றி பரிசோதனை செய்துள்ளனர். இதில் அதிக கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பொருளாக பன்னீர் தான் இருந்துள்ளது.
அதாவது 83 சதவீதம் பன்னீர் உணவு பாதுகாப்பு துறை நிர்ணயித்துள்ள தர தரத்தை பூர்த்தி செய்யவில்லையாம். 40 சதவீத பன்னீர் மனிதர்கள் உண்பதற்கு தகுதி அற்றவை என்ற பிரிவில் இருந்தனவாம். இந்த விவகாரத்தை தற்போது மத்திய அரசு தீவிரமாக கையில் எடுத்துள்ளது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications