பேடிஎம் ஆர்பிஐ வங்கியிடம் சிக்கியது எப்படி..? Paytm UPI சேவை பிரச்சனையில்லை..!!

Paytm வாலட் மற்றும் வங்கி செயல்பாடுகள் மீதான RBI தடைகளைத் தொடர்ந்து வணிகம் தொடர்பான பரிவர்த்தனைகளுக்கு வர்த்தகர்கள் Paytm நிறுவனத்தில் இருந்து பிற பேமெண்ட் நிறுவனங்களுக்கு மாற்றிக்கொள்ள வர்த்தகர்களின் அமைப்பான CAIT ஞாயிற்றுக்கிழமை வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தியது.

இதேவேளையில் பேடிஎம் நிறுவனத்தின் மீது, அதன் நிறுவனர் விஜய் சேகர் சர்மா பணச் சலவையில் ஈடுபட்டதாகவும், அமலாக்கத் துறை ஆய்வு செய்து வருவதாகவும் தகவல் வெளியானது, இதை ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் முற்றிலும் தவறான தகவல் எனக் கூறியதோடு, அனைத்து இந்திய சட்டம் மற்றும் ஒழுங்குமுறை விதிகளைக் கடைப்பிடித்து வருகிறோம் என விளக்கம் கொடுத்துள்ளது.

பேடிஎம் ஆர்பிஐ வங்கியிடம் சிக்கியது எப்படி..? Paytm UPI சேவை பிரச்சனையில்லை..!!

பேடிஎம் துவங்கியது எப்படி..? தற்போது ஆர்பிஐ பிடியில் மாட்டிக்கொண்டது எப்படி..?

ஆசிரியரின் மகன்: சீனாவின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் நிறுவனமான அலிபாபா நிறுவனர் ஜாக் மா-வின் மிகப்பெரிய முதலீட்டை ஈர்த்து, உத்தரப் பிரதேசத்தின் அலிகார் நகரை சேர்ந்த ஒரு பள்ளி ஆசிரியரின் மகன் விஜய் சேகர் ஷர்மா தலைமையில் வெற்றிநடைப்போட்ட நிறுவனம் தான் இந்தப் பேடிஎம்.

வாழ்வை எளிதாக்கும் கருவி: இந்தியர்கள் தினமும் வாங்கும் காய்கறிகளுக்குப் பணம் செலுத்தவும், மின்சாரம் முதல் பல அடிப்படை சேவைகளுக்கான கட்டணம் செலுத்தவும், சினிமா டிக்கெட்டு, மொபைல் ரீசார்ஜ் முதல் அனைத்தையும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தி வாங்கவும், பணத்தைச் செலுத்தவும் ஒரு டிஜிட்டல் பேமெண்ட் நிறுவனமாக உருவானது.

பணமதிப்பிழப்புக்கு முன்னும் பின்னும்: இந்த நிறுவனத்தை ஆரம்பத்தில் வெகு சில மக்கள் மட்டுமே ஆதரித்த நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது யாரும் பேடிஎம் சூப்பர்ஸ்டாராக மாறியது மட்டும் அல்லாமல் நாட்டில் சில்லறை பிரச்சனைகளுக்கு முடிவுகட்டியது. ஆனால் இந்த மாபெரும் வெற்றிக்கு சர்ச்சைகளும் பிரச்சனைகளும் வந்தது தான் முக்கியமான விஷயம். அதிலும் குறிப்பாகத் தற்போது வந்துள்ள பிரச்சனை மிகப்பெரியதாக வெடிக்கும் எனப் பேசப்பட்டு வருகிறது.

RBI கொடுத்த எச்சரிக்கை: ஆர்பிஐ கடந்த சில வருடங்களாகத் தொடர்ந்து பேடிஎம் நிறுவனத்தை KYC விதிகளைப் பின்பற்றாதது குறித்து எச்சரிக்கை விடுத்து வந்த நிலையிலும், இதைச் சரி செய்யாமல் பேடிஎம் நிர்வாகம் மெத்தனம் காட்டியது. இந்த நிலையில் பேடிஎம் நிறுவனத்தின் முக்கியக் கிளை நிறுவனமான பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியில் பணச் சலவை செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டு ஆர்பிஐ பிப்ரவரி 29க்குப் பின் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியில் பணத்தை எடுக்கவும், டெப்பாசிட் செய்யவும் தடை விதித்துள்ளது.

துவக்கப் புள்ளி: இந்த அனைத்து பிரச்சனைக்கும் துவக்கப் புள்ளியாக நிதியியல் தளங்கள் மற்றும் பேடிஎம் பேமெண்ட் வங்கிக்கு மத்தியில் முறைகேடாக, சந்தேகத்திற்கு இடமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள விதிமுறைக்கு மீறிய நிதி பரிமாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதை ஆர்பிஐ கண்டுபிடித்துள்ளது. KYC ப்ரீபெய்டு நிதி திட்டங்களில் அளவுக்கு அதிகமாகத் தொகை பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

KYC விதிகள்: இதேபோல் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி KYC விதிகளைப் பூர்த்தி செய்யாத பல லட்சம் கணக்குகளில் இருந்து பேமெண்ட்களைப் பிராசஸ் செய்துள்ளது. இதோடு ஒரே பான் கார்டு வைத்து பல கணக்குகள் திறக்க பயன்படுத்தப்பட்ட 1000த்திற்கும் அதிகமான வழக்குகள் உள்ளதையும் ஆர்பிஐ கண்டுபிடித்துள்ளது.

3 அமைப்புகள்: ரிசர்வ் வங்கியைத் தவிர, நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள அமலாக்க இயக்குநரகம் (ED), உள்துறை அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகம் (PMO) ஆகியவையும் பேடிஎம் பிரச்சனை குறித்து ஆலோசனை செய்து வருகிறது. Paytm விதிமுறைகளுக்கு இணங்காதது குறித்த மூன்று அமைப்பிற்கு RBI கடிதம் எழுதியுள்ளது.

அமலாக்க துறை தலையீடு: மேலும் சட்டவிரோத நடவடிக்கைக்கான ஆதாரம் கிடைத்தால், Paytm வங்கியை ED விசாரிக்கும் என்று வருவாய் செயலாளர் சஞ்சய் மல்ஹோத்ரா சனிக்கிழமை ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். இதனால் வாடிக்கையாளர்களுக்கு என்ன நடக்கும்.

என்ன நடக்கும்: ஆர்பிஐ விதிகளைப் பின்பற்றாமல், குறித்த காலத்திற்குள் விதிகளைப் பூர்த்திச் செய்யாமல் இருந்தால் பிப்ரவரி 29க்கு பின்பு பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் கணக்குகள், வேலெட்கள், பாஸ்டேக் மற்றும் இதர நிதி சேவைகளில் பணத்தை டெபாசிட் செய்யவோ அல்லது திரும்ப எடுக்கவோ முடியாது.

யாருக்குப் பாதிப்பு: பிப்ரவரி 29க்கு பின்பு கணக்கில் இருக்கும் பணத்தை வைத்துப் பேமெண்ட் செய்துக்கொள்ள முடியும், இதில் எவ்விதமான பிரச்சனையும் இருக்காது. தற்போது பேடிஎம் மூலம் அதிகம் பாதிக்கப்படுவது பாஸ்டேக் வாடிக்கையாளர்கள் தான்.

Paytm UPI சேவை: ஆர்பிஐ விதிகள் மூலம் பேடிஎம் நிறுவனத்தின் யூபிஐ சேவைக்கு எவ்விதமான பிரச்சனையும் இல்லை. பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பின்பும் இது எவ்விதமான தடையுமின்றி பயன்படுத்தப்படும், ஆர்பிஐ விதித்துள்ள தடைகள் அனைத்தும் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி-க்கு தான்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+