நடிகர்கள் என்றாலே படங்களில், விளம்பரங்களில் நடிப்பார்கள், திரைப்படங்களை தயாரிப்பார்கள், பெரிய பெரிய தொழில்களில் முதலீடு செய்வார்கள் என்ற பிம்பத்தை உடைத்திருக்கிறார் நடிகர் மாதவன்.
தமிழ் சினிமா தொடங்கி பாலிவுட் வரை ஏராளமான ரசிகைகளை கொண்ட ஒரு நடிகர் தான் மாதவன். தொடக்க காலத்தில் தமிழில் இவர் நடிப்பில் வெளியான அலைபாயுதே, மின்னலே, ரன் உள்ளிட்ட படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். பின்னர் பாலிவுட் பக்கம் சென்று அங்கும் புகழ்பெற்றார். தற்போது நாடு முழுவதும் ரசிகர்களை கொண்டவராக மாதவன் இருக்கிறார். மாதவன் நடிக்க கூடிய ஒரு படம் என்றாலே அது தனித்துவமான கதை கொண்டதாக இருக்கும் என்ற ஒரு என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறார்.

அண்மையில் கூட நாடு முழுவதும் பெருமளவில் வெற்றியைப் பெற்ற துரந்தர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றி ரசிகர்களை கவர்ந்தார். தன்னுடைய அழகான புன்னகைக்கு பெயர் போன மாதவன் நடிப்பில் மட்டுமல்ல , சமூக ரீதியாகவும் செயல்பட்டு வருகிறார். அதுவும் விவசாயத்தில் கவனம் செலுத்துகிறார்.
தமிழ்நாட்டில் தரிசு நிலத்தை வாங்கி அதனை தென்னந்தோப்பாக மாற்றி காட்டி இருக்கிறார். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தரிசு நிலத்தை வாங்கி மூன்றே ஆண்டுகளில் பிரம்மாண்டமான தென்னந்தோப்பாக மாற்றி இருக்கிறார். மாதவன் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பழனியில் ஒரு தரிசு நிலத்தை வாங்கினார்.
இந்த ப்ராஜெக்ட் குறித்து 2020-லேயே அவர் சமூக வலைத்தளத்தில் பதிவு வெளியிட்டிருந்தார். அதில் தமிழ்நாட்டின் பழனியில் தென்னை சாகுபடி திட்டம் வெற்றியடைந்திருக்கிறது எனக் கூறியிருக்கிறார். ஒரு கோட்பாடு நிரூபிக்கப்பட்டதை காண்பது மன நிறைவை தருகிறது என பதிவு செய்துள்ள அவர் இந்த தென்னந்தோப்பின் புதிய உள்ளூர் உரிமையாளர்களுக்கும் வாழ்த்துக்கள் எனக் கூறியிருக்கிறார். எங்களைப் போலவே இந்த திட்டம் உங்களுக்கும் மனநிறைவை அளிக்கட்டும் எனக் கூறியிருக்கும் அவர் இந்த அற்புதமான இடத்தை விட்டுச் செல்வது வருத்தமாக இருக்கிறது பழனியில் உள்ள உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என கூறியிருந்தார்.

மாதவன் தரிசு நிலத்தை வாங்கி அங்கே இயற்கை முறையில் நான் ஹைபிரிட் வகை தென்னங்கன்றுகளை நட்டு விவசாயம் செய்துள்ளார். dwarf எனப்படும் குறைந்த உயரம் கொண்ட தென்னை மரங்களை வளர்த்து அதனை விற்பனை செய்துள்ளார். இந்த தென்னந்தோப்பு திட்டம் பல்வேறு பாடங்களை கற்றுத் தந்தது என அவர் கூறியிருக்கிறார். இந்த நிலத்திற்கு புத்துயிர் அளித்து ஒரு தரிசன நிலத்தை வளமையான பூமியாக மாற்றியதை பார்ப்பதற்கே அற்புதமாக இருக்கிறது என கூறியிருக்கிறார்.
இந்த தென்னந்தோப்பு வளர்ப்பில் நான் கற்றுக் கொண்ட ஒவ்வொரு விஷயமும் விலைமதிப்பற்றவை என மாதவன் சுட்டிக்காட்டி இருக்கிறார். என்னுடைய வாழ்விலேயே எனக்கு மிகவும் நிறைவான அனுபவத்தையும் மன நிம்மதியையும் தந்த ஒரு ப்ராஜெக்ட் இது என அவர் கூறியிருக்கிறார் இதே வழிமுறையை இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் விரைவில் செயல்படுத்த போகிறேன் என அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications