IRCTC: கையை விட்டு புண்ணாக்கிக் கொண்ட ரயில்வே அமைச்சகம்..!

மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களில் அதிகப்படியான வர்த்தகம் மற்றும் லாபத்துடன் இயங்கும் ஒரு முக்கியமான நிறுவனம் IRCTC. இந்த நிறுவனம் ஐபிஓ வெளியிட்ட நாளில் இருந்து அதிகப்படியான வர்த்தக உயர்வைப் பதிவு செய்து முதலீட்டாளர்களுக்கு மிகவும் விருப்பமான முதலீடாக உள்ளது.

மோனோபோலி

மோனோபோலி

இந்திய ரயில்வே துறைக்குக் கேட்ரிங் மற்றும் டூரிசம் சேவை அளிக்கும் ஒரே நிறுவனம் ஐஆர்சிடிசி மட்டுமே என்பதால் இத்துறையில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துவது மட்டும் அல்லாமல் மோனோபோலியாக விளங்கும் காரணத்தால், இந்நிறுவனப் பங்குகளில் அதிகப்படியான முதலீடுகள் குவிந்தது.

ஸ்டாக் ஸ்பிலிட்

ஸ்டாக் ஸ்பிலிட்

இந்நிலையில் கடந்த வாரம் 10 ரூபாய் முக மதிப்பு கொண்ட IRCTC பங்குகளை மத்திய அரசு 1:5 ஆக உடைத்தது. இதன் பின்பும் 15 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்து வந்த IRCTC பங்குகள் நேற்றில் இருந்து தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்தச் சரிவுக்கு மிக முக்கியமான காரணம் ரயில்வே துறையின் அறிவிப்பு தான்.

50 சதவீத பகிர்வு

50 சதவீத பகிர்வு

இந்திய ரயில்வே துறை IRCTC பெறும் டிக்கெட் புக்கிங் சேவையில் கிடைக்கும் convenience fee-யில் 50 சதவீதத்தை அரசுக்கு அளிக்க உத்தரவிட்டது. இது நடைமுறைப்படுத்தப்பட்டால் அதிகளவிலான வருமானத்தை IRCTC இழக்க நேரிடும். இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஐஆர்சிடிசி பங்கு

ஐஆர்சிடிசி பங்கு

ஐஆர்சிடிசி ஸ்டாக் ஸ்பிளிட்-க்கு பின்பு ஒரு பங்கு விலை 825 ரூபாயில் இருந்து 976 ரூபாய் வரையில் உயர்ந்தது. ஆனால் இந்திய ரயில்வே துறை அறிவிப்புக்குப் பின்பு ஐஆர்சிடிசி பங்கு விலை 650 ரூபாய் வரையில் சரிந்தது. இது மத்திய அரசுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

உத்தரவு ரத்து

உத்தரவு ரத்து

இதன் எதிரொலியாக இந்திய ரயில்வே துறை convenience fee குறித்து வெளியிட்ட அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற்று உள்ளதாக DIPAM அமைப்பின் செயலாளர் துஹின் காந்த பாண்டே தெரிவித்துள்ளார். இந்தத் திடீர் மன மாற்றத்திற்கு என்ன காரணம் எனக் கேட்டால்.. மிகப்பெரிய காரணம் உள்ளது.

வருமானம்

வருமானம்

இந்திய ரயில்வே துறை அறிவிப்பின் படி ஐஆர்சிடிசி 50 சதவீத convenience fee பகிர வேண்டும் என்றால் வருடத்திற்கு அதிகப்படியாக 500 கோடி ரூபாய் கிடைக்கும்.

கொரோனாவுக்கு மொத்த convenience fee வசூல் அளவு 620 கோடி ரூபாய் மட்டுமே என்பதால் எதிர்கால வளர்ச்சி, கட்டண உயர்வு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டாலும் அதிகப்படியாக 400 முதல் 500 கோடி ரூபாய் மட்டுமே கிடைக்கும்.

 

மத்திய அரசு

மத்திய அரசு

மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் ஐஆர்சிடிசி பங்குகள் விலை மாபெரும் வளர்ச்சி அடைய மிக முக்கியமான காரணம் மோனோபோலி சென்டிமென்ட் தான், ஆனால் அதற்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் இந்திய ரயில்வே துறை அறிவிப்பின் இருந்த காரணத்தால் ஐஆர்சிடிசி பங்குகள் விலை சரியத் துவங்கியுள்ளது.

1 சதவீதம் சரிவு

1 சதவீதம் சரிவு

மத்திய அரசு ஐஆர்சிடிசி நிறுவனத்தில் 67 சதவீத பங்குகளை வைத்துள்ளது, அப்படிப் பார்த்தால் ஐஆர்சிடிசி மொத்த சந்தை மதிப்பீட்டை வைத்துக் கணக்கிடும் போது 1 சதவீதம் சரிவடைந்தால் மத்திய அரசுக்கு 490 கோடி ரூபாய் நஷ்டம்.

4,900 கோடி ரூபாய் இழப்பு

4,900 கோடி ரூபாய் இழப்பு

தற்போது ஐஆர்சிடிசி பங்குகள் நேற்றைய உச்ச அளவில் இருந்து 10 சதவீதம் சரிந்துள்ளது. இதனால் மத்திய அரசுக்கு 4,900 கோடி ரூபாய் நஷ்டம். இந்தச் சரிவு தொடர்ந்து ஐஆர்சிடிசி பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும். இதற்குப் பயந்து தான் இந்திய ரயில்வே துறை அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற்றது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+