இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி சேவை தளமான சோமேட்டோ மற்றும் ஸ்விக்கி கடந்த சில நாட்களாக இப்பிரிவில் வர்த்தகம் குறைந்து வருகிறது என புலம்பி வந்தது, ஆனாலும் இத்துறையில் இவ்விரு நிறுவனங்களும் Duopoly ஆக இருக்கும் காரணத்தால் எந்த பிரச்சனையும் இல்லாமல் இயங்கி வந்தது. இந்த ஆதிக்கத்தை உடைக்கும் விதிமாக ரேபிடோ டாக்சி சேவை இப்பிரிவில் எப்படி பெரும் புரட்சி செய்ததோ அதேபோல் தற்போது உணவு டெலிவரி துறையிலும் மாஸ் காட்ட திட்டமிட்டு உள்ளது.
ரேபிடோ நிறுவனம் இந்திய உணவு டெலிவரி சந்தையில் புதிய புரட்சியை ஏற்படுத்த உள்ளது. ஸ்விக்கி மற்றும் சோமேட்டோவின் ஆதிக்கத்தை உடைக்கும் விதமாக உணவகங்களுடன் மிகக் குறைந்த கமிஷனில் சேவை வழங்க தயாராகியுள்ளது Rapido. இந்த முயற்சி, குறிப்பாக சிறு உணவகங்களுக்கு பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் சிறு நிறுவனங்கள் அதிகப்படியான செலவுகள் காரணமாக சோமேட்டோ, ஸ்விக்கி தளத்தில் இருந்து வெளியேறுவது வாடிக்கையாகியிருக்கும் வேளையில் தற்போது இந்த வெளியேற்றத்தை வேகப்படுத்த புதிய திட்டத்தையும், சேவையும் அறிமுகம் செய்துள்ளது,அதுவும் பெங்களூரில் தான் முதலில் அறிமுகம் செய்ய உள்ளது.
தேசிய உணவகங்கள் சங்கத்துடன் (NRAI) உடன் செய்துக்கொண்ட ஒப்பந்தம் படி ரேபிடோ உணவகங்களின் உணவு டெலவிக்கு, வெறும் 8-15% கமிஷன் மட்டுமே வசூலிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, ஸ்விக்கி மற்றும் சோமேட்டோ வசூலிக்கும் 16-30% கமிஷனை விட குறைவு. இந்த குறைந்த கமிஷன் விகிதம், உணவகங்களின் லாபத்தை அதிகரிக்க உதவும் என தொழில் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
ரேபிடோ வெளியிட்டுள்ள தகவல் படி அதன் கட்டண அமைப்பு மிகவும் எளிமையாக கட்டமைக்கப்பட்டு உள்ளது. அதாவது ரூ.400-க்கு கீழ் உள்ள ஆர்டர்களுக்கு ரூ.25 மற்றும் ரூ.400-க்கு மேல் உள்ள ஆர்டர்களுக்கு ரூ.50 என்ற நிலையான கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
இந்த முறை, உணவகங்களுக்கு செலவு குறைக்கவும், வாடிக்கையாளர்களுக்கு வெளிப்படையான கட்டண முறைகளை வழங்கவும் உள்ளது. இதன் மூலம் ரேபிடோ செயலியில் உணவகங்கள் பட்டியலிடப்பட்டு, அதன் வாடிக்கையாளர்கள் எளிதாக பைக், ஆட்டோ,டாக்சி புக் செய்வது போல் உணவைும் இனி ஆர்டர் செய்ய முடியும்.
குறைந்த கமிஷன் மற்றும் நிலையான கட்டணம் ஆகியவை, சிறு உணவகங்களுக்கு வர்த்தக அழுத்தத்தை குறைத்து, சந்தையில் பிற நிறுவனங்கள் உடன் போட்டியிடவும், கூடுதல் வர்த்தகத்தை பெறவும் உதவும். இந்த சேவை முதலில் பெங்களூருவில் ஜூன் இறுதி அல்லது ஜூலை முதல் வாரத்தில் தொடங்கப்பட உள்ளது.
ரேபிடோவின் இந்த புதிய முயற்சி, உணவு விநியோக சந்தையில் புதிய போட்டியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த கட்டண முறை மற்றும் சிறு உணவகங்களுக்கு ஆதரவான அணுகுமுறை ஆகியவை, ரேபிடோவை வாடிக்கையாளர்கள் மற்றும் உணவக உரிமையாளர்களிடையே வேகமாக பிரபலமாக்கலாம். பெங்களூருவில் தொடங்கப்படும் இந்த பைலட் திட்டம், வெற்றி பெற்றால் மற்ற நகரங்களுக்கும் விரிவாக்கப்படலாம்.


Click it and Unblock the Notifications