மும்பை: இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த தொழில் குழுமம் டாடா. ஏனெனில் இந்த குழுமத்திற்கு உட்பட்ட நிறுவனங்கள் சம்பாதிக்கும் பெரும் பணத்தை அறக்கட்டளைகள் வாயிலாக மக்கள் நல பணிகளுக்கு வழங்கப்படுகின்றன. இதற்கு அடித்தளமிட்டவர் ரத்தன் டாடா. ரத்தன் டாட்டா அக்டோபர் 7-ஆம் தேதி வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவரது மறைவு இந்திய தொழில் துறையில் மிகப்பெரிய வெற்றிடத்தை உருவாக்கி இருக்கிறது.
உண்மையில் டாடா தொழில் குழுமத்தின் நேரடி வாரிசு ரத்தன் டாடா கிடையாது. அவரது தந்தையான நாவல் டாடாவே ஒரு தத்துப்பிள்ளை தான். நாவல் டாடா 1904-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி சூரத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் . அவரது தந்தை டாடா குழும நிறுவனரான ஜாம்செட்ஜி டாடாவின் தூரத்து உறவினர்களுள் ஒருவர். சிறு வயதிலேயே தந்தை தந்தையை இழந்த நாவல் டாடா பார்சி ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் சேர்க்கப்பட்டார். அங்கே சர் ரத்தன் ஜி ஜாம்செட்ஜி டாடாவின் மனைவியான நவாஜ் பாய் டாடா , நாவல் டாடாவை கண்டார். அப்போது நாவல் டாடாவை தத்தெடுப்பது என முடிவெடுத்தார்.

அப்படி 13 வயதாகும்போது நாவல் டாடா தத்துப் பிள்ளையாக டாடா குடும்பத்தில் ஒருவராக இணைந்தார். இதனை அடுத்து அவர் மும்பை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பிரிவில் பட்டப் படிப்பை முடித்தார். பின்னர் லண்டனுக்கு சென்று மேற்படிப்பை தொடர்ந்தார். சாதாரண குடும்பத்தில் பிறந்து பின்னர் நவாஜ் பாய் டாடாவால் தத்தெடுக்கப்பட்ட நாவல் டாட்டாவின் மகன் தான் ரத்தன் டாடா.
ரத்தன் டாடா 1937 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார். ரத்தன் டாடாவுக்கு 10 வயதாக இருக்கும் போதே அவரது பெற்றோர் பிரிந்து விட்டனர். இதனை அடுத்து ரத்தன் டாடாவை அவரது பாட்டியான நவாஜ்பாய் டாடாவே பார்சி ஆதரவற்றோர் இல்லம் வாயிலாக தத்தெடுத்துக் கொண்டார். இதனை அடுத்து ரத்தன் டாடா சிம்லாவில் உள்ள பிஷப் காட்டன் பள்ளியில் பள்ளி படிப்பை தொடர்ந்தார்.
பின்னர் தத்தெடுக்கப்பட்ட பிறகு மும்பை குடிபெயர்ந்த அவர் அங்குள்ள ஜான் கெனான் பள்ளியில் படிப்பை முடித்தார். இதனை அடுத்து நியூயார்க்கில் சென்று மேற்படிப்பினை முடித்தார். கட்டிடக்கலை, வடிவமைப்பு பொறியியல் , தொழில் மேலாண்மை உள்ளிட்ட பிரிவுகளில் பட்டப்படிப்பை முடித்த ரத்தன் டாடா 1962 ஆம் ஆண்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் ஒரு ஊழியராக பணிக்கு சேர்ந்தார். இதனை அடுத்து படிப்படியாக
நிறுவனத்தில் அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறி டாடா குழுமத்திற்கே தலைவரானார்.
Written by: Devika


Click it and Unblock the Notifications