1984- வாழ்வாதாரத்தை இழந்து தவித்த சீக்கியர்கள்!! முதல் ஆளாக உதவிக்கரம் நீட்டிய ரத்தன் டாடா..!

பஞ்சாப்: ரத்தன் டாடா இந்திய மக்களால் பெரிதும் விரும்பப்படும் ஒரு தொழிலதிபர். இதற்கு முக்கிய காரணம் சமூகத்தின் மீது அவர் கொண்டிருந்த அக்கறை. அப்படி 1984ஆம் ஆண்டு சீக்கிய படுகொலையின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தன் டாடா தான் முதல் ஆளாக வந்து உதவி செய்துள்ளார்.

டாடா குழுமத்தின் தலைவரும் , இந்தியாவில் தொழில் அடையாளமுமாக இருந்த ரத்தன் டாடா வயது மூப்பு காரணமாக காலமானார் .தன்னுடைய மனிதாபிமான செயல்பாடுகளுக்காகவும் தொண்டு நடவடிக்கைகளுக்காகவும் பெருமளவில் மக்களிடையே பெயர் பெற்றவர் தான் ரத்தன் டாடா. இவர் 1984 ஆம் ஆண்டு சீக்கிய படுகொலையின் போது செய்த உதவியை சீக்கியர்கள் இன்றும் நன்றி மறவாமல் நினைவில் கொண்டுள்ளனர்.

1984- வாழ்வாதாரத்தை இழந்து தவித்த சீக்கியர்கள்!! முதல் ஆளாக உதவிக்கரம் நீட்டிய ரத்தன் டாடா..!

1984 ஆம் ஆண்டு சீக்கியர்கள் படுகொலை நடைபெற்ற போது வட இந்தியாவில் சீக்கியர்களின் வாகனங்கள் முழுவதும் தீக்கிரையாக்கப்பட்டன. பெரும்பாலான சீக்கியர்கள் லாரி ஓட்டுநர்கள் என்பதால் அவர்களின் ஒரே ஆதாரமாக இருந்த லாரிகளை இந்த வன்முறையின் போது இழந்தனர்.

அடுத்து என்ன செய்வது ? வாழ்க்கையை எப்படி தொடங்குவது என பல குழப்பங்களில் ஆழ்ந்தனர். அப்படி அனைத்தையும் இழந்து இருளில் மூழ்கி சீக்கிய லாரி ஓட்டுநர்களின் வாழ்க்கையில் விளக்கேற்றி வெளிச்சத்தை தந்தவர் தான் ரத்தன் டாடா.

வாழ்வாதாரத்தை இழந்து நின்ற சீக்கிய லாரி ஓட்டுநர்களுக்கு ரத்தன் டாடா தன்னுடைய டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வாயிலாக, இலவசமாக புதிய லாரிகளை வழங்கினார். அனைத்து இழந்து தவித்த சீக்கியர் மீண்டும் தங்களுடைய வாழ்க்கையை தொடங்குவதற்கு இது உதவியாக இருந்துள்ளது. ரத்தன் டாடாவின் இந்த செயலை சீக்கிய மக்கள் இன்றளவும் நன்றி மறவாமல் நினைவு கூறுகின்றனர். படுகொலை நிகழ்ந்து இத்தனை ஆண்டுகள் ஆனாலும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சீக்கியர்கள் இன்றளவும் டாடா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட லாரிகளை மட்டுமே வாங்குகின்றனர்.

பஞ்சாப், ராஜஸ்தான், உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருக்கும் சுமார் 500 லாரி ஓட்டுநர்களிடம் அர்பன் கம்பெனி இணை நிறுவனர் அபிராஜ் சிங் பால், ஒரு சர்வே நடத்திய போது தான் இந்த விஷயம் வெளிவந்தது. சீக்கியர்கள் பெரும்பாலோ டாடா மோட்டார்ஸின் லாரிகளை மட்டுமே வாங்கி பயன்படுத்துவது தெரிய வந்த போது அவர் இந்த சர்வேயை நடத்தினாராம். மற்ற நிறுவனங்கள் பெரிய அளவிலான தள்ளுபடிகளை வழங்கிய போதிலும் சீக்கியர்கள் அவற்றை வாங்க முன்வருவதில்லையாம்.

இந்த விஷயத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டியது அந்த சமயத்தில் சீக்கியர்களுக்கு இலவசமாக லாரி வழங்கியதை டாடா நிறுவனம் ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தி விளம்பரம் செய்யவில்லை என்பது தான். எனவே தான் தொழில்களின் தலைவராக மட்டுமல்லாமல் மக்களின் நலன்களுக்கான தலைவராக அறியப்படுகிறார் ரத்தன் டாடா.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+