இவங்க எல்லாம் கண்டிப்பா பெரிய ஆளா வருவாங்க.. அன்றே கணித்து முதலீடு செய்த ரத்தன் டாடா..

2024ஆம் ஆண்டில் இந்தியா தனக்கு மிகவும் பிடித்தமான தொழிலதிபரான ரத்தன் டாடாவை இழந்தது. ரத்தன் டாடாவின் மறைவுக்கு சாமானிய மக்களும் கண்ணீர் சிந்தியதை பார்க்க முடிந்தது. இன்று ரத்தன் டாடாவுக்கு பிறந்தநாள்.

சுயநலத்துக்காக தொழில் செய்யாமல் பொதுநலனுக்காக தொழில் செய்தவர் தான் ரத்தன் டாடா. தான் மட்டும் வளர வேண்டும் என நினைக்காமல் பலரையும் தொழில் துறையில் வளர்த்து விட்டார்., இந்தியாவில் தற்போது முன்னணியில் இருக்கும் பல தொழில்களுக்கும் முதல் ஆளாக முதலீடு செய்து தொடங்கி வைத்தது ரத்தன் டாடா தான்.

இவங்க எல்லாம் கண்டிப்பா பெரிய ஆளா வருவாங்க.. அன்றே கணித்து முதலீடு செய்த ரத்தன் டாடா..

1. பேடிஎம்: 2015 ஆம் ஆண்டு ரத்தன் டாடா ஃபின்டெக் தளமான பேடிஎம் நிறுவனத்தில் முதலீடு செய்தார். அப்பொழுது இந்தியாவில் டிஜிட்டல் பேமென்ட் சேவைகள் தொடங்கப்பட்டிருந்த காலம் இந்திய டிஜிட்டல் பேமென்ட் சந்தையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய நிறுவனமாக பேடிஎம் இருக்கும் என்பதை முன்கூட்டியே கணித்து அவர் அதில் முதலீடு செய்தார்.

2. ஓலா: 2015 ஆம் ஆண்டு ஓலா நிறுவனத்தில் ரத்தன் டாடா முதலீடு செய்தார். பின்னர் ஓலா நிறுவனத்தின் வளர்ச்சியை கண்டு 2017 ஆம் ஆண்டிலும் கணிசமான தொகையை முதலீடாக வழங்கினார். தங்களுடைய நிறுவனம் மின்சார இருசக்கர வாகன உற்பத்தியை தொடங்குவதற்கு ரத்தன் டாடா அளித்த ஊக்கமே காரணம் என பவிஷ் அகர்வால் ஒரு பேட்டியில் கூறி இருப்பதை இந்த இடத்தில் நாம் நினைவு கூற வேண்டும்.

3. லென்ஸ்கார்ட்: இந்தியாவில் தற்போது முன்னணி கண்கண்ணாடி விற்பனை நிறுவனமாக லென்ஸ்கார்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திலும் முதன்முறையாக நம்பி முதலீடு செய்தது ரத்தன் டாடா தான் .2016 ஆம் ஆண்டு ரத்தன் டாடா இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து நாடு முழுவதும் மிகப்பெரிய நிறுவனமாக லென்ஸ்கார்ட் உருவெடுப்பதற்கு காரணமாக இருந்தார்.

4. கார் தேகோ: 2015 ஆம் ஆண்டு ரத்தன் டாடா கார் தேகோ நிறுவனத்தில் முதலீடு செய்தார். 2021 ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் இந்தியாவின் யூனிகார்ன் நிறுவனங்களில் ஒன்றாக இணைந்தது. கார் தேகோ என்பது புதிய கார்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்க உதவக்கூடிய ஒரு இணையதளமாகும்.

5.அர்பன் கம்பெனி: இந்தியாவில் பெருநகரங்களில் எல்லாம் வீடுகளுக்கு தேவையான அடிப்படை சேவைகளை வழங்கக்கூடிய நிறுவனமாக அர்பன் கம்பெனி உருவெடுத்துள்ளது. 2015 ஆம் ஆண்டில் ரத்தன் டாடா இந்த ஐடியாவை நம்பி முதலீடு செய்தார். தற்போது புகழ்பெற்ற ஒரு நிறுவனமாக அர்பன் கம்பெனி மாறி இருக்கிறது.

6. ஸ்னாப்டீல்: 2014 ஆம் ஆண்டில் இகாமர்ஸ் நிறுவனமான ஸ்னாப்டீல் நிறுவனத்தில் ரத்தன் டாடா முதலீடு செய்தார். பின்னர் இது யூனிகார்ன் நிறுவனமாகவும் வளர்ச்சி பெற்றது.

7. கியூர்ஃபிட்: இந்தியாவை சேர்ந்த ஃபிட்னஸ் மற்றும் வெல்னஸ் தொடர்பான ஒரு தளமாகும். இந்த தளத்தில் 2017 ஆம் ஆண்டு தன்னுடைய ஆர்என்டி கேப்பிட்டல் நிறுவனத்தின் வாயிலாக ரத்தன் டாடா முதலீடு செய்தார் . இந்த நிறுவனம் 2021 ஆம் ஆண்டு யூனிகார்ன் நிறுவனம் என்ற அந்தஸ்தை பெற்றது.

8. அப்ஸ்டாக்ஸ்: இந்தியாவை சேர்ந்த பங்குச்சந்தை வர்த்தகத்திற்கான ஒரு செயலி இது. ரத்தன் டாடா இந்த நிறுவனத்தில் 2016 ஆம் ஆண்டில் முதலீடு செய்தார்.

9.அர்பன் லேடர்: ஆன்லைன் வாயிலாக வீட்டுக்கு தேவையான சோபா, டேபிள் உள்ளிட்டவற்றின் விற்பனை வளர்ச்சி அடையும் என்பதை முன்பே கணித்த ரத்தன் டாடா 2014 ஆம் ஆண்டிலேயே அர்பன் லேடர் நிறுவனத்தில் முதலீடு செய்தார். அண்மையில் இந்த நிறுவனத்தை ரிலையன்ஸ் ரீடைல் கைப்பற்றியது.

10.லைப்ரிட்: இது ஒரு டெலி மெடிசன் தளம் ஆகும். 2015ஆம் ஆண்டில் இதில் 68 கோடி ரூபாயை முதலீடு செய்தார் இதன் மூலம் லைப்ரெட் நிறுவனம் மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்தது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+