சென்னை: கைவசம் கிரெடிட் கார்டு இருக்கும்போது, பாலிக்கு சுற்றுலா, புதிய பைக், டிவி என நீண்ட நாட்களாக இருந்த அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். அதிலும் சிலருக்கு கிரெடிட் கார்டின் வரம்பை முழுவதுமாக பயன்படுத்த வேண்டும் என்று கூட தோன்றலாம். இதுபோன்ற யோசனை முற்றிலும் தவறானது. கிரெடிட் கார்டை வைத்து கட்டுப்பாடற்ற செலவு செய்யும்போது ஏற்படும் விளைவுகள் என்ன? என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
நீங்கள் வைத்திருக்கும் கிரெடிட் லிமிட்டின் அளவைப் பொறுத்து, உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் அமையும். எனவே கிரெடிட் கார்டு வரம்பை ஒருபோதும் தீர்த்து விடக்கூடாது. கிரெடிட் பயன்பாட்டு விகிதம் 50 சதவீதத்தில் வைத்திருப்பது சிறந்தது என்று கூறப்படுகிறது.

கடன் பயன்பாட்டு விகிதம் (Credit Utilization Ratio) என்றால் என்ன?: கடன் பயன்பாட்டு விகிதம் என்பது, உங்கள் மொத்த கடன் வரம்பில் நீங்கள் எவ்வளவு சதவீதக் கடனைப் பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்பதைக் குறிக்கிறது. எளிமையாகச் சொல்வதானால், உங்கள் கிரெடிட் கார்டின் மொத்த வரம்பில் எவ்வளவு சதவீதம் செலவு செய்தீர்கள் என்பதைக் கடன் பயன்பாட்டு விகிதம் காட்டுகிறது.
உதாரணமாக, உங்கள் கிரெடிட் கார்டின் வரம்பு ரூ. 1,00,000 என்று வைத்துக் கொள்வோம். தற்போது நீங்கள் ரூ. 50,000 செலவு செய்துவிட்டீர்கள் என்றால், உங்கள் கடன் பயன்பாட்டு விகிதம் 50% என்று பொருள்.
அதிக கிரெடிட் பயன்பாட்டு விகிதம், கடன் வழங்குபவர்களால் நிதி ரீதியாக ஆபத்தான நடத்தை என்று பார்க்கப்படுகிறது. எனவே அதிக அளவிலான கிரெடிட் பயன்பாட்டு விகிதம், கிரெடிட் கார்டு வழங்குனர்களால் பொறுப்பு இல்லாமல் ஒருவர் செலவு செய்வதை குறிக்கிறது. இதனால் ஒருவருடைய கிரெடிட் ஸ்கோர் கணிசமாகக் குறையலாம்.
கிரெடிட் கார்டில் கிடைக்கும் கடன் வரம்பை குறைவாகப் பயன்படுத்துவது, பொறுப்பான செலவைக் சுட்டிக் காட்டுகிறது. எனவே, கிரெடிட் ஸ்கோர் கணக்கிடும் போது, குறைந்த கடன் வரம்பு சிறந்த நடத்தையாகப் பார்க்கப்படுகிறது.
குறைந்த கடன் பயன்பாட்டு விகிதம் உங்களுடைய புத்திசாலித்தனமான கடன் நிர்வகிப்பு திறனை சுட்டிக்காட்டுகிறது. மேலும் உங்கள் கிரெடிட் ஸ்கோரை நல்ல முறையில் பராமரிக்க உதவுகிறது என்று TransUnion CIBIL Limited நிறுவனத்தின் துணைத் தலைவர் பூஷன் கூறியுள்ளார்.
ஒரு கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனத்தின் அடிப்படையில் மட்டும் கிரெடிட் பயன்பாட்டு விகிதத்தை எடுத்துக் கொள்ள முடியாது. கிரெடிட் கார்டு பெற்ற ஒவ்வொருவருக்குமே இது முக்கியமானது. ஏனென்றால் கடன்களை வழங்குவதோடு ஒரு கடன் வழங்குனரின் வேலை முடிந்தது. ஆனால் செலவு செய்யும் ஒருவரே அதனை வட்டியுடன் சேர்த்து கட்ட வேண்டும். பொதுவாகவே கிரெடிட் கார்ட் கடன்களுக்கு அதிக வட்டி விகிதங்கள் வசூலிக்கப்படுகின்றன. எனவே, ஒரு கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனத்தின் அடிப்படையில் மட்டும் கிரெடிட் பயன்பாட்டு விகிதத்தை பார்க்காமல், செலவு செய்யும் உங்களுக்கும், அதிக கடன் என்ன விளைவை ஏற்படுத்துகிறது? என்பதைத் தெரிந்து நடந்து கொள்ளுங்கள்.
கடன் பயன்பாட்டு விகிதம் என்பது உங்கள் கடன் கட்டுப்பாட்டைக் காட்டும் ஒரு முக்கியமான எண். குறைந்த கடன் பயன்பாட்டு விகிதத்தை பராமரிப்பது, உங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்துவதோடு, எதிர்காலத்தில் கடன் பெறுவதற்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கும்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications