அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்-ன் அதிரடி உத்தரவின் கீழ் 12 மணிநேரத்திற்குள் அமெரிக்க ராணுவம் வெனிசுலாவை தாக்கி, டெல்டா போர்ஸ் படை வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை நாடு கடத்தி அமெரிக்க சிறையில் அடைத்துள்ளது.
இந்த நிலையில் வெனிசுலா நாட்டின் கச்சா எண்ணெய் வளங்களை மொத்தமாக அமெரிக்கா தலைமையிலான அரசு கைப்பற்றியுள்ளது. மேலும் வெனிசுலாவின் புதிய அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமிக்க அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டாலும், அமெரிக்கா ராணுவம் இன்னும் நாடு திரும்பவில்லை. டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசும் போது வெனிசுலா ஒரு நிலையான அரசிடம் ஒப்படைக்கப்படும் வரையில் அமெரிக்க அரசும், ராணுவமும் வெளியேறாது என தெரிவித்துள்ளார்.

இந்த மாற்றங்கள் வெனிசுலாவுக்கு அமெரிக்க பல ஆண்டுகலாமாக விதிக்கப்பட்டு உள்ள தடைகளை தளர்த்த வாய்ப்புகள் உருவாகியுள்ளது. இதன் மூலம் அந்நாட்டின் எண்ணெய் உற்பத்தி மற்றும் விநியோகத்தை மறுசீரமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது மட்டும் நடந்துவிட்டால் இந்தியாவின் முன்னணி எண்ணெய் நிறுவனங்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ONGC ஆகியவை பெரிதும் பயனடையும் என்று ஜெஃப்ரீஸ் என்ற சர்வதேச நிதி ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் எதிரொலியாக இன்று ரிலையன்ஸ் பங்குகள் தடாலடியாக உயர்ந்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்கு ஏற்படும் நன்மைகள்:
வெனிசுலா கச்சா எண்ணெய்யின் தன்மை மிகவும் கனமானது, அமிலத்தன்மை அதிகமாக கொண்டது. இத்தகைய எண்ணெய்யை சுத்திகரிப்பு செய்ய சுத்திகரிப்பு ஆலைக்கு சில சிறப்பு கட்டமைப்பு அவசியம். அமெரிக்காவில் இருக்கும் பெரும்பாலான சுத்திகரிப்பு ஆலையில் ஹெவி க்ரூட் ஆயில் சுத்திகரிப்பு செய்யக்கூடிய திறன் கொண்டவை. இதற்கு அடுத்தப்படியாக இந்தியாவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-யிடம் இத்தகைய வசதிகள் உள்ளது.
பொதுவாக உலகளவில் ஹெவி க்ரூட் ஆயில் வாங்குவோர் எண்ணிக்கை குறைவு, இத்தகைய சூழ்நிலையில் அமெரிக்கா வெனிசுலா கச்சா எண்ணெய் வளங்களை கைப்பற்றியிருக்கும் வேளையில் அதன் உற்பத்தியை அதிகரித்து, விற்பனை செய்வது தான் அமெரிக்க அரசின் முதல்கட்ட பணியாக இருக்கும். இப்படி புதிய Buyer-ஐ தேடும் அமெரிக்கா கச்சா எண்ணெய் விலையை தள்ளுபடியில் கொடுக்க ரெடியாக இருக்கும்.
இதனால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்த எண்ணெய்யை பிரெண்ட் எண்ணெய்யை விட ஒரு பேரலுக்கு 5 முதல் 8 டாலர்கள் வரை தள்ளுபடியில் கிடைக்கும். ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜாம்நகர் சுத்திகரிப்பு வளாகம் இத்தகைய கச்சா எண்ணெய்யை திறம்பட கையாளும் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளதால் வெனிசுலா எண்ணெய் அம்பானிக்கு சாதகமாக அமையும்.
2012ஆம் ஆண்டே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், வெனிசுலாவின் PDVSA நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, ரிலையன்ஸ்-ன் தினசரி தேவையில் சுமார் 20 சதவீதத்தை பெற்று வந்தது. ஆனால், 2019இல் அமெரிக்க தடைகள் கடுமையானதால் அந்த ஒப்பந்தம் நிறுத்தப்பட்டது.
இப்போது, அமெரிக்க அரசு வெனிசுலா எண்ணெய்யை உலக நாடுகளுக்கு விற்க அனுமதிக்கும் என்று கூறியுள்ளது. இதனால், ரிலையன்ஸ் நிறுவனத்தின் சுத்திகரிப்பு லாபங்கள் அதிகரிக்கும், பணப்புழக்கம் வலுப்பெறும். இது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-க்கு 2வது ஜாக்பாட், கடந்த வாரம் தான் அமெரிக்க அரசு ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்கு ஒரு மாத கால அவகாசம் கொடுத்தது.
இதன் எதிரொலியாக இன்று காலை வர்த்தகத்தில் 1 சதவீதம் வரையில் உயர்ந்து காணப்பட்டது, 1593 ரூபாய்க்கு துவங்கி, 1611 ரூபாய் வரையில் உயர்ந்தது. 11.45 மணியளவில் வெறும் 0.16 சதவீதம் மட்டும் உயர்ந்து 1595 ரூபாயாக உள்ளது.
ONGC நிறுவனத்தின் பண பாக்கி
ONGC நிறுவனத்திற்கு வெனிசுலாவின் சான் கிறிஸ்டோபல் எண்ணெய் வயலில் உற்பத்தியிலிருந்து வரவேண்டிய டிவிடெண்ட் தொகை நீண்ட காலமாக வராமல் உள்ளது. இந்த நிலுவை தொகை மட்டும் சுமார் 500 மில்லியன் டாலர்களுக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் Orinoco பெல்ட்டில் உள்ள Carabobo சொத்தின் 11 சதவீத பங்குகளை ONGC வைத்துள்ளது.
பொருளாதார தடைகள், வர்த்தக தடைகள் காரணமாக இந்த பணத்தை ONGC மீட்டெடுக்க முடியாமல் இருந்த நிலையில் தற்போது விடிவகாலம் பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா அரசு தலைமையிலான மறுசீரமைப்பு ஏற்பட்டால், ONGC நிறுவனம் இந்த தொகையை மீட்டெடுக்க முடியும் என நம்பப்படுகிறது.
அமெரிக்காவின் தாக்குதல் மற்றும் கைப்பற்றல் மூலம் வெனிசுலா எண்ணெய் துறையை சர்வதேச சந்தையுடன் மீண்டும் இணைக்கும். இதனால், சர்வதேச கச்சா எண்ணெய் விலைகள் சமநிலை அடையலாம், விநியோக சங்கிலி வலுப்பெறலாம். இந்தியா போன்ற இறக்குமதி சார்ந்த நாடுகளுக்கு இதன் மூலம் குறைவான விலையில் கச்சா எண்ணெய் பெற முடியும். ரிலையன்ஸ் மற்றும் ONGC போன்ற நிறுவனங்கள் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்தி, லாபங்களை அதிகரிக்க முடியும்.
More From GoodReturns

வருமானம் போனாலும் பரவாயில்ல!! டிசிஎஸ் எடுத்த அதிரடி முடிவால் ஆடிப்போன ஊழியர்கள்!!

கொத்து கொத்தாக அமெரிக்கா விட்டு வெளியேறும் இந்தியர்கள்.. நேரா பெங்களூரில் லேண்டிங்.. என்ன காரணம்..?

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

அமெரிக்காவில் புது டிரெண்ட்..! ஷூ, செருப்பு இல்லாமல் ஆபீஸ்.. தெய்வீகமாக இருக்கு பாஸ்..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

AI நீங்க நினைக்கிற மாதிரி 'ஈசி' கிடையாது.. ரொம்ப கஷ்டம்.. உண்மையை உடைத்த விப்ரோ COO சஞ்சீவ்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் விலை ஏறினாலும், இறங்கினாலும் கையில் இருக்கும் காசுக்கு தங்கத்தை வாங்கி வைங்க..!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு எச்சரிக்கை..! இத செய்யலனா இலவச அரிசி கிடைக்காது..! உடனே ரேஷன் கடைக்கு போங்க



Click it and Unblock the Notifications