ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பிரிட்டன் நாட்டின் BP கூட்டணியில் இயங்கி வரும் ஜியோ BP சில நாட்களுக்கு முன்பு புதிய டீசல் வகையை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்து, பொதுத்துறை நிறுவனங்களின் விற்பனையகம் அதாவது பெட்ரோல் பங்குகளை விற்பனை செய்யப்படும் டீசல் விலையை காட்டிலும் லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைவாக விற்பனை செய்வதாக அறிவித்தது.
இதை தொடர்ந்து ஜியோ BP-க்கு போட்டியாகவும், பொதுத்துறை பெட்ரோல் பங்குகளில் இருந்து வாடிக்கையாளர்களை ஈர்த்து பெரிய அளவில் வளர வேண்டும் என்ற திட்டத்துடன் இந்தியாவில் ரஷ்ய எண்ணெய் நிறவனமான ராஸ்நெப்ட் நிறுவனத்தின் முதலீட்டில் இயங்கும் நயாரா எனர்ஜி ஒரு படிக்கு மேல் சென்றுள்ளது.

ஜியோ BP நிறுவனம் அரசுக்கு சொந்தமான சில்லறை விற்பனையாளர்கள் விற்கும் டீசல் மட்டும் தான் 1 ரூபாய் குறைவாக விற்பனனை செய்வதாக அறிவித்தது. ஆனால் நயாரா எனர்ஜி ஒரு படிக்கு மேல் சென்று பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டையும் லிட்டருக்கு 1 ரூபாய் குறைவான விலைக்கு விற்பனை செய்யத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசுக்குச் சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) ஆகியவை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலையைத் 14 மாதங்களாக தொடர்ந்து ஓரே விலையில் விற்பனை செய்து வருகிறது.
இந்திய ரீடைல் எரிபொருள் வர்த்தக சந்தையில் ஆதிக்கம் ஐஓசி, பிபிசிஎல், எச்பிசிஎல் நிறுவனங்கள் கூடுதல் லாபத்தை பார்க்க வேண்டும், அரசுக்கு கூடுதல் வரி வருமானம் அளிக்க வேண்டும் என்பதற்காக கச்சா எண்ணெய் விலை குறைந்தும் அதே விலையில் விற்பனை செய்து வந்தது.
பொறுத்திருந்து பார்த்த தனியார் நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அரசின் வாடிக்கையாளர்கள், வர்த்தகம், வருமானத்தை ஒரு ரூபாய் தள்ளுபடி மூலம் சுறண்ட துவங்கியுள்ளது. இனியாவது மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச கச்சா எண்ணெய் சந்தை விலைக்கு ஏற்ப குறைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. குறைக்கவில்லை எனில் இந்த துறையிலும் தனியார் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலை துவங்கும்.

ஜியோ BP, நயாரா எனர்ஜி ஆகியவை ரஷ்யாவில் இருந்து நேரடியாக தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்-ஐ வாங்கி வரும் வேளையில் இந்த விலை வித்தியாசத்தை பயன்படுத்து பொதுத்துறை நிறுவனங்களை காட்டிலும் ஒரு ரூபாய்க்கு குறைவான விலையில் விற்பனை செய்யும் நிலைக்கு வருகிறது.
இந்தியாவில் இருக்கும் 86,925 பெட்ரோல் பங்க்-களில் சுமார் 7 சதவீதத்திற்கும் மேலான பங்க்-களில் வைத்திருக்கிறது நயாரா எனர்ஜி. இதில் Reliance BP Mobility Ltd நிறுவனம் சுமார் 1574 பெட்ரோல் பங்க்-களை வைத்துள்ளது, நயாரா எனர்ஜி 6376 பெட்ரோல் பங்க்-களை வைத்துள்ளது.
More From GoodReturns

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

நிர்மலா சீதாராமன் எடுத்த 10 ரூபாய் முடிவு.. அடுத்தடுத்து சிக்கல் காத்திருக்கு.. என்னதான் தீர்வு?

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

அதிகரிக்கும் பெட்ரோல் தட்டுப்பாடு: இலவச பேருந்துகளை அறிவித்த நாடு!! நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications