மருந்து வாங்க பணமில்லை என்ற ஏழையின் அழுகுரலுக்கும், உயிரை காக்க லட்சங்கள் வேண்டுமே என்ற நடுத்தர வர்க்கத்தின் தவிப்புக்கும் மருந்தாக வந்துள்ளது மத்திய பட்ஜெட் 2026. இன்று புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய் என்பது வெறும் நோயல்ல, அது ஒரு குடும்பத்தின் பொருளாதாரத்தையே வேரோடு சாய்க்கும் பெரும் சுமை. இந்த வலியை உணர்ந்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான பயோபார்மா சக்தி திட்டத்தை அறிவித்துள்ளார்.
இனி உயிர் காக்கும் மருந்துகள் இறக்குமதி செய்யப்படுவதற்கு காத்திருக்க வேண்டியதில்லை. அவை நம் நாட்டிலேயே தயாராகும். 1,000 புதிய ஆய்வு மையங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மூலம், நவீன மருத்துவ சிகிச்சைகள் கடைக்கோடி மனிதனுக்கும் எட்டும் தூரத்தில் கிடைக்கப் போகிறது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இது வெறும் நிதி ஒதுக்கீடு அல்ல, நோயுடன் போராடும் ஒவ்வொரு இந்தியனுக்கும் அரசு அளிக்கும் வாக்குறுதி. நாங்கள் இருக்கிறோம் என்ற நம்பிக்கை. மருத்துவ துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்த போகும் இந்த அறிவிப்பு குறித்து விரிவாக பார்ப்போம்.

மருத்துவ துறையில் தற்சார்பு இந்தியா!
2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவை உலகளாவிய மருத்துவ மையமாக மாற்றும் நோக்கில் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
பயோபார்மா சக்தி (Biopharma Shakti)
இந்தியாவின் மருந்து தயாரிப்பு துறையில், குறிப்பாக உயிரியல் சார்ந்த மருந்துகளின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க, பயோபார்மா சக்தி என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்திற்காக 10,000 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் புற்றுநோய், நீரிழிவு மற்றும் ஆட்டோ-இம்யூன் நோய்களுக்கான விலையுயர்ந்த உயிர்-மருந்துகளை, இந்தியாவிலேயே மலிவாக தயாரிப்பதற்கான ஒரு சூழலை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பான CDSCO-வை நவீனப்படுத்தவும், அதன் கண்காணிப்பு மற்றும் செயற்பாட்டுத் திறனை அதிகரிக்கவும் மனித வளம் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மேற்கொண்டு இந்திய மருந்துகளின் தரத்தை மேம்படுத்த உதவிகரமாகவும் இருக்கும்.
தற்சார்பு இந்தியா!
மருத்துவ தொழில்நுட்பங்கள் மற்றும் மருந்து தயாரிப்பில் வெளிநாடுகளை சார்ந்திருப்பதை முற்றிலுமாக குறைத்து, இந்தியாவை தற்சார்பு நாடாக மாற்றுவதே இந்த பட்ஜெட்டின் அடிப்படை இலக்காகவும் கொண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட் வெறும் நிதி ஒதுக்கீடு மட்டுமல்ல, இது இந்தியாவை தொழில்முறை சார்ந்த, ஆரோக்கியமான மற்றும் பொருளாதார ரீதியாக வலுவான நாடாக மாற்றும் தொலைநோக்கு பார்வையாகும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications